Monday, November 29, 2010

ரசித்து ருசித்தவை-3

வெகுநாட்களாக தவணையாக இருந்த இந்த ரசித்து ருசித்த உணவுவகைகளை இன்று வெற்றிகரமாக வெளியிட்டுவிட்டேன்.

முடிந்த அளவு ஸ்டெப்-பை-ஸ்டெப் போட்டோ எடுத்தேன்,எல்லாப் படங்களையும் ஒரே பதிவில் போடுவதைவிட, ஸ்லைட்ஷோ-வாகப் போட்டுவிடலாம் என்று முயற்சித்திருக்கேன்,தயவுசெய்து பொறுமையாக எல்லா படங்களையும் பாருங்க.:)

ராக்ஸ் கிச்சனிலிருந்து, பூசணிக்காய் ரசவாங்கி. ஆசியா அக்காவின் சமைத்து அசத்தலாமில் இருந்து காலிப்ளவர்-உருளைகிழங்கு சப்ஜி,மஷ்ரூம்-டோ-ப்யாஸா.


ரசவாங்கி-கத்தரிக்காய் காரக்குழம்பு,பாகற்காய் பிட்லை இப்படி பெயர்களெல்லாம் எங்க வீட்டு சமையலில் இல்லை..முன்பெல்லாம் என் அம்மா எழுத்தாளர் லக்ஷ்மி அவர்களின் நாவல்கள் விரும்பி படிப்பாங்க..அதிலே இதுபோன்ற பெயர்களெல்லாம் வரும்..இதெல்லாம் எப்படி செய்வாங்கன்னு ரெசிப்பியும் தந்தா நல்லா இருக்கும் என்று அம்மா சொல்லுவதைக் கேட்ட நினைவு இருக்கு..இப்பொழுதுதான் அதெல்லாம் என்னன்னு ஒரு ஐடியா கிடைக்குது!
நன்றி ராஜி!

ஆசியாக்கா ரெசிப்பி எப்பவுமே எங்க வீட்டுல சூப்பர் ஹிட்டுதான்.:) காலிப்ளவர்-உருளை சப்ஜி அவசரத்துக்கு ஈஸியா செய்துடலாம்..மஷ்ரூம் டோ ப்யாஸா சுவை மிகவும் அருமையாக இருந்தது.இந்த வாரம் மறுபடியும் மஷ்ரூம் வாங்கிவந்திருக்கேன்.
நன்றி ஆசியாக்கா!

~~~~~~~~~~~~~~


மேனகாவின் சஷிகாவிலிருந்து அரிசி-ரவா உப்புமா,சமையல் அட்டகாசங்கள் ஜலீலா அக்காவின் கோதுமை மாவு பரோட்டா.




மேனகா அரிசி ரவை உப்புமா போஸ்ட் பண்ணதுமே எனக்கு ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்..மெனக்கெட்டு செய்யும் அத்தனை வேலைக்கும் ருசி உத்தரவாதம்னு சொன்னதும்,சரி செய்துதான் பார்ப்போமேன்னு செய்துபார்த்தேன். கரெக்ட்டா சொல்லிருக்காங்க.சூப்பரா இருந்தது. நான் பச்சரிசி உபயோகிக்காததால் லோக்கல் மார்க்கட் லாங்-க்ரெய்ன் அரிசில செய்தேன். சோனாமசூரில செய்திருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்னு நினைக்கிறேன்.
நன்றி மேனகா!

ஜலீலாக்கா செய்யும் பரோட்டா-முர்தபா-ஸ்டஃப்ட் சப்பாத்தி வகைகள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்..ஒருநாள் கோதுமை மாவு பரோட்டா கண்ணில் பட்டது..அன்றைக்குன்னு சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்திருந்தேன்,சரி முயற்சித்து பார்ப்போமேன்னு செய்தேன். நன்றாக வந்தது.
நன்றி ஜலீலாக்கா!

சுவையான குறிப்புகளை பகிர்ந்த மூவருக்கும் நன்றி!!!

Tuesday, November 23, 2010

காரக்கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தியெல்லாம் முடிந்து பலநாள் கழித்து இப்ப என்ன கொழுக்கட்டை ரெசிப்பின்னு பார்க்கறீங்களா? காரணம் கடைசியிலே சொல்லிருக்கேன்.:)
தேவையான பொருட்கள்
அரிசிமாவு-11/2கப்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3(காரத்துக்கேற்ப)
சிறிதாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள்-1/4கப்
சிறிய கேரட்-1(விரும்பினால்)
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
கடுகு-1/2ஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு-தலா ஒரு ஸ்பூன்
தேங்காயெண்ணெய்-1ஸ்பூன்
சமையல் எண்ணெய்-1ஸ்பூன்
தண்ணீர்-3/4கப்
உப்பு

செய்முறை
வெங்காயம்-மிளகாய்,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.கேரட்டை காய்துருவியில் துருவிக்கொள்ளவும்.

கடாயில் சமையல் எண்ணெயை காயவைத்து, கடுகு-உ.பருப்பு-க.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பாதி வதங்கியதும் துருவிய கேரட்(ஒரு கைப்பிடி பச்சைப்பட்டாணி மற்றும் விரும்பிய காய்களை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்)சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி,தேங்காய்த்துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கி ஆறவைக்கவும்.
வதக்கி ஆறவைத்ததுடன் அரிசிமாவை சேர்த்து கலந்துகொள்ளவும்.
3/4கப் தண்ணீருடன் மீதி உப்பு-1ஸ்பூன் தேங்காயெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்றாக கொதிவந்தவுடன் மாவுக்கலவையுடன் தண்ணீரை சேர்த்து ஸ்பூனால் நன்றாக கிளறி,பத்துநிமிடங்கள் மூடிவைத்துவிடவும்.
மாவு சற்றே ஆறியதும், சப்பாத்திமாவு பதத்துக்கு பிசையவும்.
பிசைந்த மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து
7-8 நிமிடங்கள் வேகவிடவும்.
சுவையான கொழுக்கட்டை ரெடி.இதிலே இந்த தேங்காய்த்துண்டுகள் ரொம்ப ருசியா இருக்கும்..செய்து சாப்பிட்டுப் பாருங்க.
(முன்குறிப்பாக வந்திருக்கவேண்டிய:))பின்குறிப்பு
எங்க வீட்டில் கொழுக்கட்டை புழுங்கல் அரிசியை ஊறவைத்து அரைத்து, வதக்கியவெங்காயம்-மிளகாய் கலவையுடன் அரைத்தமாவை சேர்த்து வதக்கி,ஆறவைத்து,கொழுக்கட்டைகளாகப் பிடித்து வேகவைப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை ஊறவைத்து அரைக்க நேரமில்லாத காரணத்தால் இப்படி ரெடிமேட் அரிசிமாவில் செய்துபார்த்தேன்.நன்றாக இருந்தது.

அது ஏன் அரிசியை ஊறவைத்து அரைக்க நேரமில்லாம போனது என்றால்,ஒரு நாள் ஈவினிங்,டீ-டைம் ஸ்னாக்ஸுக்காக பச்சைப்பயறு சுண்டல் செய்திருந்தேன்..வழக்கம்போல என் கணவர் டின்னர் டைமுக்குதான் வீட்டுக்கு வந்தார்."சுண்டலும் கொழுக்கட்டையும்தானே காம்பினேஷன்,நீ ஏன் சுண்டல் மட்டும் செய்திருக்கே? கொழுக்கட்டையும் செய்,டின்னராவே சாப்பிட்டுடலாம்"என்று சொன்னார்..அவர் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?;) கொழுக்கட்டை செய்தாச்சு.

இந்த பச்சைப்பயறு சுண்டல் இருக்கே..அதுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தங்க..ஒரு நாளாவது சரியான பக்குவத்தில வேகவைக்க நினைக்கறேன்,நடக்க மாட்டேன்னுது..நிறைய பேர்கிட்ட டிப்ஸ் எல்லாம் வாங்கி வேகவைத்து பார்க்கிறேன்..ம்ஹும்! காஷியஸா 3 விசில்ல இறக்கி, குளிர்ந்த நீர் ஊற்றி ப்ரெஷரை போகவைத்து திறந்தா பயிறு முழுசு முழுசா முழிச்சிட்டு நிக்கும்..வெறுத்துப்போயி திருப்பி ஒரு விசில் வைச்சா,மசியலா ஆகிருக்கும்! ஊறவைத்து வேகவைத்துப் பார்த்துட்டேன்,வறுத்து வேகவைத்துப்பார்த்துட்டேன்,இன்னும் அந்த டெக்னிக்(!!??) புடிபடமாட்டேங்குது.

இந்த முறையும் அதே கதைதான்..முதநாள் வேகவச்சு,டென்ஷனாகி குக்கரோட ப்ரிட்ஜ்ல எடுத்து வச்சுட்டேன். அடுத்த நாள் பார்த்தப்ப குளிர்ல இறுகி கொஞ்சம் முழுபயிறா தெரிந்ததால் எடுத்து தாளிச்சா..அப்பவும் பழைய மாதிரியே ஆகிட்டது.பச்சைப்பயிறு ஷேப் இல்லைன்னாலும், டேஸ்ட் சூப்பரா இருந்தது. கேரட்,ஓமப்பொடி எல்லாம் போட்டு டெகரேட் பண்ணி சமாளிச்சுட்டம்ல? ஹிஹி!
ஹலோ..ஓடாதீங்க,நில்லுங்க!கொஞ்சம் சுண்டல் சாப்ட்டுட்டு போங்க..சாப்பிட்ட இரண்டு ஜீவன்களுமே(நாங்கதான்) நல்லா இருக்கு, நீங்களும் தைரியமா சாப்பிடலாம்..ஹலோ...ஹலோஓஓஓ!!!...:))))))))))

Friday, November 19, 2010

இன்றைய விருந்தினர்...

இன்று நாம் சந்திக்கப்போவது அழகான அணில்பிள்ளைகளை..சமீபத்தில் ஒருமுறை கடற்கரைக்கு சென்றபொழுது அவர்களைச் சந்தித்தேன்.மனித நடமாட்டத்துக்கெல்லாம் நன்றாகப் பழகியிருக்கிறார்கள் இங்கே இருக்கும் அணில்பிள்ளைகள். அழகாக போஸ் கொடுத்தாங்க..இங்கே பாருங்க,எப்படி அட்டென்ஷன்ல நிக்கிறார் என்று..

அவர் நேராகவேதான் நின்னுட்டு இருந்தார்,நான் சைட்ல வந்து போட்டோ எடுத்தேன்.. :)

இப்ப கூட ஜோடியும் சேர்ந்துகொண்டது..எதையோ சுவைத்து சுவைத்து சாப்பிடுகிறார்..
இது அதே கடலின் கரையில் இன்னொரு இடத்தில் சந்தித்த ஆட்கள்..இவரும் ஏதோ மும்முரமாக மன்ச் பண்ணிட்டு இருக்கார்..
என்னதான் சாப்பிடறாங்கன்னு உத்துப் பார்த்தா...அது வேற ஒண்ணுமில்லங்க,வைல்ட் அனிமல்ஸ்க்கு உணவு தராதீர்கள் என்று ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் போர்டுகளை கண்டுக்காம, மக்கள் வாரி வழங்கும் பாப்கார்ன்-ப்ரெட் இப்படிப்பட்ட உணவுகளை அணில்பிள்ளைகளும் சாப்பிட்டுப் பழகிட்டாங்க..அடடா,நான் பார்த்துட்டே இருந்ததுல கவனம் சிதறி ப்ரெட் துண்டை மண்ணுல விழுக்காட்டிட்டார்!

அதனால என்ன? அழகா கையிலெடுத்து ஊதி,ஊதி சாப்பிடலாமேன்னு சாப்பிடறார். இன்னும் கொஞ்சம் போனா எனக்கு BK பர்கர் வேணும்,ஹேப்பி மீல் வேணும், கே.எப்.ஸி.பிஸ்கட் வேணும் என்று அவர்களே கேட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல!! :)

என் தொந்தரவு தாங்காம,ஒதுக்குப்புறமா போயி சாப்பிட ஆரம்பிச்சிட்டார்.போனா போகட்டும்,இத்தோட விட்டுடலாம்,என்ன சொல்றீங்க?
எங்களையும் விட்டுடு,பொழச்சுப் போறோம்னு சொல்லறீங்களா?? :):)
இருங்க,இருங்க..வந்தவங்களை வெறும் கையோட அனுப்ப முடியுமா என்ன? நீங்களும் இதோ இந்த கார்ன் ப்ளேக்ஸ்-க்ரெய்சின் குக்கீஸை சாப்பிடுங்க..
குக்கீ சாப்பிடும் ஆட்கள் ,நல்லா கை நிறைய எடுத்து, (அணில்பிள்ளை அளவுக்கு க்யூட்டா சாப்பிடலைன்னாலும் பரவால்ல :))சாப்பிடுங்க..குக்கீ ரெசிப்பியும் வேணும் என்பவர்கள் இதோ, இங்கே க்ளிக் பண்ணுங்க.

முதல் படத்துக்கும்,இந்த போஸ்டுக்கும் என்ன சம்பந்தம்னா....அணிலை பார்க்கப்போன அன்று ஒரு நண்பர் வீட்டில எடுத்த போட்டோ அது. வழக்கம்போல உங்க டாஷ்போர்டுல கேச்சிங்-ஆ இருக்கட்டுமேன்னு..ஹிஹிஹி!

ஹேப்பி வீகெண்ட்!!

Tuesday, November 16, 2010

காலா ஜாமூன்

தேவையான பொருட்கள்
பால் பவுடர்(non-fat dry milk powder)-11/2கப்
மைதாமாவு(all purpose flour)-1/2கப்
பேக்கிங் சோடா-1/4ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1/4ஸ்பூன்
பால்(half&half milk)-1/4கப்
சிவப்பு ஃபுட் கலர்-3 துளிகள்
சர்க்கரை-11/2கப்
ஏலக்காய்-3
நெய்-1டேபிள்ஸ்பூன்
எண்ணெய்-ஜாமூன்கள் பொரிக்க.

செய்முறை
மைதாவுடன் பேக்கிங்சோடா,பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து வைக்கவும். வெண்ணெயுடன் பால்பவுடரை சேர்த்து பிசைந்து,மைதாவையும் கலந்து அந்த கலவையில் மாவை பிசைந்ததும், சிறிது மாவுடன் சிவப்பு நிறம் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.(குலாப் ஜாமூன் மிக்ஸ் செய்முறையை படங்களுடன் காண இங்கே க்ளிக் செய்யவும்)

2டேபிள்ஸ்பூன் மாவை தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதமுள்ள கலவையில் ஹாஃப்&ஹாப் ஊற்றி பிசைந்து 10 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

தனியே வைத்த மாவுடன் சிவப்பு நிறம் கலந்து,பாலை தெளித்து பிசைந்து மூடிவைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து வெள்ளை மாவில் சிறு உருண்டை எடுத்து, வட்டமாகத்தட்டி, சுண்டைக்காய் அளவு சிவப்பு நிற மாவை ஸ்டஃப் செய்யவும்.
ஸ்டஃப் செய்த மாவை நன்றாக உருட்டி வைக்கவும்.

எண்ணெய்+நெய் காயவைத்து ஜாமூன்களை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். எல்லா ஜாமூன்களையும் பொரித்தபின்னர், மீண்டும் ஒருமுறை எண்ணெயில் போட்டு, நல்ல கருப்பு நிறம் வரும்படி எடுக்கவும்.

ஜாமூன்கள் பொரிக்கும்போதே சர்க்கரையைப் பாகாக காய்ச்சி,ஏலக்காய்த்தூள் போட்டு தயாராக வைக்கவும். பொரித்த காலா ஜாமூன்களை சற்று சூடாக இருக்கும்போதே, இளம் சூடாக இருக்கும் பாகில் ஊறவிடவும்.
இரண்டு-மூன்று மணி நேரங்கள் ஊறியபின்னர், காலாஜாமூன்கள் ரெடி.

குறிப்பு
சர்க்கரைப்பாகு கொதிக்க ஆரம்பித்ததும் 6-7 நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். ஜாமூன்கள் ஊறவைக்கையில் சூடு ஆறியிருந்தால்,லைட்டாக சூடாக்கிக் கொள்ளவும்.

முதல்முறை செய்தபோது பச்சைநிறம் ஸ்டஃப் பண்ணினேன்..அப்போது அதனை சுவைத்த சென்னை நண்பி ஒருவர் சென்னை அடையார் க்ராண்ட் ஸ்வீட்ஸ்ல சிவப்பு நிறம் ஸ்டஃப் பண்ணி செய்வாங்க என்று சொன்னதால், இந்த முறை சிவப்பு! :)
எது நல்லா இருக்கு? பச்சையா,சிவப்பா???

Friday, November 12, 2010

மைக்ரோவேவ் மில்க் பேடா

தீபாவளிக்கு ஈஸியா ஏதாவது ஸ்வீட் செய்யலாம்னு நினைத்துட்டு இருக்கையில் மைக்ரோவேவ் மில்க் பேடா ஞாபகம் வந்தது. முன்பு ஒருமுறை மைக்ரோவேவ் பால்கோவா ஒரு முறை செய்திருக்கிறேன்.இந்த முறை விஜிசத்யாவின் ரெசிப்பியைப் பார்த்து செய்தது. அறுசுவையில் ரெசிப்பியை பார்த்ததும் இவ்ளோ ஈஸியா இருக்கே என்று நினைத்தேன்..செய்தும் பார்த்துவிட்டேன்.:) நன்றி விஜி!

தேவையான பொருட்கள்
மில்க் பவுடர்-1கப்
வெண்ணெய்-1/4கப்
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க்-1கேன்(396கிராம்)

செய்முறை

ஒரு மைக்ரோவேவ் ஸேஃப் பாத்திரத்தில் வெண்ணையை உருக்கிகொண்டு அதனுடன் பால்பவுடர் சேர்த்து கலக்கவும்.அதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்துஎல்லாம் ஒன்றாக சேரும்படி நன்றாக ஸ்பூனால் கலக்கவும்.
மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் வைக்கவும். கலவை சற்றே இறுகியிருக்கும். மீண்டும் ஸ்பூனால் கலந்து,1நிமிடம் மைக்ரோவேவில் வைக்கவும். பால் கலவை நன்றாக இறுகி,உருட்டும் பதத்தில் இருக்கும். சற்றே சூடாக இருக்கும்போதே விருப்பமான வடிவங்கள் செய்யவும்.
கலவை ஆறினால் ஷேப் செய்ய வராது,.துணைக்கு வேணும்னா ஆத்துக்காரரை கூப்ட்டுக்கோங்க.:) சூடாக இருக்கும்போதே கடகடன்னு செய்துடுங்க.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லர்னிங்-டு-குக் அகிலா எனக்கு இன்னொரு விருது குடுத்திருக்காங்க. மிக்க நன்றி அகிலா!
இந்த விருதும் 15 பேருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற கண்டிஷனோடு வந்திருக்கிறது!! இதே அவார்டை தருவதற்கு பதிலாக, புதுசா,ப்ரெஷ்ஷா எங்க ஊரு ரோஜாவுடன்...
ஆசியா அக்கா,ஸாதிகா அக்கா ,விஜி சத்யா,கிருஷ்ணவேணி, ப்ரேமலதா, வானதி,ராஜி,நித்துபாலா,காயத்ரி,மேனகா,சாருஸ்ரீராஜ், ஃபாயிஸா,தெய்வசுகந்தி,கீதா,ப்ரியா இவர்களுடன் இந்த விருதினை பகிர்ந்துகொள்கிறேன்.

மக்களே,நீங்கள் விரும்பிய வலைப்பூக்களுடன் இந்த விருதினைப் பகிர்ந்துகொள்ளுங்க!

என்ஜாய்!!

Tuesday, November 9, 2010

தீபாவளி பாட்லக்

இந்த முறை தீபாவளி வெள்ளிக்கிழமையா வந்ததால் ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்டில் ஒரு பாட்லக்.வெதர் நல்லா இருந்ததால், வீட்டுப்பக்கம் இருந்த ஒரு ஹைக்கிங் போயிட்டு வந்து,அங்கிருக்கும் பார்க்கிலேயே லன்ச் முடிச்சிட்டு வரதா ப்ளான். ஆனா நம்ம எப்ப போட்ட ப்ளான் படி செய்திருக்கோம்?? எல்லாரும் வந்து சேரவே மத்யானம் ஆகிவிட்டதால், ஹைக்-ஐ கேன்சல் பண்ணிட்டு, வீட்டிலேயே சாப்பிட்டுட்டு, இன்டோர் கேம் விளையாடி, படம் பார்த்து பாட்லக்-ஐ முடிச்சுட்டோம்.

இது மத்ய பிரதேஷ் தோழி ஒருவர் கொண்டுவந்தது..சோளே-டிக்கி. உருளைக்கிழங்கிலே டிக்கி,கொண்டைக்கடலை(சோளே)யில் ஒரு க்ரேவி,ஸ்வீட் சட்னி,தயிர், சாட் மசாலா,நறுக்கிய வெங்காயம்,உப்பு-மிளகாய்த்தூள்,ஓமப்பொடி இப்படி எல்லாம் ரெடியா கொண்டுவந்தாங்க. ஒரு தட்டில 2 உருளைடிக்கியை வைத்து,மேலே சோளே மசாலா ஊற்றி, மிச்சம் இருக்கற ஐட்டமெல்லாம்,உங்க விருப்பப்படி தூவி சாப்பிட்டுக்கோங்க.:)
இனி எங்க வீட்டு கான்ட்ரிப்யூஷன்..ரெசிப்பிகளை காண அவற்றின் பெயர்களை க்ளிக் செய்யவும்.
இட்லி ஃப்ரை
(இது என் கணவர் கைவண்ணம். இட்லி நான் செய்ததுதான்.:),இதுக்கு ரெசிப்பி அவர்கிட்ட கேட்டு சீக்கிரம்(!) போஸ்ட் பண்ணறேன் )
அ.கோ.மு.,சப்பாத்தி, தீபாவளி ஸ்வீட்ஸ்,முறுக்கு
இன்னும் ஒருவர் வெஜ் பிரியாணி-ரைத்தா, இன்னொருவர் ஒரு நார்த் இண்டியன் கறி(பேர் மறந்துட்டேன்) கொண்டுவந்தாங்க.அதுவும் கொஞ்சம் வேலைதான்..கடலை மாவை பிசைந்து,சப்பாத்தி போல தேய்த்து, கயிறு மாதிரி உருட்டி,கட் பண்ணி, கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்கணுமாம்..அவை வெந்ததும், மேலே மிதக்குமாம். எடுத்து நமக்கு விருப்பமான க்ரேவியில சேர்த்து சமைக்கறதாம். (செய்முறையை கேட்டே டயர்ட் ஆகிட்டேன்,இதெல்லாம் நமக்கு வேணாம்ப்பா..இட்லி,சட்னி போதும்! என்ன சொல்றீங்க??:) )

படிச்சு டயர்ட் ஆகியிருப்பீங்க, இதோ ஒரு ஹெல்த்தி ஸ்னாக்...
வறுத்த வேர்க்கடலை+தேங்காய்+வெல்லம்...இந்த காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கும். இந்தமுறை இண்டியன் ஸ்டோர்ல வறுத்த வேர்க்கடலையைப் பார்த்தும், என்னவருக்கு இந்த ஸ்னாக் நினைவு வந்துடுச்சு.
2-3 கடலை,கொஞ்சம் தேங்காய்,கொஞ்சூண்டு வெல்லம் சேர்த்து..
சாப்பிட்டுப் பாருங்களேன்..டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்,உடம்புக்கும் நல்லது..சாப்பிட்டு தெம்பா கமெண்ட்டை பதிவு செய்யுங்க.:) :)

LinkWithin

Related Posts with Thumbnails