2018 இறுதியில் சென்ற பயணப்பதிவு தொடர்கிறது..முதல் பகுதி இங்கே.
மலையுச்சிகளின் அருகே செல்லச்செல்ல மனித நடமாட்டமில்லாத வெண்பனியைப் பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது..ஓடிச்சென்று கை கொள்ளாமல் அள்ளிக்கொள்ளலாம் போல..படுத்து உருளலாம் போல..எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.!!! எல்லாம் போல தான்...2 குட்டிப்பெண்களை வைத்துக்கொண்டு காரில் இருந்த் பெரிதாக கீழே இறங்கியெல்லாம் ரசிக்க முடியவில்லை..மேலேயுள்ள படத்தில் முதலிரண்டு டென்வரில் நடந்த "Paw Patrol Live" show. லயாம்மாவின் ஃபேவரிட் ஷோ..டென்வரில் லைவ் ஷோ நடந்ததால் அங்கே சென்று பார்த்தோம்.. டிக்கட், பாப்கார்ன், பொம்மைகள் என்று டாலர்களை அள்ளிக் குவிக்கிறார்கள்..பெற்றோர்களும் பிள்ளைகளின் சந்தோஷத்துக்காக நண்டு சிண்டுகளையும் அள்ளிக்கொண்டு ஆஜர்!! :) :)
பயணத்தின் இறுதியாக சென்ற இடம் டென்வர் பொட்டானிகல் கார்டன்..குளிர் காரணமாக வெளியில் இருக்கும் செடிகள் எல்லாம் ஏறக்குறைய வறண்டு காய்ந்து போய்க்கிடந்தன..ஆனாலும் அது ஒரு அழகாக இருந்தது..கருப்பும் அழகு, காந்தலும் ருசி போல!! :)
Denver Botanical Garden-இல் ஒரு இடத்தில் பெரிய கண்ணாடிக்கூரையுடன் கட்டங்கள் கட்டி உள்ளே டிராபிகல் கன்சர்வேட்டரி வைத்திருக்கிறார்கள். அங்கே வெயில் விரும்பும் செடிகொடிகள், மரங்கள், ஆர்க்கிட் பூக்கள் மற்றும் பற்பல பசுமை பூசிய தாவரங்கள்..கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தன. நம்ம வாழைமரம், பப்பாளி, பாக்கு மரம், வெனிலா பீன் கொடி உள்ளிட்டவற்றை காணமுடிந்தது.
மஞ்சக் கனகாம்பரம் குடும்பத்தைச் சேர்ந்த செடிதான் அது என நினைக்கிறேன்..பூக்கள் அழகாக இருந்தன. இன்னொரு புறம் ஆர்க்கிட் செடிகள் மட்டும் ஸ்பெஷலாக வளர்க்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருக்கும் ஆர்க்கிட் கண்காட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன..பல நிறங்களில் "பாயிண்ட் செட்டியா" செடிகள்..இது வரை சிவப்பு நிறம் மட்டுமே கண்டிருந்த கண்களுக்கு, ஆரஞ்சு பிங்க் மஞ்சள் வண்ணச்செடிகள் புதிது..அழகும் கூட!
புத்தரின் கை - என்ற பெயருடைய எலுமிச்சை வகை ஒன்றும் காண முடிந்தது..வித்யாசமான உருவுடன் இருந்த எலுமிச்சை உங்கள் பார்வைக்கு. கூடவே இணைப்பு - ஸ்வராவின் குட்டிக்கையின் குறும்பு!! :)
ஆக மொத்தம் சென்று வந்த பயணத்தின் சில துளிகளைப் பதிந்திருக்கிறேன்..பொறுமையாய்ப் பார்த்து/படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
2019 இன் ரெண்டாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் மகி...
ReplyDeleteஅமுதசுரபி, வாழ்த்துக்கள் மட்டும்தான் சொல்வீங்களோ?? பதிவைப் படிச்சுப்பாத்தீங்களோ இல்லையோ???
Deleteதொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிராவ்! ;) :)
நான்கு விரிவான இடுகைகளாகப் போட முடிந்ததை ஒரே இடுகையில்! :-)
ReplyDeleteபொய்ன்சேடியா... இப்போதான் இத்தனை நிறங்களின் காண்கிறேன். சிவப்பும் வெள்ளையும் பார்த்திருக்கிறேன்.
புத்தரின் கை - கூகுள் பண்ணி மீதி விபரம் அறிந்துகொண்டேன்.