Sunday, March 29, 2015

வா வா வசந்தமே..சுகந்தரும் சுகந்தமே!

இந்த வசந்தத்திற்கு வீடு வந்த புதுமலர்கள்..
பேன்ஸி(Pansy), வயோலா(Viola), கெர்பரா(Gerbera), ரனன்குலஸ்(Rananculus), சீலோஷா(Celosia), ரோஜாக்கள் என்று வண்ண வண்ணப் பூக்களை எங்க வீட்டுக்கு அள்ளிக்கொண்டு வந்திருக்கு இந்த வசந்தம். [பூக்களின் அருகிலேயே ஆங்கிலப் பெயர் கொடுத்திருக்கேன், க்ளிக் பண்ணினால் கூகுளில் அந்தப் படங்களைப் பார்க்கலாம். நாங்க வாங்கி வந்த செடிகள் எல்லாம் கலந்து இருப்பதால் இப்படி ஒரு அரேஞ்ச்மெண்ட்..ஹிஹ்ஹி!!]
நம்மூர் கோழிக்கொண்டை போல இந்த சீலோஷா..மஞ்சள், சிவப்பு, பஞ்சுமிட்டாய்க்கலர் என்று பலவண்ணங்களில் சிறகை காற்றில் அசைத்து மனதை வருடின.
பளீர் என கத்தரிப்பூ மற்றும் மஞ்சள் நிறங்களில் பேன்ஸி மலர்கள்..
இரண்டு நிறங்களில் டேலியா கிழங்குகள்..படத்திலிருக்கும் பூக்கள் வருமோ இல்லை வேறு நிறப்பூக்கள் மலருமோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. விரைவில் தெரிந்துவிடும். 
வசந்தம் கடந்து கோடை வந்ததும் நடவென்று சில காய்கறி விதைகள்..இவற்றை எனது இரண்டு கால் மலர் கையிலெடுத்து குலுக்கி விளையாடிக்கொண்டே நடந்து எங்கேயோ போட்டு வைத்திருக்கிறாள்..அவற்றை முதலில் கண்டுபிடித்து எடுத்து வைக்கவேண்டும்! :) 
தொட்டிகளில் மண் நிறைத்து, செடிகளைப் பிரித்து நட்டு வாரமும் இரண்டாகிவிட்டது. மார்ச் 20ஆம் தேதி இந்த வருஷத்தின் வசந்தம் வந்தது இங்கு..நாங்கள் அதற்கும் முந்தைய ஞாயிற்றுக்கிழமையே பூச்செடிகளை நட்டாயிற்று. 
கெர்பராவில் சுகந்தம் வீசுகின்றதா என்று ஆராய்ச்சி செய்யும் எங்க வீட்டு நாலு கால் பூ!! :) [அப்பாடி...டைட்டிலுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தாச்சு!:)] இவரும் பூ வாங்க கடைக்கு வந்திருந்தார். வாங்கி வந்த செடிகளை ஒழுங்கா நட்டிருக்கோமா என சோதனை செய்கிறார் ஐயா!! ;) 
~~~
இன்றைய இணைப்பு 
கடந்த டிசம்பர் இறுதியில் ஒன்று முழுவதும் பூனைக்குட்டிகளும், ஒன்றில் காட்டு மிருகக் குழந்தைகளும் என்று இரண்டு கேலண்டர்கள் வாங்கினேன். ஒவ்வொரு படமும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு அழகு! லயாவின் அறைச் சுவரில் மாட்டி வைத்து தினமும் இவற்றின் முகத்தில் விழிக்கின்றோம்! :) 
அருகிலிருக்கும் நூலகத்தில் குழந்தைகள் கலர் செய்யவென்று படங்களும் க்ரேயான்களும் வைத்திருப்பார்கள். இது லயா கலர் செய்ததுன்னா நம்பவா போறீங்க??..ஹிஹி..
சின்ன வயதில் இருந்து இப்படி படங்களுக்கு வண்ணம் தீட்டுவது எனக்கு மிகப் பிடிக்கும், இப்பொழுது அதற்கு ஒரு தீனி கிட்டியிருக்கிறது. :)
~~~
இந்தப் பதிவிற்கு தலைப்பைத் தந்த பாடல்..நான் ரசித்தது, நீங்களும் ரசியுங்களேன்! :)


7 comments:

  1. வணக்கம்

    எல்லாத்தகவலையும் அறிந்தேன்.. மலர் என்றால் மகிழ்ச்சிதான் வளர்ந்த பின் ஒரு பதிவு எழுதுங்கள்.. பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அழகான கலர்புல் மலர்கள், பேன்ஸி மலர்கள் ப்யூடிஃபுல். பார்க்கும்போதே பளிச் பளிச் என்று என்ன அழகு. வாத்து படம் க்யூட், நல்ல கலர் கொடுத்து இருக்கிறீர்கள், குட்டி வாத்து மிகவும் அருமை ( so cute). வலைப்பூ திறமைக்கும் , வரையும் திறமைக்கும் பாராட்டு.

    Try this link, maybe useful. California Gardening " https://www.youtube.com/user/CaliforniaGardening "

    ReplyDelete
  3. மூவரின்(காமிரா வச்சிட்டு இருக்கவங்களைக் கணக்கில் சேர்க்கக்கூடாது) உழைப்பாச்சே, தோட்டம் ஜோரா வளர்ந்து, செழிக்க வாழ்த்துக்கள் மஹி !

    ஹா ஹா ஹா !!! இப்போதும் நான் மகளின் பழைய குண்டுகுண்டு, பெரியபெரிய புத்தகங்களை எடுத்து விடுபட்ட இடங்களில் கலர் பண்ணுவதும், வழி கண்டுபிடிப்பதும், எண்கள் & எழுத்துக்களை இணைப்பதும் உண்டு.

    ReplyDelete
  4. நீங்க வாங்கிய பூசெடிகள் எல்லாமே அழகானவையா இருக்கு மகி. எனக்கும் Gerbera ரெம்ப பிடிக்கும். டாலியா நானும் லாஸ்ட் இயர் வாங்கினேன் படத்துக்கும் மலர்ந்ததற்கும் சம்பந்தமில்லை.ஆனாலும் அழகான பூ பூத்தது. காலண்டர் இரண்டும் அழகா இருக்கு. எங்களுக்கு இப்போ வெதர் சரியில்லை 4,5 நாளா. நல்ல பாடல் மகி. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. ஆகா அழகு.... நான் கலரிங் செய்வதை painting சொல்லிடுவேன் ...ம்

    ReplyDelete
  6. அழகு வண்ணப் பூக்கள்.... வசந்தம் வருவதற்கு சொல்லவும் வேண்டுமா?

    ReplyDelete
  7. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

    //(காமிரா வச்சிட்டு இருக்கவங்களைக் கணக்கில் சேர்க்கக்கூடாது) // சித்ராக்காவுக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்!! நான் வேலை செய்யும்போது நானே போட்டோ எடுக்க முடியாதுல்ல?? அது என்ன கணக்காம்??! ;) :)

    ராஜேஷ் & விஜி, நான் வரையவில்லைங்க..லைப்ரரியில் ப்ரிண்ட் அவுட் வைத்திருப்பாங்க, அதில வண்ணம் தீட்டியது மட்டுமே நான்! ஹி..ஹி!!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails