Monday, January 18, 2010

அவசரமாய் ஒரு குழம்பு


தேவையான பொருட்கள்
உங்களிடம் இருக்கும் எதாவது ஒரு காய் - சுமார் 100கிராம்
(நான் உபயோகித்திருப்பது பெங்களூர் கத்தரிக்காய்)
வெங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
எம்
.டி.ஹெச்.மெட்ராஸ் கறி பவுடர் - 1 1/2 ஸ்பூன்
தேங்காய்த்
துருவல் - 1 ஸ்பூன்
கடுகு
, சீரகம் - தலா 1/2 ஸ்பூன்
உப்பு- ருசிக்கேற்ப
கொத்துமல்லி
இலை - சிறிது

செய்முறை

காயை
தோல் சீவி, உள்ளே இருக்கும் விதைப்பகுதியை நீக்கி விட்டு நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில்
எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

காய் முக்கால் பாகம் வெந்ததும் தக்காளி மற்றும் கறி மசால் பொடியைச் சேர்த்து கொதிக்கவிடவும்.

இறுதியாக
ஒரு ஸ்பூன் தேங்காய்த் துருவல் சேர்த்து, (விரும்பினால்) அரை ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்து இறக்கவும். கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.





நிதானமாய்
குழம்பு வைக்க டைம் இல்லாதப்போ எனக்கு கை கொடுப்பது இந்த அவசர குழம்பு தான்..பிரிட்ஜ்- / ப்ரீசர்ல இருக்கும் ஏதாவது ஒரு காயைக் கொண்டு பத்து நிமிஷத்தில் செய்து விடலாம்..சாதம்,சப்பாத்தி,இட்லி,தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமாய் இருக்கும். எங்க வீட்டில் அடிக்கடி செய்வது பீன்ஸ் போட்டு...கட் செய்தே இருக்கும் ப்ரோசன் பீன்ஸ் இருந்தால் இன்னும் சீக்கிரமே வேலை முடிந்துவிடும். [என்ன ஒரு சோம்பேறித்தனம் என்று நீங்க முறைக்கிறது தெரியுது..ஹி,ஹி!!]

3 comments:

  1. அடடா எனக்கே எனக்குன்னு ஒரு குறிப்ப தந்திருக்கீங்க.. இத கண்டிப்பா செஞ்சுடுவோம்.. கவலையே வேண்டாம் :) பவுடர் இப்ப இல்ல.. வாங்கி வரனும்.. செஞ்சுட்டு சொல்றேன்..

    ReplyDelete
  2. wow..........

    ethupola oru blogsthan thedikitueruthenga....


    thank you so much mahi ma.

    daily unga disthan enga room mates vachu

    trial paka poren..

    thanks a lot.

    varuthapdtha vaasipor sangam
    complan surya

    ReplyDelete
  3. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி காம்ப்ளான் சூர்யா! செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails