சமீபத்தில் ஒரு நாள்,என் கேமராவில் சிறைப்பட்ட வண்ணத்துப்பூச்சி...வயலட் பூக்கூட்டத்தில் கொஞ்சம் தேனை ருசித்துவிட்டு..
மற்றொரு மலரைத் தேடித் திரும்புகையில் ஒரு நொடி..
அடடா...அவுட் ஆப் ஃபோகஸ்! பூவை விட்டு புல்லை ஃபோகஸ் பண்ணிட்டேன். :)
மனம்தளராமல்,பொறுமையாகக் காத்திருந்ததில்..
மனிதனின் மறுபக்கம் போல, வண்ணத்துப்பூச்சியின் மறுபக்கம்.. :)
எந்தப்பக்கம் பார்த்தாலும் அழகு அழகுதான்! நீங்க என்ன சொல்லறீங்க?!
Monday, January 31, 2011
Tuesday, January 25, 2011
எம்ப்ராய்டரி
பள்ளியில் படிக்கும்போது பத்தாம் வகுப்பு வரை,வாரம் ஒருநாள் ஒரு பீரியட் தையல் க்ளாஸ்/பாட்டு க்ளாஸ் இருக்கும். (அடுத்து பாட்டு பாடி ஒரு போஸ்ட் பண்ணிருவேன்னு பயப்படாதீங்க,எனக்கு பாட்டெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது,ஹிஹி).க்ளாஸ்ல இருக்கும் பொண்ணுங்கள்ல பாதிப்பேர் பாட்டு க்ளாஸுக்கும்,மீதிப் பேர் தையல் க்ளாஸுக்கும் போகணும்,அடுத்தவாரம் ஆல்டர்னேட் பண்ணிக்கணும்.
பாட்டு க்ளாஸுக்கு ஒரே ஒரு பாட்டு நோட்டு மட்டும் கொண்டுபோனாப்போதும். பாட்டு டீச்சர் வந்து ஒரு பாட்டு சொல்லித்தருவாங்க. எல்லாரும் டீச்சர் பின்னாலயே கும்பலா கத்திட்டு(!),போர்டுல எழுதிப்போட்ட பாட்டை காப்பி பண்ணிக்குவோம்,அவ்ளோதான்! ஆனா தையல் க்ளாஸுக்கு குட்டியா ஒரு ஒயிட் க்ளாத்(கர்ச்சீஃப் தைப்பதுதான் ஆரம்பம்),ஊசி,சிவப்பு-பச்சை-மஞ்சள் எம்ப்ராய்டரி நூல் இப்படி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் கொண்டுபோகணும்.
இதைவிட காமெடி என்னனா, மாசத்துல 2 முறைதான் தையல் க்ளாஸ் வரும், இடையில் ஏதாவது லீவ் வந்தா இன்னும் காமெடியாகிடும்,எந்த க்ரூப் பாட்டு க்ளாஸ்-எந்த க்ரூப் தையல் க்ளாஸுன்னு சண்டையே போடுவோம். ஏன்னா அன்னிக்கின்னு பார்த்து தையலுக்கு தேவையானதை எடுத்துட்டுப்போக மறந்துட்டுப்போயிருப்போம்,டீச்சர்கிட்ட திட்டு வாங்கணுமே!!:) அது ஒரு அழகிய கனாக்காலம்!
எம்ப்ராய்டரி எனக்கு மிகவும் பிடிக்கும்.வானதி ப்ளாக்ல வர எம்ப்ராய்டரிகளைப் பார்த்து என் மனசுக்குள்ள புதைந்து கிடந்த எம்ப்ராய்டரி ஆசை விழித்துக்கொண்டது. ஒருவழியா நானும் ஒரு குட்டி எம்ப்ராய்டரி பண்ணிட்டேன். :) இது ஃபெல்ட் க்ளாத்தில் செய்த எம்ப்ராய்டரி..
தேவையான டிஸைனை பேப்பரில் ட்ரேஸ் பண்ணி,பேப்பரை ஃபெல்ட் க்ளாத்துடன் சேர்த்துவைத்து..
ரன்னிங் ஸ்டிச் மூலமா முழு டிஸைனையும் தைச்சு முடித்தேன்.
அதன் பின்னர் பேப்பரை துணியிலிருந்து கிழித்து எடுத்துவிட்டு..
சங்கிலித்தையல் (chain Stitch), காம்புத்தையல் (Stem Stitch), அடைப்புத்தையல் (Filling Stitch) இவற்றால் டிஸைனை முழுக்கத் தைத்து முடித்தேன்.
பூக்களில் சங்கிலித்தையல் அவுட்லைனும், உள்ளே லேட்டிஸ் வொர்க் (Lattice Work) ஃபில்லிங்கும்..
இத்துடன் இந்த டிஸைன் முடிந்திருக்க வேண்டியது..என்னவரின் வேண்டுகோளுக்கிணங்க(!!) இலைகளையும் ஃபிஷ்போன்(Fishbone) ஸ்டிச் மூலம் ஃபில் பண்ணியதில்..
..இப்படியாக நிறைவுபெற்றது.

லேட்டிஸ் வொர்க்,ஃபிஷ் போன் ஸ்டிச் இரண்டையும் கற்றுக்கொள்ள இந்தத்தளம் மிகவும் உதவியாக இருந்தது. இந்த டிசைனும் அங்கிருந்து கிடைத்ததுதான். அதுபோக வானதியிடம் அவ்வப்பொழுது குட்டிக்குட்டி சந்தேகங்களுக் கேட்டுக்கொண்டேன்,தைத்து முடித்ததும் போட்டோவும் அனுப்பினேன். ப்ளாகில் போடுங்கோ என்று வானதி தந்த தைரியத்திலே இங்கே போஸ்டும் பண்ணிட்டேன்.எம்ப்ராய்டரியில் ஆர்வம் உள்ள யாருக்காவது இந்தப்பதிவு உபயோகமாய் இருந்தால் மகிழ்ச்சி. :)
Friday, January 21, 2011
ரசம்
தென்னிந்திய உணவுகளில் மிக முக்கியமான ஒன்று ரசம்..சிறு குழந்தைமுதல் முதியவர் வரை எல்லாரும் சாப்பிடலாம்,எளிதில் ஜீரணமாகும், சளி-காய்ச்சல் வந்தவர்களுக்கு உடல்நலம் தேற உதவும்.குழம்பு வைக்க நேரமில்லாத/வசதியில்லாத சமயங்களில் கை கொடுக்கும். .சிலருக்கு உணவில், சாதமும் ரசமும் இருந்தா போதும்,வேற எதுவுமே வேண்டாம் என்பாங்க! ரசம் இல்லாமல் எந்த விருந்தும் கம்ப்ளீட் ஆகாது. இப்படி பல்வேறு சிறப்புகள் ரசத்துக்கு இருந்தாலும், சிறுவயது முதலே எனக்கென்னமோ ரசத்தில் அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை.குழம்பிலிருந்து நேரா தயிருக்கு தாவிடுவேன்..பலமுறை வம்பு பண்ணி ரசம் ஊத்தி சாப்பிடவைப்பாங்க..ரசம் சாப்பிடாம இருக்கறதுக்காக அம்மாகிட்ட பலநாள் திட்டு வாங்கியிருக்கேன்.
வெறும் ரசம் என்பது வெறும் தக்காளி-புளித்தண்ணீர் சேர்த்து செய்வது..பருப்பு ரசம்னா தக்காளி-புளியுடன் பருப்புவேகவைச்ச தண்ணீர் ஊற்றி செய்வது.பருப்புரசம் அதிசயமா எப்பவாவது சாப்பிடுவேன்,வெறும் ரசம்னா திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். இப்படியாக ரசத்தை ஒதுக்கிவைத்தே பலவருஷங்கள் ஓடிவிட்டன.
