அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இந்த ஆண்டின் முதல் பதிவாக, கடந்த ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்..எழுத விஷயங்கள் நிறைய இருந்தாலும் நடைமுறையில் அதை செயலாக்குவதில் இன்னும் தாமதங்கள் தொடர்வதால் இப்போதைக்கு ஃபோட்டோக்களை வைத்து ஒரு பதிவு. இந்த வலைப்பூ என் நினைவுகளைச் சேமித்து வைக்கும் இடமாக இருப்பதில் இது ஒரு வசதி.. :) :)
வருடக்கடைசியில் ஒரு வாரப் பயணமாக டென்வர் சென்றுவந்தோம். கலிஃபோர்னியாவிலேயே வளரும் குட்டீஸுக்கு ஸ்னோவைக் காட்டிவரலாமென்று திட்டம்..இங்கேயே நார்தர்ன் கலிஃபோர்னியா போயிருக்கலாம்..ஆனால் என்னவர் செலக்ட் செய்தது "டென்வர், கொலராடோ". கிறிஸ்மஸ் கெட்-டு-கெதர் ஒன்றை முடித்துவிட்டு அவசரஅவசரமாக குழந்தைகளுக்கு குளிருக்கேற்ற ஆடைகள், காலணிகள் வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.
அடுத்த நாள் டென்வர் மிருகக்காட்சி சாலைக்கு போனோம்..நுழைவாயில் அருகே நட்பான இரு மயில்கள் எல்லாருக்கும் முகமன் கூறியவண்ணம் நடைபயின்று கொண்டிருந்தன..ஒருவர் நைஸாக வெளியே எஸ்கேப் ஆகப்பார்க்க, மிருகக்காட்சி சாலை பணியாளர் செல்லமாக மிரட்டி உள்ளே அனுப்பினார்..மயிலாரும் புரிந்துகொண்டு நாய்க்குட்டியைப் போல உள்ளே ஓடிவந்துவிட்டார். :) அடிக்கிற குளிருக்கு இதமாக ஒட்டகச்சிவிங்கிகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே இருந்தார்கள். யானை, சிறுத்தை உள்ளிட்ட மற்ற ஆட்கள் எல்லாம் குளிரில் வெளியே!!
படத்தின் கடைசியில் இருப்பது Denver Capitol Hill ..கொலராடோ மாநிலத்தலைநகர் அமைந்திருக்கும் இக்கட்டிடத்தின் மேலே முகட்டில் பூசப்பட்டிருப்பது சொக்கத்தங்கம்! :) டென்வர் கடல் மட்டத்திலிருந்து ஒரு மைல் உயரத்தில் இருப்பதால் "Mile high city" என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த கேப்பிடல் ஹில்-லில் 13வது படியில் ஏறினால் மிகச்சரியாக கடல்மட்டத்திலிருந்து ஒரு மைல் உயரத்தில் இருப்பீர்கள்.
அங்கிருந்து டென்வர் ஆர்ட் கேலரிக்கு சென்றோம்..கணேஷா-வுக்கு என்று ஒரு அரங்கம் தனியாக இருந்தது.இந்தியா, கம்போடியா உள்ளிட்ட பலநாட்டுப் பிள்ளையார்கள் அமர்ந்திருந்தார்கள். பிள்ளையாரின் வயிற்றை தடவினால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் எழுதியிருந்தார்கள்..அது எனக்குப் புதிது. கூடவே சோழர் கால, சாளுக்கியர் காலச் சிற்பங்கள், நந்தி போன்றவையும் இருந்தன. ஆர்ட் கேலரிக்கு வரும் குழந்தைகள் போரடித்துப் போகாமலிருக்க அங்கே தனியாக ஒரு ஹாலும், ஹாலில் பேப்பர், க்ரேயான், பொம்மைகள், புத்தங்கள், க்விஸ் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களும் இருந்தன. ஆர்ட் கேலரியில் இருந்து வெளியே வருகையில் மெல்லிய பனிமழை..டென்வர் மிருகக்காட்சி சாலையில் க்றிஸ்மஸ் லைட் அலங்காரம் மிக அழகாக இருந்தது..அதனைப் பார்க்க தனியே ஒரு கட்டணம்..அந்தக் குளிரிலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை கூட்டம் கூட்டமாக வந்து ரசித்தனர். :)
US Mint, Denver விடுமுறைக்காலமாதலால் மூடப்பட்டிருந்தது. நாணயங்கள் அச்சடிக்கப்படும் இடம்..உள்ளே சென்று பார்க்க முடியாதது சிறு ஏமாற்றமே..நினைவுப்பொருட்கள் விற்கும் கடையில் ஒரு சுற்று சுற்றிவிட்டு அடுத்த இடமான Hammond's candy factory சென்றோம். ஏகத்துக்கும் விதம்விதமாக லாலிபாப் மற்றும் மிட்டாய் வகைகள். எங்க வீட்டு சின்னக்குட்டிதான் ரியல் "kid in a candy store"!! லாலிபாப் சுவைத்தவாறே ஃபேக்டரியின் உள்ளே நடக்கும் வேலைகளை நோட்டமிட்டோம். எல்லா மிட்டாய் வகைகளும் கைகளாலே செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. லாலிபாப், கேண்டி கேன், பலவகை கேரமல், சாக்லேட்டுகள்...கணக்கே இல்லை! டூர் முடிந்து வெளியே வருகையில் எல்லாருக்கும் கையில் ஒரு ஃப்ரீ லாலிபாப் தருகிறார்கள். இதனை முடித்து நாங்கள் சென்ற இடம் Garden of Gods Park. அந்தி மாலைச் சூரியன் மேற்கில் இறங்க, குளிர் காற்று எலும்பைத்துளைக்க கார்டன் ஆஃப் காட்ஸ்-ஐ அருகில் சென்று இறங்கி ரசிக்க இயலவில்லை..பாறைகளில் அழகழகான தோற்றங்கள் இயற்கையாகவே உருவாகியிருக்கின்றன. இன்ஃபர்மேஷன் செண்டரில் அதனைப்பற்றிய விவரங்கள் விளக்கமாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு திரைப்படமும் காட்டிகிறார்கள். அடுத்த முறை செல்லும்போது கோடைக்காலத்தில் செல்லவேண்டும் என்று குறித்துக்கொண்டோம். ;)
பதிவு நீளமாவதால்...தொடர்ச்சி அடுத்த பதிவில்.. நன்றி!
புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
ReplyDeleteபடிக்கவே மிக சுவாரஸ்யம்..அருமையான சுற்றுலா...
படங்கள் இன்னும் பெரிதாகா தனியா இருந்தா பார்க்க இன்னும் தெளிவா இருக்குமே...
கூட்டு படங்கள் அழகு தான் நீங்க சொன்ன உடன்.. உத்து உத்து பார்க்க வேண்டி உள்ளது அதான் ..
அனு, ஏகப்பட்ட படங்கள் இருக்கு..அதனாலதான் கொலாஜ் பண்ணி போட்டேன்..தனி விண்டோல ஓபன் பண்ணினா தெளிவா பார்க்கலாம்..
Deleteதனி படங்கள் தானே??..பாயிண்ட் நோட்டட்..மறுபடி இன்னொரு பதிவு போடறேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி டிடி அண்ணா!
Deleteமஹி சூப்பரா இருக்கு படங்கள் எல்லாம். வொயிட் சாக்கலேட் கிறிஸ்துமஸ் ட்ரீ வாவ்!
ReplyDeleteஅடுத்து எங்க போனீங்கன்னு பார்க்க ஆவல்...
ஆரஞ்ச் கவுண்டிதானா இப்பவும்...பர்த்டே ஃபோட்டோஸ் பார்த்ததும் சில நினைவுகள் வந்துச்சு...சூப்பர்மா..
குட்டீஸ் எஞ்சாய் பண்ணாங்களா?!
கீதா
கீதாக்கா, வாங்க! ஆமாம்..2010 ல இருந்து இங்கேயேதான் இருக்கோம். :)
Deleteட்ரிப் நல்லா இருந்தது..குட்டீஸ்க்கு ஒரே குஷி..நல்லதொரு ப்ரேக்-ஆக இருந்துச்சு. அந்த சாக்லேட் சிற்பங்கள் சான்ஸே இல்ல..தனி பதிவு போட முயல்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
படங்கள் அழகாக இருக்கு. அனு சொன்னமாதிரி பெரிதாக இருந்திருந்தால் க்ளியராக இருந்திருக்கும். க்றிஸ்மஸ் டைமில் எல்லாரும் இங்கு ஸ்னோவை எதிர்பார்ப்பாங்க. இப்பொழுது இல்லாமலே கடந்துவிட்டது .
ReplyDeleteநன்றி ப்ரியா, அடுத்த பதிவில் தனி புகைப்படங்கள் போட்டிருக்கேன்.
Deleteஇந்த வருஷம் உங்களுக்கு ஸ்னோ இல்லாத க்றிஸ்மஸா?? :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மஹி :)
ReplyDeleteசெல்லங்கள் பெரிசா வளர்ந்திட்டாங்க ..படங்கள் எல்லாம் அழகு
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா! ஆமாம்...ஆண்டுகள் றெக்கை கட்டிட்டு பறக்குதே!! :)
Deleteவருகைக்கும் கருத்துகும் நன்றிகள்!
இனிய புதுவருட வாழ்த்துக்கள் மகி, இப்புது வருடத்தில் தொடர்ந்து போஸ்ட் போட வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅமுதசுரபி அதிரா- உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!! ஹேப்பி நியூ இயர் டு யூ டூ!!
Deleteஅருமை! Keep blogging ! Our best wishes !
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர்..அடிக்கடி வாங்க!! :)
Deleteதூசு தட்டினது சந்தோஷம். இனிய புத்தாண்ன்டு வாழ்த்துக்கள் மஹி. அடுத்த போஸ்ட் சீக்கிரம் போடுங்க.
ReplyDelete//அடுத்த போஸ்ட் சீக்கிரம் போடுங்க.// கர்ர்ர்ர்ர்....இந்த கருத்தை நீங்க போடும்போதே அடுத்த பதிவுகள் வந்தாச்சு...ஃபேஸ்புக்ல இருந்து நேராஇந்த லிங்க்-க்கு வந்து கமெண்ட் போட்டுட்டு ஓடீருக்கீங்க!! :):)
Deleteரொம்ப சந்தோஷம்..அடிக்கடி வாங்கோ!!