அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! :) "ஆகஸ்ட் 15 வர இன்னும் சிலநாட்கள் இருக்கே, இப்பவே என்ன அவசரம்??" என்று புருவம் தூக்கும் ஆட்கள், வேகமா ஸ்க்ரோல் பண்ணி பூக்கூடை வீடியோவைத் தாவிக் குதிச்சுப் பாருங்க. இல்லன்னா நிதானமா படிச்சுட்டு அங்க போங்க... :))))
தேவையான பொருட்கள்ப்ரவுன் நிற முக்கோணங்கள் -99
ரோஸ் நிற முக்கோணங்கள் -40
வயலட் நிற முக்கோணங்கள்-60
மொத்த முக்கோணங்கள் - 199
கைப்பிடியின் நீளத்துக்கேற்ப முக்கோணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம், அதனால் ஒரு 25-50 முக்கோணங்கள் அதிகமாக தயாராக வைத்துக்கொள்ளவும்.
செய்முறை18 ப்ரவுன் நிற முக்கோணங்களை மூன்று வரிசைகளில் இணைக்கவும்.

இணைத்த வட்டத்தை
தலைகீழாகத் திருப்பிவைத்து ஒரு ப்ரவுன் முக்கோணத்தை எடுத்துவிட்டு, பிங்க் கலர் முக்கோணத்தை சொருகவும்.
பிங்க் முக்கோணம் தலைகீழாக (inverted) இணைக்கப்படவேண்டும். படத்தைப் பார்த்தால் புரியும்.

இப்பொழுது பிங்க் முக்கோணத்தின் மீது 2 பிங்க் முக்கோணங்கள், அதன் மீது ஒரு பிங்க் முக்கோணம் என இணைக்கவும்.

ப்ரவுன் வரிசையில் முதல் பிங்க் முக்கோணம் இணைத்ததில் இருந்து 2 ப்ரவுன் முக்கோணங்களை எடுத்துவிட்டு அடுத்த பிங்க் முக்கோணத்தை செருகவும். அதன் மீது மீண்டும் 2, 1 என்ற வரிசையில் பிங்க் முக்கோணங்களை இணைக்கவும். இதேபோல ப்ரவுன் வரிசையில் 2 விட்டு ஒரு பிங்க் என தொடர்ந்து இணைத்து முடிக்கவும்.
ஆகமொத்தம் 6 ப்ரவுன் முக்கோணங்களை நீக்கிவிட்டு, 6 பிங்க் முக்கோணடிசைன்கள் கிடைத்திருக்கும்.

இப்பொழுது, 6 பிங்க் முக்கோணங்களில் மூன்றை மட்டும் நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக வயலட் நிற முக்கோணங்களை செருகிவிடவும். ஆல்டர்னேட்டிவ் ஆக இரண்டு நிறங்களும் கிடைக்கும். [ டைரக்ட்டாகவே பிங்க், வயலட் என மாற்றி மாற்றி இணைக்கலாம், ஆனால் (எனக்கு) குழப்பம் கொஞ்சம் கம்மியாக;) இருக்க வேண்டி இப்படி செய்திருக்கிறேன். :)]

இப்பொழுது மூன்று வயலட் பகுதிகள் மீதும் 7 ப்ரவுன் முக்கோணங்களை படத்தில் உள்ளவாறு இணைக்கவும்.

அடுத்து, 3 பிங்க் நிற பகுதிகள் மீதும் 5 வயலட் நிற முக்கோணங்களை படத்திலுள்ளவாறு இணைக்கவும்.

பூக்கூடை தயாராகிவிட்டது. கூடையின் கடைசி வரிகளை அழுத்தினால் இப்படி உயரமாகும்.

மேலேயுள்ள இதழ்ப் பகுதிகளை லேசாக அழுத்தி, கூடையை அகலப்படுத்தி விடவும்.

அடுத்ததாக கைப்பிடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். 2 ப்ரவுன்-1 வயலட்-2 ப்ரவுன்-1 வயலட்-2 பிங்க்-1 ப்ரவுன் -2 பிங்க் -1 ப்ரவுன் = மொத்தம் 12 முக்கோணங்களை படத்தில் உள்ளவாறு இணைக்கவும். இது கைப்பிடியின் ஒரு பகுதி, இதே போல ஐந்து அல்லது ஏழு தொகுப்புகள் (விரும்பிய நீளத்துக்கு ஏற்றபடி) இணைத்துக் கொள்ளவும்.

ஏழு கைப்பிடித் தொகுப்புகளையும் இணைக்கவும். வளைவான கைப்பிடி கிடைக்கும். அதன் ஒரு முனையில் இரண்டு pockets இருக்கும், அந்த இடத்தில் ஒரு ப்ரவுன் முக்கோணத்தை இணைக்கவும்.
இப்பொழுது கூடையைத் திருப்பி, அதன் அடிப்பக்கத்தில் 18 பிங்க் நிற முக்கோணங்களை தலைகீழாக (inverted) செருகிவிடவும். இது கூடையின் கீழ்ப்புறம் காலியாக இல்லாமல் இருப்பதற்காக செய்வது.
கூடையின் மேல் கைப்பிடியை இணைக்கவும். ஒரு புறம் ஒற்றை முக்கோணத்தை இணைக்கமுடியும், அடுத்த பகுதில் கூர்மையான இரண்டு முக்கோணங்களை இணைக்கமுடியும்.

கலர்ஃபுல் பூக்கூடை தயாராகிவிட்டது.

என்னால் முடிந்தளவு, எனக்குப் புரிந்தமாதிரி விளக்கம் கொடுத்திருக்கிறேன். இந்தக் கூடை யூட்யூப் வீடியோ பார்த்து செய்தது. கலர் பேப்பர்கள் என்னிடம் இருந்த காம்பினேஷனில் செய்திருக்கிறேன். வீடியோவில் தெளிவான விளக்கம் இருக்கிறது. அதனைப் பார்த்து செய்ய ஆரம்பித்தால் சுலபமாக இருக்கும். குட் லக்! :)
பின்குறிப்பு
ஊருக்குச் செல்வதால் இன்னும் சிலகாலத்துக்கு வலையுலகிற்கு வழக்கம்போல வர இயலாது. அதுவரை இங்கு பதிவுகள் வந்தாலும் வரலாம், வராமலும் இருக்கலாம். அப்பப்ப எட்டிப் பார்த்து கன்ஃபர்ம் பண்ணிக்கோங்க! ;)
என் தொந்தரவு இல்லாமல் எல்லாரும் கொஞ்சநாள் சுதந்திரமா இருங்க! :) மீண்டும் சந்திப்போம், நன்றி வணக்கம்!