Saturday, January 31, 2015

கேப்ஸிகம் பொரியல் / குடைமிளகாய் பொரியல்

தேவையான பொருட்கள்
குடைமிளகாய் -2
வெங்காயம் - பாதி 
பச்சை மிளகாய்-1
வரமிளகாய்-1
கடுகு-1/2டீஸ்பூன்
உ.பருப்பு-1டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு 

செய்முறை 
குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சம அளவு சதுரத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை கீறியும், வரமிளகாயைக் கிள்ளியும் வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்து பருப்பு தாளித்து வெங்காயம், ப.மிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து , கொஞ்சமாகத் தண்ணீர் தெளிக்கவும். 
அடுப்பை ஹை ஃப்ளேமில் வைத்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். 
சுவையான குடைமிளகாய் பொரியல் சில நிமிடங்களில் தயார். 
சிவப்பு, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு என பலவண்ண மிளகாய்களை உபயோகித்தால் பொரியல் கண்ணுக்கு அழகாகவும் இருக்கும். தனியாக ஒரே வண்ண மிளகாயை உபயோகித்தாலும் நன்றாக இருக்கும். முதல் படத்தில் சிவப்பு +மஞ்சள் மிளகாய்கள், இரண்டாவது படத்தில் மஞ்சள் + பச்சை மிளகாய்கள். 
குடைமிளகாயை ரொம்பவும் குழைவாக வேக வைக்காமல் கொஞ்சம் க்ரஞ்ச்-சியாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். 

7 comments:

  1. பார்க்கவே அழகா இருக்கு மகி. சிம்பிள் & ஈஸி குறிப்பு.நன்றி.

    ReplyDelete
  2. அருமையான.. வண்ண வண்ண குடை மிளகாய் பொரியல்....

    ReplyDelete
  3. கலர்புல்லான சத்து நிறைந்த, நல்ல அண்டி-ஆக்ஸிடென்ட் உணவு. கேப்ஸிகம்மில் நிறைய ஹெல்த் பெனிஃபிட்ஸ் இருக்கிறது.

    ReplyDelete
  4. மஹி,

    நான்தான் குடைமிளகாயே வாங்குவதில்லையே. வெறுமனே பாத்துட்டுப் போறேன். பார்க்கவே கலர்ஃபுல்லா சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  5. இந்தப் பதிவிற்கும், இதற்கு முந்தைய பதிவுகளுக்கும் கருத்துக்கள் தந்த நட்புக்கள் அனைவரும் இனிய நன்றிகள்! அவ்வப்பொழுது பார்த்து உடனே நன்றி சொல்ல நேரம் அனுமதிப்பதில்லை. கொஞ்ச நாள் ஆனதும் அப்படியே மறந்தும் போகிறது. தவறாமல் கருத்துக்கள் தருவோரின் ஊக்கங்களே பதிவுகள் தொடர ஊட்டச்சத்து! நன்றி நட்புக்களே! :)

    ReplyDelete
  6. அருமையான பொரியல் மஹி!

    ReplyDelete
  7. 'Hai....Poriyal and the vessel, both are super...!!!!!....

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails