
தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் ப்ளோர்(அ) மைதா மாவு - 1 கப்(120 கிராம்)
சர்க்கரை - 1 /4 கப் (~~ 35 கிராம்)
ஏலக்காய்-2
ஸ்லைஸ்ட் ஆல்மண்ட்-1 /4 கப் (~~35 கிராம்)
(உப்பில்லாத)வெண்ணெய்- 3 /4 ஸ்டிக் ( ~~ 6 டேபிள்ஸ்பூன்/ 85 கிராம்)
பேக்கிங் பவுடர் - 1 /4 டீஸ்பூன்
செய்முறை
கால் கப் சர்க்கரையுடன் ஏலக்காயை சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
வெண்ணெயை இரண்டு மணி நேரம் முன்பாக ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
வெண்ணெயுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து எலக்ட்ரிக் மிக்சரால் கலக்கவும்.
அத்துடன் பொடித்த சர்க்கரை+ஏலக்காய் கலவையை சேர்த்து கலக்கவும்.
சர்க்கரை கரைந்ததும், ஒரு கப் மாவை அத்துடன் சேர்த்து விரல்களால் கலந்துகொள்ளவும்.
இறுதியாக ஆல்மண்ட் ஸ்லைஸ்களை சேர்த்து கலந்து கொள்ளவும்.
விருப்பமான வடிவத்தில் குக்கியை செய்து பேக்கிங் ட்ரேயில் சிறிது இடைவெளி விட்டு அடுக்கவும். ட்ரேயை பத்து நிமிடங்கள் ப்ரீசரில் வைக்கவும்.
350 F ப்ரீ ஹீட் கன்வென்ஷனல் அவன்-ல் பேக் செய்யவும்..சுமார் பதினான்கு நிமிடம் கழித்து குக்கீ சீட்டை அவன்-லிருந்து வெளியே எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
சுவையான ஆல்மண்ட் குக்கீ தயார்.
டீ/காபியுடன் பரிமாறலாம்..அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்!:) :) :)
குறிப்பு
ஸ்லைஸ்ட் ஆல்மண்ட் கிடைக்கவில்லை என்றால் முழு பாதாமை ஒன்றிரண்டாக பொடித்து உபயோகிக்கலாம்.
பதினான்கு நிமிடம் பேக் செய்தால் இதே போன்று வெண்மை நிற குக்கீ கிடைக்கும்..இன்னும் பொன்னிறமாய்,க்ரிஸ்ப்பாக வேண்டுமெனில் இன்னும் சிறிது (4 - 5 ) நிமிடங்கள் பேக் செய்யவும்.
super mahi!!
ReplyDeletelooks yummy...awesome recipe. classic photos Mahi
ReplyDeleteyummy cookies Mahi..picture is so good..
ReplyDeleteமகி, தமிழ் குடும்பத்தில் பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கு. அழகான படங்கள்.
ReplyDeleteLooks very much...SO nice...and tempting...
ReplyDeleteVery nice looking cookies.
ReplyDeleteமேனகா,வேணி,நிது..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDeleteவானதி,கீதா,சிட்சாட்..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!