புதினாச் செடியின் படம், வெஜிடபிள் பிரியாணி-ன்னு டைட்டில்! இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்னு இந்நேரம் நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க..கரெக்ட்டா? பின்னே..மகி'ஸ் ஸ்பேஸ் ரீடர்ஸ்-ஆ கொக்கா?! :))))))
பார்ட்டிகளுக்கு பெரிய அளவில் பிரியாணி செய்கையில் இந்த oven-ல செய்யும் முறை சுலபமாக இருக்கும். சாதம் தனியாக க்ரேவி தனியாக செய்து தயாரிப்பதால் முதல்நாளே கூட க்ரேவி செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொண்டு, சாதம் மட்டும் சூடாகச் செய்து, உணவு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன் லேயராக அடுக்கி அவன்-ல தள்ளீட்டீங்கன்னா(!) சூடாக எடுத்து பரிமாறிவிடலாம்! :)
இந்த முறை ஸ்டெப் பை ஸ்டெப்பாக படங்கள் எடுக்கவில்லை, சிலபடங்கள் மட்டுமே எடுத்தேன். ரெசிப்பியை எழுதிவிடுகிறேன், ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு
இங்கே க்ளிக்கவும்.
தேவையான பொருட்கள்
சாதத்துக்கு
பாஸ்மதி அரிசி -3 கப் (~3/4 கிலோ)
பிரியாணி இலை -2
பட்டை
ஏலக்காய்-2
கிராம்பு -2
நெய்- 2 டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லி இலைகள் - கொஞ்சம்
உப்பு
தண்ணீர் - 6 கப்
செய்முறை
அரிசியை 2-3 முறை அலசி, தேவையான தண்ணீர் விட்டு அரைமணி நேரம் ஊறவிடவும்.
பெரிய பாத்திரத்தில் 6 கப் தண்ணீரை சூடாக்கவும். தண்ணீர் கொதிவரும்போது வாசனைப் பொருட்கள், புதினா-கொத்துமல்லி இலைகள், உப்பு சேர்க்கவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
பாஸ்மதி 7 நிமிடங்களில் முக்கால்பதம் வெந்துவிடும். அதனை எடுத்து, தண்ணீரை வடித்துவிட்டு நெய் கலந்து வைக்கவும்.
வெஜ். பிரியாணி க்ரேவி - தேவையான பொருட்கள் (to marinate)
சற்றே பெரியதாக நறுக்கிய காய்கள் - 21/2 கப் (கேரட்-பீன்ஸ்-காலிஃப்ளவர்-உருளை-பச்சைப் பட்டாணி)
இஞ்சி-பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
புதினா-கொத்துமல்லி நறுக்கியது - கால்கப்
பச்சைமிளகாய் -2
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் -1 டேபிள்ஸ்பூன்
பிரியாணி மசாலா தூள் -11/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
தயிர் - கால் கப்
பட்டை-கிராம்பு-ஏலக்காய்-பிரியாணி இலை சேர்த்து அரைத்த விழுது - 2டீஸ்பூன் (முழு கரம் மசாலா பிடிக்கும் எனில் அரைக்காமல் அப்படியே சேர்க்கலாம்)
உப்பு
தாளிக்க
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி, பாதாம் - கொஞ்சம்
நீளமாக நறுக்கிய வெங்காயம் -2
தக்காளி -1
செய்முறை
மேரினேட் செய்ய வேண்டிய எல்லாப் பொருட்களையும் பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கி அரைமணி முதல் ஒருமணி நேரம் ஊறவிடவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து முந்திரி பாதாம் சேர்த்து, பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பெரிய துண்டுகளாக நறுக்கிய தக்காளி மற்றும், மாரினேட் செய்த காய்கறி கலவையைச் சேர்த்து வதக்கவும். 3/4 கப் தண்ணீர் விட்டு, உப்பு சரிபார்த்து, கடாயை மூடிபோட்டு வேகவிடவும்.
காய்களும் முக்கால் பதம் வெந்தால் போதுமானது. கலவை கொதிக்கத் தொடங்கியதும் 5 நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். இப்போது சாதம், க்ரேவி இரண்டுமே தயார். அடுத்ததாக பிரியாணியை அவன்-ல தம் போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
தம் போட தேவையானவை
அவன் ப்ரூஃப் பாத்திரம் -1
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நீளமாக நறுக்கிய தக்காளி -1
நறுக்கிய புதினா,மல்லித்தழை - கொஞ்சம்
பிரியாணி மசாலா -1/2டீஸ்பூன்
ஃபுட் கலர் (விரும்பினால்) -சிலதுளிகள், ஒரு டேபிள்ஸ்பூன் பாலில் கலந்து வைக்கவும்.
அலுமினியம் ஃபாயில் பேப்பர்
அவன்-ல் வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, முதலில் ஒரு லேயர் சாதத்தை சீராகப் பரப்பவும். அதன் மீது கொஞ்சம் பிரியாணி மசாலா பொடியைத் தூவிவிட்டு இரண்டாவது லேயராக காய்கறி க்ரேவியை பரப்பவும். க்ரேவி மீது நறுக்கிய தக்காளித்துண்டுகள் மற்றும் மல்லி-புதினாவை தூவிவிடவும். மூன்றாவது லேயராக சாதம், அடுத்து க்ரேவி இப்படி மாற்றி மாற்றி இதே போல லேயர்கள் வரும்படி வைக்கவும். கடைசி அடுக்காக சாதம் வரும்படி பார்த்துக்கொள்ளவும்.சாதத்தின் மேல் ஃபுட் கலரை ஆங்காங்கே தெளித்துவிடவும்.
பாத்திரத்தை அலுமினியம் ஃபாயில் பேப்பரால் நன்றாக மூடி 400F ப்ரீஹீட் செய்த அவன்-ல வைத்து 45 முதல் ஒரு மணி நேரம் பேக் செய்யவும். கமகம பிரியாணி ரெடி! :)
ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பிக்கு
இங்கே க்ளிக்கவும்.
~~
முதன்முறை இங்கே வந்து படிப்பவர்களுக்கும், புதினா படத்துக்கு விளக்கம் கேட்பவர்களுக்கும், இதோ விளக்கம்! :)
சில மாதங்கள் முன்பு கடையில் வாங்கிவந்திருந்த புதினாவின் தண்டுகளை தொட்டியில்
நட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டேன். திரும்பிவரும் வரை தோழி வீட்டில்
சமர்த்தா :) வளர்ந்திருந்தது புதினாச் செடி. போனவாரம் அறுவடை செய்து,
பாட்லக் டின்னருக்கு செய்த வெஜிடபிள் பிரியாணியில் உபயோகப்படுத்தியாயிற்று.