நண்பர்களையெல்லாம் பார்த்து பலநாட்களாகிட்டதால் இந்த வாரம் எங்க வீட்டில் ஒரு பார்ட்டி! இந்த ஊருக்கு வந்த புதிதில் 2 பேருடன் ஆரம்பித்த என்னவரின் ப்ராஜக்ட் இப்போது 20+ ஆட்களுடன் ஆரோக்கியமா இருக்கிறது. :) இந்தவாரம் லாங் வீகெண்டா இருந்ததால் ஞாயிறு மதியம் லன்ச்சுக்கு எல்லாருக்கும் இன்வைட் அனுப்பியாச்சு.
ஊரிலே வீட்டில் ஏதாவது விஷேஷம்னா சொந்தபந்தம் எல்லாரும் முதல்நாள் மாலையே வந்துருவாங்க. சமையலுக்கு சீனியர் குக் யாராவது இருப்பாங்க..நாம சும்மா, வெங்காயம் உரிப்பது-காய் அரிந்து கொடுப்பது-தேங்காய் துருவிக் கொடுப்பது- டீ-காபி போட்டு எல்லாருக்கும் கொடுப்பதுன்னு நைஸா நழுவிடலாம்! ;) ;) ஆனா இங்கே அப்படி இல்லையே!! எல்லா வேலையும் நாமேதான் செய்தாகவேண்டிய கட்டாயம். நான் அதிகபட்சம் சமைத்தது 12 பேருக்குதான்..இத்தனை பேருக்கு என்ன சமைக்கிறது-எப்படி சமைக்கிறதுன்னு கொஞ்சம் உதறலா இருந்தாலும்,சரி முயற்சித்துதான் பார்ப்போமேன்னு தில்லா களமிறங்கிட்டோம்.
மெனு-வை வெள்ளி மாலையே பைனலைஸ் செய்து, டிஸர்ட் வீட்டில் செய்யவேணாம்,கடையில் வாங்கிக்கலாம்னும் முடிவு செய்தாச்சு. அன்னிக்குன்னு பாத்து கிரிக்கெட் மேட்ச் வேற வந்து புண்ணியத்தை கட்டிகிச்சு, அதிகாலை 4 மணிவரைக்கும் என்னவர் டிவி முன்னால இருந்து நகரலை.(கர்ர்ர்ர்ர்!!!) சனிக்கிழமை காய்கறி-மளிகை எல்லாம் வாங்கிவரவே அரைநாள் முடிந்தது. வீடு வந்ததும் ஐயா சாப்பிட்டுவிட்டு நைஸா உள்ளே போய்த்தூங்கிட்டார்! :)
நான் மலாய்கோஃப்தா-விற்கு கோஃப்தாவை செய்துவைத்து..
ஊறவைத்த வடைப்பருப்பை அரைத்து வடையும் சுட்டு முடிக்கையில்...
என்னவர் மெதுவா எழுந்து வந்து 'டீ கிடைக்குமா?'ன்னாரு!! டீ குடித்ததும் பேட்டரி சார்ஜ் ஆகி, நான் வெங்காயம்-காய்கறிலாம் நறுக்கித்தரேன்னு சுறுசுறுப்பா சொன்னார்.
இதானே சான்ஸு?!!! நானும் மிஸ் பண்ணாம எல்லாத்தையும் எடுத்து குடுத்தேன். எவ்ளோ அழகா கட் பண்ணீருக்கார் பாருங்க! :) :)
அடுத்து சப்பாத்தி போட ஆரம்பித்தேன்..நண்பர்களில் 99% வடஇந்தியர்கள்..அதனால சப்பாத்தி கட்டாயம் செய்தாகணும். (முதல் ஐட்டமா காலியானதும் இதுதான்.)
மலாய் கோஃப்தா-கடலை கறி-தால்,கேஸரோல் இதெல்லாம் செய்யலாம்னு நினைத்திருந்தோம். கேஸரோலுக்கு பீன்ஸ் நறுக்கி வேகவைத்து, மலாய் கோஃப்தா க்ரேவிக்கு வதக்கி, ஊற வைத்திருந்த கொண்டைகடலை வேகவைத்து,துவரம் பருப்பு வேகவைத்து எல்லாவற்றையும் ஆறவைத்து, பத்திரமா மூடி எடுத்து ப்ரிட்ஜில் வைத்துட்டு தூங்கிட்டோம்.
