Monday, January 25, 2010

பீட்ரூட் சட்னி

தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1 (மீடியம் சைஸ்)
வெங்காயம் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 5 அல்லது உங்கள் காரத்திற்கேற்ப
கடலைப் பருப்பு & உளுந்துப் பருப்பு - தலா 1 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
புளி - கொட்டைப்பாக்களவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு



செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி, துருவிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பை பொன்னிறமாகும்வரை வறுக்கவும்.

பின்னர் வெங்காயம்,மிளகாய்வற்றல், புளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் பீட்ரூட் துருவல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்.




ஆறியதும் தேவையான உப்பு,சிறிதளவு நீர் சேர்த்து கெட்டியாக அரைத்தெடுக்கவும்.



பீட்ரூட் சட்னி தயார்!

குறிப்பு
  • இந்த சட்னி சுடுசாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி,தோசை , சப்பாத்திக்கும் பொருத்தமாக இருக்கும்.
  • ப்ரெட் ஸ்லைஸ்களில் தடவி சாண்ட்விச் ஆகவும் சாப்பிடலாம்.
  • இதே போல் முட்டை கோஸ், குடை மிளகாய் போன்ற காய்களிலும் செய்யலாம்.

7 comments:

  1. மகி உங்கலுடைய தளம் சூப்பர்... வாழ்த்துக்கள்.

    பார்க்கும் போது சாப்பிடனும் தேனுது.

    ReplyDelete
  2. wow healthy chutney!! I do same like mullangki!

    ReplyDelete
  3. பிரபா,சாரு,சுஸ்ரீ தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி! மீண்டும் மீண்டும் வருக! :)

    ReplyDelete
  4. ரொம்ப டெம்ப்டேஷனா இருக்கு. :)

    ReplyDelete
  5. இதயும் சீக்கிரம் செஞ்சு பாக்கனும் மஹி.. நிறைய கடனிருக்கு செஞ்சு முடிக்க.. திருப்பி கேக்க மாட்டீங்களே :)

    ஆர்கைவ்ஸ் மாத்தினதுக்கு நன்றி.. ஈஸியா இருக்கு ரெண்டு நா கழிச்சு வந்தாலும்..

    ReplyDelete
  6. செய்து பாருங்க இமா. எங்க வீடு எலிக்கு மிகப் பிடித்தமான சட்னி இது.:)

    //திருப்பி கேக்க மாட்டீங்களே :)// நீ இப்படி சொல்லும்போதுதானே கேக்கணும்னு தோணுது!!!;)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails