Thursday, April 26, 2012

ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் பொரியல் / Burssel Sprouts Stir fry

ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸ் வாங்கவேண்டும் என்ற நினைவு வருகையில் கடையில் இருக்கும் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் எல்லாம் வாடிவதங்கிப் போயிருக்கும். அது ப்ரெஷ்ஷாகவே இருக்கும் போது எனக்கு நினைவில்லாமல் வந்துவிடுவேன். ஒருவழியாக ப்ரெஷ் பேக் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட் வாங்கிவந்தாயிற்று. முதல் முறை என்ன சமைப்பது என்று குழப்பமாக இருந்தது. என்னவரின் ஆஃபீஸ் cafeteria- வில் இந்தக் காயை முழுதாக bake செய்து தருவார்களாம், நீயும் அப்படி ட்ரை செய்து பாரேன் என்று ஐடியா கொடுத்தார். நம்ம ருசிக்கேற்ப மசாலா பொடி சேர்த்து மாரினேட் பண்ணினேன், பசிக்க ஆரம்பித்ததால் oven-ல் bake செய்யாமல் இதோ அந்த ரெசிப்பி..

தேவையான பொருட்கள்
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ்-12
ஆலிவ் ஆயில்-2 டேபிள்ஸ்பூன்
சில்லி சிக்கன் மசாலா-1டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸை கழுவி, தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு நான்காகப் பிளந்துகொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸ், மசாலா பொடி, உப்பு மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக குலுக்கிவிட்டு அரைமணி நேரம் வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து மசாலா கலந்த ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸை சேர்த்து வதக்கவும்.
தீயைக் கூட்டி வைத்து மூடி போட்டு 3-4 நிமிடங்கள் வேகவிடவும். மூடியைத் திறந்து காயை அடிபிடிக்காமல் கிளறிவிட்டு, அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் ஸ்டிர் ஃப்ரை ரெடி. சாதம்- உப்பு பருப்பு-ரசம் இவற்றுடன் பரிமாற சூப்பராக இருக்கும்.

பி.கு. இந்த முறையில் காய் முழுவதுமாக வெந்திருக்காது, க்ரன்ச்சியாக இருக்கும்.
~~
இரண்டாவது முறையில் நான் செய்த பொரியல் அடுத்ததாக! :)
~~
தேவையான பொருட்கள்
ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ்
வெங்காயம்-1
காய்ந்த மிளகாய்-3
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
வேகவைத்த பாசிப்பருப்பு-1 குழிக்கரண்டி
தேங்காய்த் துருவல்-2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
செய்முறை
ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸை பொடியாக நறுக்கவும்.
வெங்காயத்தையும் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு போட்டு பொரியவிடவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் சீரகம் சேர்க்கவும். சீரகம் வெடித்ததும் வெங்காயம், கிள்ளிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காயைச் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
காய் வெந்ததும் உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து கலந்துவிடவும்.
ஓரிரு நிமிடங்கள் கழித்து தேங்காய்த் துருவல் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சாதம்-வத்தக்குழம்பு-ரசம் இவற்றுடன் பரிமாற சுவையான சுவையான (தென்னிந்திய ஸ்டைல்) ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் பொரியல் ரெடி!

இரண்டு பொரியலுமே சுவையாய் இருந்தது..இந்த காய் உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள். நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்க!
~~
மணத்தக்காளிக் கீரையை எங்க ஊர்ப்பக்கம் "சுக்குட்டிக் கீரை" என்றுதான் சொல்வது வழக்கம். :) ஆசைக்கு செடிகளை வளர்த்தாலும் ஒன்றிரண்டு செடிகள் வரைதான் எங்க வீட்டில் வளர்ந்திருக்கு. இதிலே சிவப்பு நிறப் பழம் பழுக்கும் வகையும் உண்டு.

இந்தச் செடியை வீட்டில் வளர்த்தாலும் பழம் பறித்துச் சாப்பிடலாமே தவிர கீரையாய்ப் பறித்து ஒரு குடும்பத்துக்குச் சமைப்பதுக்கு கீரைத் தோட்டம்தான் போடவேண்டும்! ;0) அதனாலோ என்னமோ கீரைக்காரர்களிடம் இந்தக்கீரைக்கு ஸ்பெஷல் விலையாக இருக்கும். மற்ற கீரையெல்லாம் 1.50ரூபாய்க்கு விற்கையில் இந்தக் கீரை 3 ரூபாயாக இருக்கும்.

கடந்த முறை ஊருக்குப் போயிருந்தபோது கீரைக்காரரிடம் சுக்குட்டிக் கீரையைப் பார்த்ததும் வாங்கலாம் என்று விலையைக் கேட்டால் 8 ரூபாய்கள்!! கீரையும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை! இருந்தாலும் இனி எத்தனை நாள் கழிச்சு சுக்குட்டிக் கீரையைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமோ என்று வாங்கி பொரியல் செய்தேன். பொதுவாக, பொரியல் என்பதுக்கு எங்க வீட்டில ரொம்ப சிம்பிள் ப்ராஸஸுங்க!


கீரையோ, காய்கறியோ எது மெயின் இன்கிரிடியன்ட்டோ, அதை நறுக்கி வைச்சுக்கணும். வெங்காயம்- பச்சை நிறக் காய்கள், கீரைக்கு மட்டும் வரமிளகாய், மத்த காய்களுக்கு பச்சைமிளகாய் இதையும் நறுக்கி ரெடியா வைச்சுக்கணும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு-க.பருப்பு,உ.பருப்பு தாளித்து நறுக்கிய காய் சேர்த்து கொஞ்சம் தண்ணிதெளிச்சு உப்பு போட்டு வேகவிட்டு வெந்ததும் தேங்கா போட்டு இறக்கவேண்டியதுதேன்! சுக்குட்டிக் கீரைப் பொரியலும் இதுக்கு விதிவிலக்கில்லை! :)))))
----
என் நிலைமை இப்படியிருக்க, சுக்குட்டிக் கீரைத் தோட்டத்தையே "பர்ட் ஃபீடராக" உபயோகிக்கும், திருக்குறளில் வார்த்தைகளுக்குப் பதிலாக காயையும் கனியையும் படமெடுத்துப் போடுமளவுக்கு விளைச்சல் பார்க்கும் இமா குடுத்துவைச்சவங்கதானே? ;);)
எங்கோ ஒளிந்து கிடந்த கீரைப் படங்களைத் தேடி எடுத்து கொஞ்சம் மொக்கையும் போடவைத்த இமா வாழ்க! :)))))))
---
[முதல் படம்: நன்றி,கூகுள் இமேஜஸ்]

25 comments:

  1. மீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ 1ஸ்ட்டூஊஊஊஊஊஉ:))

    ReplyDelete
  2. எனக்கு இந்த ஸ்பிரவுட்ஸ் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்... வீட்டில் பிடிக்காது, எனக்கு பாதியாக வெட்டி கொஞ்சம் உப்பும், தூளும்போட்டு, மெதுவாக ஸ்ரே ஃபிரை செய்து சாப்பிடத்தான் பிடிக்கும்.

    இதில் நிறைய அயன் உள்ளதாம்.... அப்படிச் சாப்பிட்டும் எனக்கு அயன் குறைவாகிடுது:))

    ReplyDelete
  3. அதிரா,வாங்க,வாங்க! :)

    /இதில் நிறைய அயன் உள்ளதாம்.... அப்படிச் சாப்பிட்டும் எனக்கு அயன் குறைவாகிடுது:))/ நான் ஒரு ஈஸீ ஐடியா தரேன், தினமும் ஒரு இன்ச் அளவுக்கு இரும்புத் துண்டை பொடிச்சு சம்பல்ல சேர்த்துக்குங்க, அயன் டெஃபீஷியன்ஸி சரியாகிரும்! ;)

    /மெதுவாக ஸ்ரே ஃபிரை செய்து சாப்பிடத்தான் பிடிக்கும்./என்னவருக்கும் அப்படிச் செய்ததுதான் ரொம்பப் பிடிக்குதாம். சேம் ப்ளட்! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!

    ReplyDelete
  4. //ஒரு இன்ச் அளவுக்கு இரும்புத் துண்டை பொடிச்சு சம்பல்ல சேர்த்துக்குங்க, அயன் டெஃபீஷியன்ஸி சரியாகிரும்! ;) //
    ஹையோ !!!!!!! சிரிச்சு சிரிச்சி வயறு வலிக்குது .
    கமென்ட் கூட எழுத முடியல .


    பிரசல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ் மிகவும் நல்லது .எனக்கும் வத்தக்குழம்பு காம்பினேஷன் தான் விருப்பம் .வெஜ் சூப்பிலும் சேர்ப்பேன்

    ReplyDelete
  5. /// சிரிச்சு சிரிச்சி வயறு வலிக்குது ./// ஏஞ்சல் அக்கா,வயத்து வலிக்கும் மருந்து சொல்லவா? ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து பொடிச்சு, விளக்கெண்ணையில குழைச்சு, கண்ணை மூடி கடவுளை வேண்டிகிட்டு, ஸ்பூனோட முழுங்கிருங்க! :))))))

    ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் இனி அடிக்கடி வாங்கிடறேன். ஆனா சூப் எல்லாம் செய்யமாட்டேன், ஆமா! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஏஞ்சல் அக்கா!

    ReplyDelete
  6. ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸை பொரியல் செய்வேன்.வெஜ் குருமாவில் சேர்ப்பேன். ஆனால் நான்தான் சாப்பிடனும்.வீட்டில் யாருக்கும் பிடிக்காது.

    ReplyDelete
  7. Naanum cabbage pola seivathu undu. I sometimes add brussels sprouts and mushrooms in kurma, try that, makes a good combo.:) .

    I dont know how to remove the wrpd verification.Do u know? therinja solunga..

    ReplyDelete
  8. வாயில் நுழையாத பெயராக இருபதால் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் பொரியல்..no parcel

    அந்த மனத்த தக்காளி கீரை ONLY பார்சல்

    ReplyDelete
  9. கீரையோ, காய்கறியோ எது மெயின் இன்கிரிடியன்ட்டோ, அதை நறுக்கி வைச்சுக்கணும். வெங்காயம்- பச்சை நிறக் காய்கள், கீரைக்கு மட்டும் வரமிளகாய், மத்த காய்களுக்கு பச்சைமிளகாய் இதையும் நறுக்கி ரெடியா வைச்சுக்கணும்.
    கடாயில் எண்ணெய் காயவிட்டு கடுகு-க.பருப்பு,உ.பருப்பு தாளித்து நறுக்கிய காய் சேர்த்து கொஞ்சம் தண்ணிதெளிச்சு உப்பு போட்டு வேகவிட்டு வெந்ததும் தேங்கா போட்டு இறக்கவேண்டியதுதேன்! சுக்குட்டிக் கீரைப் பொரியலும் இதுக்கு விதிவிலக்கில்லை! :)))))///

    (A+B)^2 FORMULATHANA...OK OK...

    ReplyDelete
  10. முட்டைகோஸ்மாதிரியில், லைட் வெயிட்டில் ஸல்லாத் செய்ய உபயோகமாகுமே அதுதானே இது.
    கொஞ்சம் சின்ன சைஸா கிடைக்குமே. ஸாண்ட்விச் பண்ணுவா. நான் ஸேலட்டில் உபயோகப் படுத்துவேன். பேர்கூட ஸரியா தெறியலே. ரொம்பவே ருசியா இருக்கும் போலிருக்கே. புது ருசி.பேர் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட். ஸரியா? நன்றி மஹி

    ReplyDelete
  11. Both the dishes are superb, and I love manathakkali keerai portal..

    ReplyDelete
  12. I tried doing this 2 times after hearing the health benefits but I got some weird taste that I had to throw the dish(some said it might be sulphur taste).Is there a way to reduce that weird taste?

    ReplyDelete
  13. அருமையாக செய்து காட்டி இருக்கீங்க மகி

    ReplyDelete
  14. HAVE A NICE FUN FILLED WEEK END :}}}}}

    ReplyDelete
  15. Nice recipes Mahi. Never tried these as no one likes it but your recipe has tempted me. So I am going to try this

    ReplyDelete
  16. //இதில் நிறைய அயன் உள்ளதாம்//
    is poos talking about Suryaa's movie Ayan:)))

    Mahi since when did you take over Green Flower???
    Ippudi vaithiyam sollikittu thiriyureengale?? kalakkungo !!!

    ReplyDelete
  17. சித்ரா அக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நான் இத்தனை நாட்களில் இதான் முதல் முறை ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் வாங்கியது!;)
    ~~
    /மனத்த தக்காளி கீரை ONLY பார்சல்/சிவா,அது பலமாசம் முன் செய்த கீரை,பரவாயில்லையா?;) மணத்த தக்காளின்னுதான் நீங்க சொல்லுவீங்களா,இல்ல ஒரு "த" எக்ஸ்ட்ராவா போட்டிருக்கீங்களா?
    /(A+B)^2 FORMULATHANA...OK OK... //அட,பரவாயில்லையே! நான் சொல்லவந்ததை "கப்"புன்னு புடிச்சிட்டீங்களே சிவா! :)))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    காமாட்சிம்மா, ஸாலட்-சாண்ட்விச் இவற்றில் எல்லாம் ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்டா?? கலக்கறீங்க நீங்க!:)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
    ~~
    ஹேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
    ~~
    /but I got some weird taste that I had to throw the dish/ஓ..கொட்டிட்டீங்களா?? எனக்கு அப்படி எந்த வாசமும் தெரியலையேங்க! பருப்பு சேர்த்து செய்திருக்கும் 2வது முறை பொரியலில் நீங்களா இது ப்ரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ்னு சொன்னாத்தான் தெரியும்! அப்படி செய்து பாருங்க அனானி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகாக்கா!
    ~~
    ஏஞ்சல் அக்கா,வீகென்ட் வெதர் நல்லா இருக்குன்னுதான் நினைக்கிறேன்.:) உங்களுக்கும் இனிய வார இறுதி!
    ~~
    கிரிஜா,வாங்கி செய்து பாருங்க..நெகடிவ் கலோரி இருக்குது, அயர்ன் இருக்குன்னு சொல்றாங்க!
    /Ippudi vaithiyam sollikittu thiriyureengale??/ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை போல நானும் வைத்தியம் சொல்ல ஆரம்பிச்சிருக்கேன், ஆனா ஸ்பெஷல் ஆட்களுக்கு மட்டும்தான் இந்த டிப்ஸ் எல்லாம்! எல்லாருக்கும் சொல்றது இல்லீங்கோ! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா!
    ~~

    ReplyDelete
  18. ;) லேட்டாக வந்திருக்கிறன், ம். ப்ரஸ்ஸல் ஸ்பரவுட்ஸ் நட்டுப் பார்க்க வேணும். எனக்கு அது எப்பிடிச் சமைச்சாலும் விருப்பம். மாசி போட்டு வெள்ளைகறி விருப்பம்.