கல்யாணம் முடிந்ததும்தான் எனக்கு காத்திருந்தது ஆப்பு!!! என்னவருக்கு ரசம் இல்லைன்னா சாப்பாடே தேவையில்லைங்கற ரேஞ்சுல இருந்தார்..எனக்கோ ரசம் வைப்பது பற்றி A,B,C,D கூடத்தெரியாது. எங்க வீட்டிலே சாம்பார்ப்பொடி,ரசப்பொடின்னெல்லாம் கிடையாது,சீரகம்-மிளகு-பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைப்பாங்க. முதல் சில நாட்கள் போராட்டமாய் இருந்தது..கிச்சனே புதுசு, கபோர்ட் முழுக்க பல்வேறு பொடிகள்..அதுவும் எல்லாம் ஒரே மாதிரியா வேற இருக்குது! பல நாட்கள் சாம்பார் பொடியைப் போட்டே ரசம் வைத்திருப்பேன்னு நினைக்கிறேன்.
இந்த 2 வருஷத்திலே சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்வது போல, மெல்ல மெல்ல ரசம் வைத்துப் பழகிட்டேன்..நண்பர்கள் பலருக்கும் எங்க வீட்டு ரசம் மிகவும் பிடிக்கும்,என்னவரும் ஆஹா-ஓஹோன்னு பாராட்டுவார்..அவ்வளவு ஏன்,எனக்கே ரசம் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுன்னா பாருங்களேன்! :) அப்பப்ப நினைத்துப் பார்த்துக்குவேன்,எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்!??!!
முன்குறிப்பு :
இது இந்த 2 வருஷங்கள்ல நானா டெவலப் பண்ணிகிட்ட முறை..தப்புகள்-தவறுகள் இருக்கலாம்..கிச்சன் கிங்ஸ்-க்வீன்ஸ் எல்லாம் அவற்றைக் கண்டுகொள்ளாமல் படிங்க என்று அன்புடன் கேட்டுக்கொல்கிறேன்.;)
வெறும் ரசம் வைக்கலாம் முதல்ல...ஒரு தக்காளி-கொஞ்சம் புளி-கொஞ்சம் தண்ணி (அளவெல்லாம் குத்துமதிப்பா போட்டுக்குங்க)
இவற்றை ஒரு மைக்ரோவேவ் ஸேஃப் பாத்திரத்தில் எடுத்து 5-6 நிமிஷம் மைக்ரோவேவில் வேகவைச்சு ஆற வையுங்க. (இதை மைக்ரோவேவ்லதான் வைக்கோணும்னு இல்ல,அடுப்பிலேயும் வைச்சு வேகவைக்கலாம்)
நல்லா ஆறினதும், அதை கரைச்சுக்குங்க..
பாத்திரத்தில் துளியூண்டு எண்ணெய் காயவைத்து (இந்த இடத்தில இன்னொரு விஷயம் நினைவு வருது..நெய்ல தாளிச்சா நல்லா மணமா இருக்கும்னு ஒரு ரமணி சந்திரன் கதைல படிச்சிருக்கேன்,நான் இதுவரை செய்ததில்ல,நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க.)
அவ்வ்வ்வ்வ்வ்! கத சொன்னதுல எண்ணெய் காஞ்சு புகையே வந்துடுச்சு பாருங்க..சமைக்கும்போது இப்படியெல்லாம் கத பேசாம கவனமா சமைக்கோணும்.ஓக்கை? கடுகு-சீரகம்-பெருங்காயம்-கறிவே ப்பிலை தாளிச்சு,ஒரு சின்னப் பல்லு பூண்டைத் தட்டிப்போட்டு வதக்கி,கரைச்சு வச்ச தக்காளி-புளித்தண்ணியை ஊத்தி (புளிச்சக்கையை கையாலே அப்படியே வடிகட்டிடுங்க), மஞ்சப்பொடி-மிளகாப்பொடி-உப்பு போடுங்க.
அப்புறமா, ஊர்ல இருந்து கொண்டுவந்து ஃப்ரீஸர்ல ஒரு வருஷமா(!) வச்சிருக்கும் ரசப்பொடியோ, இல்ல உங்க கைவசம் இருக்கற ரசப்பொடியோ கொஞ்சம் போடுங்க. போட்டோவப் பாத்தா உங்களுக்கே தெரியும், எல்லாப்பொடி வகைகளும் ஒரு குத்து மதிப்பாதேன் போடறேன்னு..ஹிஹிஹி!
