Sunday, February 28, 2010

வெங்காயச் சட்னி

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் - கால்மூடி
கடலைப் பருப்பு - 1டேபிள்ஸ்பூன்
புளி - சிறிய கோலிக்குண்டளவு
கறிவேப்பிலை - 7இலைகள்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் -2 ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

எண்ணெய் சூடாக்கி கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும்.

சோம்பு, கறிவேப்பிலை, மிளகாய், நறுக்கிய வெங்காயம், புளி இவற்றை வரிசையாக சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி ஆறவைக்கவும்.

கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும்.

சோம்பு வாசனையுடன் சுவையான வெங்காயச் சட்னி ரெடி..இட்லி,தோசை,சப்பாத்தி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.

குறிப்பு
  • சோம்பிற்கு பதிலாக சீரகம் சேர்த்து செய்யலாம்.
  • தேங்காய், கடலைப் பருப்பு சேர்க்காமலும் செய்யலாம்..ஆனால் சட்னி quantity கிடைக்காது...எனவே நிறைய்ய்ய்ய வெங்காயம் வதக்கி அரைக்க வேண்டும்.:)
  • சின்ன வெங்காயம் / ரெட் ஆனியன் இவற்றில் செய்தாலும் சுவையாக இருக்கும்.

5 comments:

  1. Super onion chutney. This goes well with dosa as well as idli. Loved ur version too. Step by step clicks are very good.

    Chitchat
    http://chitchatcrossroads.blogspot.com/

    ReplyDelete
  2. நானும் இப்படி தான் செய்வேன் ஆனால் சோம்பு சேர்த்தது இல்லை , கொஞ்சம் கொத்தமல்லி தலை வச்சு அரைப்பேன் .

    ReplyDelete
  3. நன்றி மஹி....நானும் இப்படிதான் செய்வேன் சாரு சொன்னமாதிரி நானும் சோம்பு சேர்க்க மாட்டேன்.அடுத்தமுரை உங்களைப்போல சோம்பு சேர்த்து பார்க்கரேன்.

    ReplyDelete
  4. Mahi, I am going to try this recipe this week. Looks yummy!!

    ReplyDelete
  5. நன்றி சிட்சாட்..கரெக்ட்டா சொன்னீங்க..இட்லி தோசைக்கு சூப்பர் மேட்சா இருக்கும்.

    நானும் ஒரு முறை சோம்பு சேர்ப்பேன்..அடுத்த டைம் சீரகம் சேர்ப்பேன்.சோம்பு சேர்த்துப் பாருங்க சாரு & கொய்னி..ஒரு சேஞ்சா இருக்கும். நன்றி!

    வானதி..செய்து பாத்து சொல்லுங்க.நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails