முன்பே ஒரு பதிவில் உழவர் சந்தைக்குப் போய் வயலட் காலிஃப்ளவர் (purple cauliflower) வாங்கிவந்தது பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். வண்ணமயமான காலிஃப்ளவர் கிடைக்காவிட்டாலும், சாதா காஃலிப்ளவரிலும் இதே போன்ற குருமா செய்யலாம். நான் இதுவரை வெள்ளை-பச்சை-வயலட் மூணு கலரில் காலிஃப்ளவர்கள் வாங்கியிருக்கிறேன். இந்தக் காய் புதிதாக இருந்ததால் ருசி மிகவும் நன்றாக இருந்தது. இன்று காலிஃப்ளவரை எப்படி குருமாவில் உபயோகிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க. :)
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் பூக்கள் -7 (படம் 1-ல் உள்ள அளவு)
வெங்காயம்-1
தக்காளி-1
பச்சைமிளகாய்-1
இஞ்சி-பூண்டு தட்டியது - 1டீஸ்பூன்
கடுகு-1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி -1/4டீஸ்பூன்
கறி மசாலா பொடி-11/2டீஸ்பூன்
கரம் மசாலா பொடி-1/2டீஸ்பூன்
Half &Half milk -2 டேபிள்ஸ்பூன் (அல்லது) க்ரீம்-2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி- கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க
தேங்காய்த் துருவல் - 2டேபிள்ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு - கொஞ்சம்
செய்முறை
காலிஃப்ளவர் பூக்களை சுத்தம் செய்து அலசிவைக்கவும். பெரிய பூக்கள் எனில் ஒரே அளவான துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு, கடுகு பொரியவிடவும்.
நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தட்டிய இஞ்சி-பூண்டு சேர்த்து பச்சைவாடை போகும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, குழையும் வரை வதக்கவும்.
நறுக்கிய காலிஃப்ளவர் பூக்களை சேர்த்து பிரட்டவும்.
அரை கப் தண்ணீர் விட்டு தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.காய் முக்கால் பாகம் வெந்ததும்(சீக்கிரமாய் வெந்துவிடும், 4-5 நிமிடங்கள் கொதித்தால் போதுமானது) அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும். குருமா நன்றாக கொதித்ததும் half & half milk -ஐச் சேர்க்கவும். தீயைக் குறைத்து சர்க்கரையையும் சேர்த்து கலந்துவிடவும்.
2-3 நிமிடங்களுக்குப் பிறகு கரம் மசாலா பொடி மற்றும் மல்லித்தழை தூவி குருமாவை அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான க்ரீமி காலிஃப்ளவர் குருமா தயார். சப்பாத்தி, மற்றும் சாத வகைகள், இட்லி-தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமான குருமா இது.
~~~
Sending this recipe to "Passion on Plate" event happening at "En Iniya Illam"
~~~