    சுக்குட்டிக்கீரை ரெசிபி தந்ததற்கு மெத்தப் பெரிய உபகாரம். ;) பின்னூட்டம் மெதுவே வரும். ;) வாழ்த்துக்கு நன்றி. ;))) //விளைச்சல் பார்க்கும்// 'அமோக விளைச்சல் பார்க்கும்,' என்றிருந்திருக்க வேண்டும் மகி. இலைகளெல்லாம் அப்படி தளதளவென்று இருக்கிறது. எப்படியும் வாரம் 2 செடிகள் குப்பைக்குப் போகிறது.

    ReplyDelete
  19. சூப்பர். நானும் இந்த ரெசிப்பி ( பொரியல் ) செய்வதுண்டு. நாங்கள் சுண்டல் என்று சொல்வோம்.
    பூஸார், எனக்கும் அயன் பற்றாக்குறை இருந்தது. இப்ப இல்லை. சாப்பிடாம டயட் என்று பட்டினி கிடந்தால் வரும். ஒவ்வொரு நாளும் ப்ராக்கலி சாப்பிட்டா நல்லது. இல்லாவிட்டால் ஒரே வழி அயன் டாப்லட்ஸ் தான்.

    ReplyDelete
  20. எப்படியும் வாரம் 2 செடிகள் குப்பைக்குப் போகிறது.//இருக்கிறவள் அள்ளி முடிகிறாள். வேறு என்னத்தை சொல்ல???!!!!

    ReplyDelete
  21. நானும் லேட்டாக வந்திருக்கிறேன்.அருமையான இரண்டு குறிப்புகள்.மகி இங்கு வாக்கிங் போகும் பொழுது பறித்து வந்து முன்பு மணத்தக்காளி கீரை பொரியல் கூட்டுன்னு வைத்தேன்,இப்ப வற்றை காணோம்:(..
    ப்ரஸ்ஸல் பொரியல் இதுவரை செய்ததில்லை.இங்கும் அதிகம் மார்க்கெட்டில் காணவில்லை.

    ReplyDelete
  22. ப்ரஸ்ஸல் பொரியல் சூப்பர் மகி ........

    ReplyDelete
  23. I have only once bought Brussels thinking they are baby cabbage and made a terrible bajji with it. afterwards, we never turn that side also! the first recipe sounds good to me to try after all those hatred towards the veggie :)

    ReplyDelete
  24. மகி உங்க கூட ஒரு விருதை பகிர்ந்து உள்ளேன். ப்ளீஸ் வந்து வாங்கிக்குங்க

    ReplyDelete
  25. /'அமோக விளைச்சல் பார்க்கும்,' என்றிருந்திருக்க வேண்டும் மகி. / வானதியின் (2வது)கருத்தையே நான் சொல்லிக்கறேன் இமா! திருப்பி அதை ஒருவாட்டி படிச்சுக்குங்க. :)

    /னக்கும் அயன் பற்றாக்குறை இருந்தது. இப்ப இல்லை. சாப்பிடாம டயட் என்று பட்டினி கிடந்தால் வரும்./ அப்ப இப்ப 50கேஜி தாஜ்மஹாலா வானதி? ;) பூஸாரும் கன்னாபின்னான்னு டயட் செய்யறாங்களோ?? அவ்வ்வ்வ்!
    சுண்டல்--உங்க எல்லாருடனும் பழகி எனக்கும் பழகிப்போச்! ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ஆசியாக்கா,உங்க ப்ளாகில் மணத்தக்காளி ரெசிப்பீஸ் பாத்த நினைவிருக்கு. இப்ப செடி இல்லையா??!
    பிரஸ்ஸல் ஸ்ப்ரவுட்ஸ் கிடைச்சா செய்துபாருங்க ஆசியாக்கா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    யாஸ்மின்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ராஜி, பஜ்ஜியா??:))) நானும் அந்தமாதிரி கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டா, மறுபடி அந்த காய் பக்கம் போகமாட்டேன்! :)
    பொரியல் மாதிரி செய்து பாருங்க..நல்லா இருக்கு!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    கிரிஜா...விருதுக்கு ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails