
வானதி ப்ளாக்ல
குஸ்-குஸ் உப்புமா ரெசிப்பி பார்த்ததில் இருந்து தேடி,
குஸ்-குஸ்-ஐ ஒரு வழியா கண்டு பிடித்துட்டேன். முதல் முறை சாதாரண ரவா உப்புமா செய்வது போல செய்தேன்.ரொம்ப நல்லா இருந்தது. இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை, 'இன்று நான் சமைக்கிறேன், ஆனா உன் ப்ளாக்-ல நான் சமைத்த டிஷ் இதுன்னு போடணும்'னு என்கிட்டே உத்தரவாதம் வாங்கிட்டு என் கணவர் தானா கிச்சனுக்கு வந்தாரு(என் சமையல சாப்ட்டு நொந்து போய்த்தான் வந்தாருன்னு சரியா தப்பா நினைச்சுடாதீங்க..கர்ர்ர்..ர்ர்!)
வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து குஸ்-குஸ் உப்புமா செய்வதாதான் ப்ளான்..ஒரு ஹெல்ப்பா இருக்குமேன்னு,கேரட் பீன்ஸ் நறுக்கி, மைக்ரோவேவ்ல வைச்சுட்டேன்..அப்புறம் கிச்சனுக்கு வந்தவர், "என்னது இது? இப்படிப் பொடிப்பொடியா நறுக்கிருக்கே?"ன்னாரு..சரி, உங்க விருப்பம் போல செய்யுங்கன்னு நான் வந்துட்டேன். (அப்படியும் வர முடியுதுங்கறீங்க? இது எங்க இருக்கு..அது எங்க இருக்குன்னு நம்மள ஒரு நிமிஷம் உக்கார விட மாட்டாரு:) )
ஸ்டெப்-பை-ஸ்டெப் போட்டோ எடுக்கறதுன்னா, ஓடிப் போய் கார்ல இருக்க(!!) கேமராவை எடுத்துட்டு வந்துடு...சீக்கிரம்' -னு என்னை ஒரு நடை பார்க்கிங் லாட்டுக்கு நடக்கவைத்தார்.
சரி வாங்க..அவர் என்ன சொல்றாருன்னு அவர் வார்த்தைகள்லையே கேட்போம்.
முன் குறிப்பு
அதுல பாருங்க,
அவருக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு அதிகம்..
அங்கங்கே காமெடி தலை காட்டும்..
சிரிச்சுட்டே படித்து,
மறக்காம செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க..
உங்க ரெசிப்பிக்கு இவ்ளோ கமெண்ட் வந்திருக்குன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாரு எங்காளு.:) :)
தேவையான பொருட்கள் குஸ்-குஸ் -1 1 /4 கப்
கேரட்-1
பீன்ஸ்-5
மஞ்சள் குடைமிளகாய்-1
மஷ்ரூம்(portabella )-பாதி
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-5
பூண்டு- 2 பல்லு
காய்களை துண்டு துண்டா நறுக்கக் கூடாது, பெருசு-பெருசா நறுக்கணும்..அப்பத்தான் கடிச்சு சாப்பிட ஈசியா இருக்கும்.
பச்சைப் பட்டாணி-ஒரு கைப்பிடி
கொத்தமல்லி இலை
முழு சீரகம்-1ஸ்பூன்
குறுமிளகு-நாலஞ்சு (ஆக்ச்சுவலி,அவர் சேர்த்தது அரை ஸ்பூன் பெப்பர் பவுடர்..இப்போ போட்டோ பார்க்கும் போதுதான் நானே கவனித்தேன். :) )
மல்லித்தூள்(!)-1 1 /2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2ஸ்பூன்
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
பிரியாணி மசாலா(!??!!) - எவ்வளவுன்னு சொல்ல மாட்டேன்னுட்டாரு..அது அவரோட சீக்ரெட் இன்க்ரிடியன்ட்டாம்!
இதயம் நல்லெண்ணெய்- சுமாரா மூணு ஸ்பூன் அல்லது,அதைவிடக் குறைவு.(சும்மா கண்ணுல காமிக்கணும்,நெறைய ஊத்தக் கூடாது)
உப்பு
செய்முறை எப்படின்னெல்லாம் சொல்ல மாட்டாராம்..நீ பாத்துட்டு தானே இருந்தே,நீயே எழுதுன்னு சொல்லிட்டாரு..நீங்களே சொன்னா உடனே போஸ்ட் பண்ணிடுவேன்.நானா எழுதி பண்ணனும்னா நாளாகும்னு ப்ளாக்மெய்ல் பண்ணி(!!) அவரையே சொல்ல வைச்சுட்டேன்.
செய்முறைஒரு கலனில்(ஊஹும்..சிரிக்கக் கூடாது,சிரிக்காம படிங்க) ரெண்டரை கப் தண்ணீரை கொதிக்கவைத்து,அதில் குஸ்-குஸ் -ஐப் போடணும்,ஆனா உப்பு போடக்கூடாது.
குஸ் குஸ் மூணு நிமிடங்களில் வெந்துவிடும்..அதை தனியாக இறக்கி வைத்து விட வேண்டும்.
~~
இன்னொரு அகலமான வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கடினமான காய்கறிகள்(கேரட்,வெங்காயம்,பச்
சைமிளகாய்,பீன்ஸ்,பச்சைப் பட்டாணி) போட்டு, மேலே குறிப்பிட்டுள்ள பொடிகள்,மிளகு-சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, கொள்கலனின் (இங்கேயும் சிரிக்கக் கூடாது..ப்ளஸ் டூ-ல கெமிஸ்ட்ரி ரெக்கார்ட் எழுதின ஞாபகம் போல...அமைதியா படிங்க! ) மூடியை இறுக்கமாக மூடி ஆவியில் வேக வைக்கவேண்டும்.
~~
காய்கள் முக்கால் பாகம் வெந்தவுடன், மிருதுவான(எ.கொ.ச.இ? இப்பூடி தமிழ் துள்ளி விளையாடுதே..எங்க மாமியார் படித்தால், 'ஈன்ற பொழுதின் பெரிதுவந்தேன்னு' சொல்லிடுவாங்க..அவங்க தமிழ் ஆசிரியை:) ) காய்கறிகள்(மஷ்ரூம்,மஞ்சள் குடை மிளகாய்) சேர்க்கவும். சேர்த்த பின்னால் தண்ணீர் வற்றும் வரை மிதமானதீயில் வதக்கவும்.அதன் பிறகு இதயம் நல்லெண்ணெய் (இதயத்துக்கு நல்லது) மூன்று தேக்கரண்டி எடுத்து ஸ்ப்ரிங்கிள்(?!) செய்யவும்.
காய்கறிகளுடன் குஸ்-குஸ்-ஐ சேர்த்து, அடுப்பை குறைந்த தணலில் வைத்து மெதுவாக,மிதமாக, கிண்டவும்.
அலங்காரம் செய்வதற்காக(!!?) கொத்துமல்லி தழைகளைத் தூவி மறுபடியும் கிளறவும்.சுவையான,ஆரோக்கியமான வெஜிடபிள் குஸ்-குஸ் இப்பொழுது தயாராகிவிட்டது.
இதனுடன், தயிர்,ஊறுகாய்,சால்சா(இது கடையில வாங்கக் கூடாது , வீட்டுலே பிரெஷ்-ஆ பண்ணனும்) சேர்த்து பரிமாறவும்.
~~
அப்பாடி..ஒரு வழியா வெற்றிகரமா பப்ளிஷ் பண்ணிட்டேன்! எனக்கு டைப் பண்ணும்போதே சிரித்து சிரித்து வயித்து வலி வந்துடுச்சு. :)))))
வெஜிடபிள் குஸ்-குஸ் நல்லா டேஸ்ட்டா இருந்தது.தயிர்,சால்சா,ஊறுகாய் இதெல்லாம் தேவைப்படலை..அப்படியே:) சாப்ட்டுட்டேன்.யம்ம்!
இருங்க,எங்கே ஓடறீங்க? டிசர்ட் சாப்ட்டுட்டு போங்க..ஸ்லைஸ்ட் ஏப்ரிகாட்&ஸ்ட்ராபெரி, கொஞ்சம் கோல்ட் மில்க்ல ஊறவைச்சு, கொஞ்சம் ஹனி ஸ்ப்ரின்க்கிள் செய்து, மேலால லைட்டா கொஞ்சம் சர்க்கரை தூவி சாப்ட்டா....
எப்படி இருக்கு?? சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க!