Monday, February 22, 2010

வெஜிடபிள் ரவா கிச்சடி


தேவையான பொருட்கள்
வறுத்த ரவை - 1கப்
கேரட் -1
பீன்ஸ் - 7
பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
வெங்காயம் - 1
தக்காளி - சிறியது 1 (விரும்பினால்)
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 இன்ச் துண்டு
முந்திரி - 7
கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை - சிறிதளவு
உப்புசர்க்கரை - 3/4ஸ்பூன்
தண்ணீர்-21/2 கப் (அ) 3 கப் [ரவைக்கேற்ப தண்ணீர் அளவு மாறும். சிலது நிறைய தண்ணீர் பிடித்து வேகும்]
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1ஸ்பூன்

செய்முறை

வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி தக்காளியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கேரட் பீன்ஸ்-ஐ பொடியாக நறுக்கி, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மைக்ரோவேவில் நான்கு நிமிடம் வேகவைக்கவும். பின்னர் அத்துடன் பச்சைப்பட்டாணியைச் சேர்த்து ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு,உ.பருப்பு, முந்திரி, சீரகம் தாளிக்கவும்.

பக்கத்து அடுப்பில் 2கப் தண்ணீரை சூடாக்கவும்.

பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம்,பச்சைமிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை , மஞ்சள்தூள்,தக்காளி, உப்பு,சர்க்கரை சேர்த்து குழைய வதக்கவும்.

எல்லாம் நன்கு வதங்கியதும், தீயைக் குறைத்து ரவையை சேர்த்து மூன்று நிமிடங்கள் வறுக்கவும்.

வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

இதற்குள் பக்கத்து அடுப்பில் வைத்த தண்ணீர் கொதித்துக்கொண்டிருக்கும்..ரவை இருக்கும் அடுப்பின் தணலை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டு இந்த கொதிநீரை சேர்த்து கிளறவும்.

எல்லாம் நன்கு சேர்ந்தது வந்ததும் நெய் சேர்த்து கிளறி,மல்லி இலை தூவி இறக்கவும்.

வெஜிடபிள் ரவா கிச்சடி ரெடி..தேங்காய் சட்னி/சாம்பார் இதற்கு பொருத்தமாய் இருக்கும்.

குறிப்பு
ரவையை வெங்காயம் மிளகாயுடன் சேர்த்து வறுத்து விடுவதால் கட்டி தட்டும் வாய்ப்பு குறையும்.
கொதி நீரை ஊற்றும்போது ரவை வெந்து அங்கங்கே தெறிக்கும்..அதற்குதான் அடுப்பை குறைத்து வைப்பது. பின்னர் தணலை கொஞ்சம் அதிகரித்து இரண்டு நிமிடம் கிளறினால் போதும்.கிச்சடி ரெடி.

9 comments:

  1. மகி, இந்த ரெசிப்பிக்கு தக்காளி சேர்ப்பீர்களா? இந்த வீக்கென்ட் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

    ReplyDelete
  2. வானதி, பொதுவா தக்காளி சேர்க்க மாட்டாங்க.
    கைல கிடைப்பதெல்லாம் அள்ளிப் போட வேண்டியதுதானே
    என் வேலை? அதான் போட்டுட்டேன்..நல்லா இருந்தது.
    நீங்களும் செஞ்சு பாருங்க, நன்றி!

    நன்றி சாரு!

    ReplyDelete
  3. ஹை.. இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கே.. நாங்கெல்லாம் தண்ணி கொதிக்க வச்சு அதுல தான ரவைய சேர்ப்போம்? :))

    ReplyDelete
  4. /நாங்கெல்லாம் தண்ணி கொதிக்க வச்சு அதுல தான ரவைய சேர்ப்போம்? :))/
    சரி..சரி..ஒத்துக்கிறோம்..நீங்களும் சமைப்பீங்கன்னு! :) :)

    தண்ணில ரவைய போடும்போது சம் டைம்ஸ் கட்டி கட்டியா ஆகும்..இப்படி செய்யறது சில வருஷம் முன்னால அவள் விகடன்-ல வந்த டிப்ஸ். அடுத்த முறை செஞ்சு பாரு..வித்யாசம் தெரியும்.

    ReplyDelete
  5. //சரி..சரி..ஒத்துக்கிறோம்..நீங்களும் சமைப்பீங்கன்னு! :) :)//

    ;)))))))))))))

    ReplyDelete
  6. சிரிக்காதீங்கோ இமா :( நானும் சமைப்பேன்.. உங்களையும் ஒரு நா அதை சாப்பிட வைப்பேன் :)

    ReplyDelete
  7. எ.கொ.ச.இ!
    அண்ணி & தண்ணி தண்ணில ரவை ஊத்தற... சாரி, ரவைல தண்ணி ஊத்தற சம்பாஷணையை ரசிச்சு சிரிச்சா இப்பிடி கோச்சுக்கறீங்களே!

    ReplyDelete
  8. :-) இந்தியாவிற்குப் போய் முதலில் ருசித்தது ரவா கிச்சடிதான். இப்போ குறிப்பைக் கண் முன் காட்டி ஆசையைத் தூண்டுறீங்க. விடுமுறையில் ஒரு நாள் சமைக்கப் போகிறேன். :-))

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails