Sunday, May 23, 2010

பச்சைப்பயறு-கீரை கடைசல்

எங்க வீட்டுப்பக்கம் "என்ன சமையல்?"ங்கற கேள்விக்கு, 'பருப்பு கடைஞ்சிருக்கேன்..
பச்சைப்பயறு/கொள்ளு/தட்டைப்பயறு கடைஞ்சிருக்கேன்..பருப்புக்குள்ள கீரை போட்டு கடைஞ்சிருக்கேன்' இது போன்ற பதில்கள் ரொம்ப சாதாரணமா கேட்கலாம்.
இந்த பருப்பு கடையறதில ரெண்டு வகை இருக்குங்க..

பச்சை செலவு
பருப்பு அல்லது தானியத்தோடு கூடவே வெங்காயம்,மிளகாய்,தக்காளி,சீரகம்,கொத்துமல்லி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து வேகவைத்து கடைவதுக்கு பேருதான் பச்சை செலவு போட்டு கடையறது..
மிளகாய் வேகவைத்து கொட்டி
பருப்பை தனியா வேக வைத்துக்கொண்டு மற்ற பொருட்களை எண்ணெயில் வதக்கி வேகவைத்த பருப்போடு சேர்த்து கடையரதுக்கு 'மொளகா வேவிச்சுக் கொட்டி கடையறது'ன்னு சொல்லுவாங்க.

வெறும் பருப்பு வகைகளை மட்டும் கடைவதோடு இல்லாமல் அந்தந்த நேரத்தில் கிடைக்கும் முளைக்கீரை,தண்டுக்கீரை,முருங்கைக் கீரை இப்படி கீரைகளையும் சேர்த்துக் கடைவதும் உண்டு. பச்சைப்பயறுடன் ஸ்பினாச் சேர்த்து, மொளகா வேவிச்சுக் கொட்டி:) கடைந்ததுதான் இது..

தேவையான பொருட்கள்
பச்சைப் பயறு -1/4கப்
ஸ்பினாச்-1/2கட்டு
தக்காளி-1
சின்ன வெங்காயம்- 10
பச்சை மிளகாய்-4 (அ)காரத்துக்கேற்ப
சீரகம்-1/2ஸ்பூன்
கொத்துமல்லி விதை-3/4ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை

பச்சைப்பையறை வாசம் வரும் வரை வறுத்து, மஞ்சள்தூள், சில துளிகள் எண்ணெய் இவற்றுடன் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
கீரையைக் கழுவி, இலைகளை மட்டும் நறுக்கிக் கொள்ளவும்.(தண்டுகள் இளசாக இருந்தால் தண்டுடன் சேர்க்கலாம்..இல்லையெனில் இலைகள் மட்டும் சேர்க்கவும்)
வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, சீரகம்,கொத்துமல்லி தாளித்து,வெங்காயம்,மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய கீரையைச் சேர்த்து வதக்கி, அரை டம்ளர் நீர் ஊற்றி வேக விடவும்.
கீரை வெந்ததும் வேக வைத்த பச்சைப்பையறை சேர்த்து ஒரு கொதி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, தேவையான உப்பு சேர்த்து மத்தால் கடையவும் (அ)கரண்டியால் நன்றாக மசித்து விடவும்.
சத்தான பச்சைப்பயறு-ஸ்பினாச் கடைசல் தயார்..சுடு சாதம்-நெய்-மோர்மிளகாயுடன் சாப்பிட சுவையாய் இருக்கும்.

இதேபோல துவரம்பருப்புடனும் ஸ்பினாச் சேர்த்து கடையலாம்.

9 comments:

  1. Keerai recipe super! Very healthy recipe and luks gr8!

    ReplyDelete
  2. Super o super keerai kadasal. enga veetile naalaikku idhu thaan dish. Would love to have this with garam rotis. Thanks for sharing a wonderful recipe.

    ReplyDelete
  3. கீரை கடைசல் அருமை,அதையொட்டிய தகவலும் புதுசு.

    ReplyDelete
  4. பச்சை செலவு...மிளகாய் கொட்டி கடைசல்..புதிய பெயர்...ஊருக்கு ஊர் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க போல்...பருப்பு கீரை கடைசல் சூப்பர்ப்...

    ReplyDelete
  5. மகி, பார்க்க நல்லா இருக்கு. எனக்கு இங்கு வந்த பின் இந்த பச்சைப்பயறு கண்டாலே வெறுப்பாக வரும். ஏதோ ஒரு வித வாடை. சமைக்கும் போது வாழ்க்கையே வெறுத்து விடும்.

    ReplyDelete
  6. superb healthy recipe Dear..paruppu selavu..milagai kotti kadaisal..ellamey pudusa irukku..

    ReplyDelete
  7. கீரை கடைசல் சூப்பர்ர்!! அதற்க்கு நீங்க கொடுத்த தகவல்களும் புதுசு...

    ReplyDelete
  8. பதிவிட்டவுடனே கருத்து தெரிவித்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றிங்க பிரேமா!
    சிட்சாட்,செய்துட்டீங்களா பச்சைப்பயறு-கீரை? எப்படி இருந்தது?
    நன்றி வேணி!
    ஆசியாக்கா இதெல்லாம் எங்க வீடுகள்-ல வழக்கம்..உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. :)
    /ஊருக்கு ஊர் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க போல்./ வீட்டுக்கு வீடே வித்தியாசப்படலாம் கீதா!அதான் உஷாரா 'எங்க ஊர்ப்பக்கம்'-னு சொல்லாம எங்க வீட்டு பழக்கம்-னு சொல்லிருக்கேன். :)
    அப்படியா வானதி? அப்போ சிரமம் தாங்க! இதுவரை நான் வாங்கிய பச்சைப்பயறு நன்றாகவே இருக்கு..ஏஷியன் ஸ்டோர்ல வாங்கிப் பாருங்க..
    நிது,இதெல்லாம் எழுதும்போது ஊர்ல இருக்கிற மாதிரி ஒரு பீலிங் வரும் எனக்கு..அதான் விடாம கண்டபடி:) எழுதிட்டே இருக்கேன்.
    மேனகா அப்பப்ப புது தகவல்களை பகிர்ந்துக்கறேன்(விடாது கருப்பு -ரேஞ்சுல!! :) )
    நேரத்தை ஒதுக்கி கருத்துக் கூறிய அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் என் நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails