Thursday, January 14, 2010

பாதுஷா

பாதுஷா..மிகச்சிலரைத் தவிர பெரும்பாலானவர்களின் விருப்பமான இனிப்பு ..சந்தேகமில்லாமல் நான் பெரும்பாலானவர் பக்கம்தான்! :)

இங்கே தென்னிந்திய இனிப்புகள் அதிகள் கிடைப்பதில்லை..இணையத்தின் உதவியோடு நான் செய்யும் மூன்றாவது பாதுஷா எக்ஸ்பெரிமென்ட் ...இது தான் பொங்கலுக்கு எங்க வீட்டு ஸ்வீட்! நல்லாயிருக்கா? :)


பாதுஷா
தேவையான பொருட்கள்
மைதா
மாவு / ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 11/4 கப்
பேக்கிங் சோடா - 1/4ஸ்பூன்
வெண்ணை - 115 கிராம்
சர்க்கரை - 1 1/2கப்
தண்ணீர்
- 1/4 கப்
கேசரி
பவுடர் - 1/4 ஸ்பூன்
எண்ணெய்
- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை

மைதாவுடன்
பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும்.

வெண்ணையை உருக்கிக்கொண்டு அதனுடன் சலித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசைந்து கொள்ளவும். [குறைந்தது 15 நிமிடம் :) ]

சர்க்கரையை பாத்திரத்தில் போட்டு ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். பாகு கொதி வர ஆரம்பித்த பின் ஏழு நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

பிசைந்த மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, ஓரொரு உருண்டையையும் உள்ளங்கைகளின் நடுவே வைத்து அழுத்தி பாதுஷா வடிவம் கொண்டு வரவும்.

மிதமான சூட்டில் எண்ணெயை காயவைக்கவும். சிறிதளவு மாவை எண்ணெயில் போட்டால் சிறிது நேரம் கழித்துத்தான் அது மேலே வர வேண்டும். அதுதான் சரியான பதம். அப்பொழுது எண்ணெய்ப் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி, பாதுஷாக்களை ஒன்றொன்றாக எண்ணெயில் போடவும்.

சிறிது நேரத்தில் அவை எண்ணெயில் மிதக்க ஆரம்பித்ததும் எண்ணெய்ப் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

பாதுஷாக்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். [ சுமார் 15-17 நிமிடங்கள் ஆகும்.]

பொரித்த பாதுஷாக்களை மிதமான சூட்டில் உள்ள பாகில் போட்டு பத்து நிமிடங்கள் ஊற விடவும். ஊறியதும் எடுத்து தட்டில் அடுக்கவும்.

2 ஸ்பூன் சர்க்கரையை ஒரு ஸிப்-லாக் கவரில் எடுத்து, அதனுடன் ஒரு துளி மஞ்சள், ஒரு துளி சிவப்பு நிறங்களை சேர்க்கவும். ஸிப்-லாக் கவரை லாக் செய்துகொண்டு வண்ணங்கள் சர்க்கரையுடன் சேரும்படி கலக்கவும்.
சர்க்கரைப்பாகு மீதமிருந்தால் பாதுஷாக்களின் மீது ஊற்றி விட்டு, கலர்ப்பொடி கலந்த சர்க்கரையை மேலே தூவி அலங்கரிக்கவும்.

ருசியான பாதுஷாக்கள் ரெடி!

குறிப்பு :
கொஞ்சம் நேரத்தையும்,பொறுமையையும் தாராளமாகச் சேர்த்தால் சுவையான பாதுஷாக்கள் சுவைக்கலாம்..மாவு பிசையும் நேரமும், பாதுஷாக்களை பொரிக்கும் நேரமும்தான் கொஞ்சம் நீளம்..ஆனால், பைனல் அவுட்கம்-ஐப் பாத்தீங்கன்னா, செலவு செய்த நேரம் வீணாகலைன்னு நீங்களே உணர்வீங்க!

Thanks to : http://jasu.wordpress.com/

14 comments:

  1. mahi,
    ungaloda padhusha super.paarkkum podhe pannanum pola irukku.

    ReplyDelete
  2. ப்ரியா, வருகைக்கு நன்றி!
    பாதுஷா ரொம்ப டேஸ்ட்டியா இருக்கும்..செஞ்சு பார்த்து சொல்லுங்க.

    ReplyDelete
  3. //செஞ்சு பார்த்து சொல்லுங்க.//

    இந்த வரிய எனக்கு போடற பதில்ல மட்டும் போட்டுடாதீங்க.. ஆமா, இப்பவே சொல்லிட்டேன் :)

    பொங்கல் ஸ்வீட்டா???????? :)))

    ReplyDelete
  4. சும்மா சொன்னேன்.. தனியா பண்ண முடியாது... இங்க யார் கூடவாவது சேர்ந்து செஞ்சு பாக்கறேன்..

    ReplyDelete
  5. பார்க்க ஆசையாத்தான் இருக்கு மஹி.
    அது எப்படி கலக்கலா ஒரு ட்விஸ்ட் விட்டிருக்கிறீங்க?

    ReplyDelete
  6. //பொங்கல் ஸ்வீட்டா???????? :)))// இத்தனை கேள்விக் குறிகளுக்கும், இவ்வளோ நீளமான சிரிப்பிற்கும் காரணம்???????????

    தீபாவளிக்கு பொங்கல் செய்யலாம்..ஆனா, பொங்கலுக்கு தீபாவளி செய்ய முடியாது மாதிரி ஏதாவது?? :)
    இந்த வீக் தான் உனக்கு கம்பெனி இருக்குமே..சுடச் சுடச் செஞ்சு சுவைக்கலாமே? :)

    இமா..அது எங்க வீட்டு பக்கத்து "லாலா ஸ்வீட்ஸ்" பாதுஷால வர ட்விஸ்ட்டு..ட்ரை பண்ணிப் பாத்தேன். நல்லாவே வந்தது..நீங்க எப்போ செய்யப் போறீங்க? விரைவில் செய்து பார்த்து சொல்லுங்க.

    தங்கள் இருவர் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  7. பொங்கல் ஸ்வீட்டா?பாதுஷா ம்ம் .



    நானும் ஒரு முறை இதை இனைய உதவியுடன் செய்து பார்த்து இருக்கேன் ஆனால் சுமாராக வந்தது

    இந்த முறையிலும் ஒரு முறை செய்து பார்த்துடுவோம்

    ReplyDelete
  8. இந்த முறைல செஞ்சு பாருங்க ஜலீலாக்கா! நிச்சயமா நல்லா வரும்! :)

    ReplyDelete
  9. ஹாய் மகி. பாதுஷா ரொம்ப நல்லா இருக்கு.இதற்க்கு உப்பில்லாத வெண்ணெய்தான் உபயோகிக்கனுமா? வெண்ணெய் அறை வெப்ப நிலையில் இருக்கனுமா

    ReplyDelete
  10. சபீக்கா, உங்கள் வருகைக்கும் என் தளத்தினைத் தொடர்வதற்கும் நன்றி!
    ஆமாங்க,உப்பில்லாத வெண்ணெய்தான் உபயோகிக்கணும்..வெண்ணெயை மைக்ரோவேவில் உருக்கிடரதால பிரிட்ஜ்ல இருந்து எடுத்த உடனே கூட உபயோகிக்கலாம். செய்து பார்த்து சொல்லுங்க.நன்றி!

    ReplyDelete
  11. ஹாய் மகி. மகி நா செய்த பாதுஷா எண்ணெய்ல பொரிக்கும்போதே கரஞ்சி போச்சி என்னக்காரணமா இருக்கும்.எங்க வீட்டுல இது பெரிய காமெடியா போச்சிங்க.ஆனா கேக்குனா நீங்க அனுப்புரதுதான் கேக். ஃப்ருட் கேக் ரொம்ப பிரமாதம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

    ReplyDelete
  12. சபீக்கா, மாவுல பேக்கிங் சோடா எதுவும் அளவு மாறியிருக்கும்ங்க..இல்லைன்னா வெண்ணை அதிகமா போட்டு பிசைந்திருக்கலாம்..இந்த ரெண்டு காரணம்தான் எனக்கு தோணுது.

    ஆர்வமா முயற்சித்து பார்த்ததுக்கு நன்றி..நான் நிறையத் தடவை செய்திருக்கேன்,சரியாதான் வந்தது..மறுபடியும் ட்ரை பண்ணிப்பாருங்க.நன்றி!

    ReplyDelete
  13. ஹாய் மகி. பதில் போட்டதுக்கு ரொம்ப நன்றி மகி. கண்டிப்பா திரும்பவும் முயற்சி செய்றேங்க.கேக்கிற்க்கு ஐசிங் செய்முரை உங்கலுக்கு தெரிந்தால் போடுங்கலேன். பலமுறை முயற்ச்சி செய்தும் எனக்கு ஐசிங் சரியாக வரலை.

    ReplyDelete
  14. பாதுஷா பொரிக்கும்போது எண்ணெய் சூடு ரொம்ப அதிகமாவோ இல்ல ரொம்ப குறைவாவோ இல்லாமலும் பார்த்துக்கோங்க..பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்! :)

    நான் இதுவரை செய்ததெல்லாமே பிளெயின் கேக் தாங்க சபீக்கா..என்னமோ தெரில, நான் இன்னும் ஐசிங் பக்கம் போகல..முயற்சித்தால் கண்டிப்பா ரெசிப்பி தரேன். நன்றிங்க!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails