எங்க வீட்டுக் குட்டி தேவதையின் பாதச்சுவடுகள்..
அவள் பிறந்து 3 வாரங்கள் ஆகியிருந்தபொழுது எடுக்கப்பட்டது இந்த அழகுச் சுவடுகள்..
பட்டுப்பூவின் குட்டிப்பாதம் களிமண்ணில் பதிக்கப்பட்டு..
Precious hand and foot prints-இன் ஸ்டுடியோவில்..
கிட்டத்தட்ட இரு மாதங்கள் இருந்து மெருகேற்றப்பட்டு..
எங்கள் நினைவுப் பெட்டகத்தில் சேர்ந்திருக்கிறது.
லயா பிறந்த மருத்துவமனையில் ஃப்ரொபஷனல் போட்டோ ஷூட் மற்றும் இந்த hand and foot prints எடுப்பதற்கும் வசதிகள் இருக்கின்றன. பாப்பு பிறந்த அடுத்த நாளில் இருந்தே இவர்கள் நம்மை அணுகி விசாரிக்கிறார்கள். நாங்கள் போட்டோ அங்கேயே எடுத்துக்கொண்டோம், இந்தச் சுவடுகள் பதிக்க நேரம் ஒத்துவராத காரணத்தால் 3 வாரங்கள் கழித்து அவர்களது ஸ்டுடியோவிற்குச் சென்று எடுத்துவந்தோம்.
மேலே படத்தில் உள்ள பாதங்களில் ஒரு பாதத்தின் அச்சு மருத்துவமனையில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசமாக அவர்கள் தருவது. நாங்கள் இரண்டாக வாங்கிக்கொண்டோம். இந்த டிசைன், வடிவம் மட்டுமே என்றில்லாமல் பல்வேறு வடிவங்கள் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலை.அச்சுக்கள் எடுத்த பெண்மணி, மிகப் பொறுமையாக என் கேள்விகளுக்குப் பதிலளித்தார். பாப்புவின் பாதத்தையும் ஜில்ல்ல்ல்ல் களிமண்ணில் சீக்கிரமாகப் பதித்துக்கொண்டார். அச்சுக்கள் 3 வாரம் காயவைக்கப்பட்டு, பிறகு சுடப்பட்டு, வண்ணம் தீட்டி உருவாக்கப்படும். அதனாலேயே 2 மாதங்கள் ஆகின்றன என்று கூறினார்.
ஆர்வமாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்டதற்கு "Why not?" என்று புன்னகையுடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். :)
பொறுமையாகப் படித்து ரசித்துவிட்டீர்கள்..சோறு-வெண்டைக்காய்ப் புளிக்குழம்பு-பீட்ரூட் பொரியல்-கீரைப்பொரியல்-ரசத்துடன் சாப்பிட்டுட்டுப் போங்க. நன்றிகள்!
:)