ஞாயிறு காலை..முதல்ல வெறும் சாதம் ஒரு குக்கர் வைத்துட்டு,அடுத்து ஜீரா ரைஸ் வைத்தேன்..
சைட்-பை-சைட் பீன்ஸ் கேஸரோலுக்கும் எல்லாம் கலந்து அவன்-ல வைத்தாச்சு. இந்தமுறை சீரகம்-சில்லி ப்ளேக்ஸ் எல்லாம் போடல..ஆரஞ்ச் கலர் கேப்ஸிகம் ஒண்ணை பொடியாக நறுக்கி கலந்து பேக் செய்தேன்.
பருப்புக்கு தாளித்து கொதிக்கவிட்டு,கடலைகறியை செய்து, கோஃப்தா க்ரேவிக்கு வதக்கிவைத்திருந்ததை அரைத்து க்ரேவி வேலையை முடித்து மணியைப் பார்த்தா 11.20!
நேரம் நிறைய இருந்தது. இனிப்பு எதுவும் செய்யாம இருக்கோமேன்னு குறையா இருந்தது..எதுக்கு அதைமட்டும் விட்டு வைப்பானேன்,வடை சுட்டிருக்கோம்,மேட்ச்சிங்கா சேமியா பாயசம் வைப்போம்னு அதையும் செய்தாச்சு! :)
எல்லா உணவுவகைகளையும் அவன்-ல வைத்து சூடு செய்து ரெடியா வைத்தோம். நண்பர்கள் வந்து சேர கரெக்ட்டா லன்ச் டைம். டேபிள்ல எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணினோம். குட்டீஸ் உட்பட எல்லாருக்கும் சாப்பாடு பிடித்திருந்தது. குறிப்பா மலாய் கோஃப்தாவும் பீன்ஸ் கேஸரோலும் நிறைய பாராட்டுப் பெற்றன. :)
உங்க வசதிக்காக புல் மெனு, இதோ! :) :)
இடது வரிசை,மேலிருந்து கீழ்1.பீன்ஸ் கேஸரோல்
2.மலாய் கோஃப்தா
3.சாலட் ப்ளேட்+ தயிர்
நடுவரிசை,மேலிருந்து கீழ்1.ஜீரா ரைஸ்
2.கடலை கறி
3.தால்
வலதுவரிசை,மேலிருந்து கீழ்1.ஒயிட் ரைஸ்
2.சப்பாத்தி(தீர்ந்துடுச்சுங்க,அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.:))
3.வடை
4.சேமியா பாயசம்
5.பக்லவா
சாப்பாட்டு மும்முரத்தில போட்டோ எடுக்க மறந்துட்டேன்..இந்தப்படம் எல்லாரும் சாப்பிட்டு முடிந்ததும் எடுத்தது.ஹிஹி!
மலாய் கோஃப்தா -ரெசிப்பிக்கு லிங்க் தமிழில்
இங்கே, ஆங்கிலத்தில்
இங்கே.
கேஸரோலுக்கு லிங்க்
இங்கே.
50 பேர் -100 பேருக்கு சமைக்கும் ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கும்போது இவ்ளோ டீடெய்லா ஒரு போஸ்ட் தேவையான்னு நீங்க நினைக்கலாம்..இருந்தாலும் சின்னதா பார்ட்டி வைக்க நினைக்கும் ஆட்களுக்கு,சமையல்ல புதுசா நுழைந்திருக்கும் ஆட்களுக்கு உபயோகமா இருக்குமேன்னு தோணுச்சு. சமைக்க முடியுமான்னு இருந்த டவுட்டெல்லாம் காணாமப் போய், இப்போ இந்தமாதிரி குட்டி பார்ட்டீஸுக்கு குக்கிங் கான்ட்ராக்ட் எடுத்துடலாமான்னு யோசிச்சுட்டிருக்கேன். ஆர்டர் தர யாராவது தைரியசாலிகள் இருக்கீங்களா? :) ;)