ரசத்த கொதிக்க விடக்கூடாது,அதனால அடுப்பை மிதமான சூட்டில வையுங்க. ரசம் நுரை கட்ட ஆரம்பிச்சதும் தணலை குறைத்து, கொஞ்சூண்டு சர்க்கரை போட்டு, கொத்துமல்லித்தழை போட்டு அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.
பருப்பு ரசம் வைக்கறதுக்கு, பருப்பு வேகவச்ச தண்ணியை வடிகட்டி(அதுக்கப்புறம் அந்த பருப்பிலே ருசி குறைஞ்சு போகும்,அதையும் பாத்துக்குங்க.) தக்காளி-புளி வேகவைச்சு கரைச்சு வைச்சது கூட இந்த பருப்புத்தண்ணியையும் சேத்துக்கோங்க,அம்புட்டுதான்!
பின்குறிப்பு:
பொதுவாவே எல்லா விஷயத்திலும் எனக்கு கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸுன்னு, +2 படிச்சப்ப எங்க தமிழ் வாத்தியார்கிட்ட சர்ட்டிபிகேட் வாங்கிருக்கேனுங்க,அது சமையல்ல கொஞ்சம் தூக்கலாவே தெரியும்.என்ன சமைச்சாலும், உப்பு சரியா இருக்கான்னு ருசி பாக்கவே மாட்டேன்.இதுவரை எல்லாமே கிட்டத்தட்ட கரெக்ட்டாவேதான் இருக்கும். சரி,இப்ப எதுக்கு இந்த சுயபுராணம்னு கேக்கறீங்களா? ஓக்கே,ஸ்டாப் பண்ணிட்டு பாயிண்டுக்கு வரேன்.
சமைக்கும் உணவு வகைகள்ல உப்பு கரெக்ட்டா போட்டம்னாதான் நல்ல மணம் வருமாம்,உப்பு கம்மியா இருந்தா சாம்பாராகட்டும்,ரசம்,புளிக்கு ழம்பு,பொரியல் எதுவா இருந்தாலும் வாசனை வராதுன்னு எப்பவோ ஒரு புத்தகத்திலே படித்திருக்கேன். அந்த டெக்னிக்கைக்தான் நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். உப்பு கம்மியா இருந்தா வாசனை வராது சரி, அதிகமா போனா என்னாகும்?-னு எடக்கு மடக்கா கேள்வி கேட்டுடாதீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்! :)
வெறும் ரசம் என்பது வெறும் தக்காளி-புளித்தண்ணீர் சேர்த்து செய்வது..பருப்பு ரசம்னா தக்காளி-புளியுடன் பருப்புவேகவைச்ச தண்ணீர் ஊற்றி செய்வது.பருப்புரசம் அதிசயமா எப்பவாவது சாப்பிடுவேன்,வெறும் ரசம்னா திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். இப்படியாக ரசத்தை ஒதுக்கிவைத்தே பலவருஷங்கள் ஓடிவிட்டன.
கல்யாணம் முடிந்ததும்தான் எனக்கு காத்திருந்தது ஆப்பு!!! என்னவருக்கு ரசம் இல்லைன்னா சாப்பாடே தேவையில்லைங்கற ரேஞ்சுல இருந்தார்..எனக்கோ ரசம் வைப்பது பற்றி A,B,C,D கூடத்தெரியாது. எங்க வீட்டிலே சாம்பார்ப்பொடி,ரசப்பொடின்னெல்லாம் கிடையாது,சீரகம்-மிளகு-பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைப்பாங்க. முதல் சில நாட்கள் போராட்டமாய் இருந்தது..கிச்சனே புதுசு, கபோர்ட் முழுக்க பல்வேறு பொடிகள்..அதுவும் எல்லாம் ஒரே மாதிரியா வேற இருக்குது! பல நாட்கள் சாம்பார் பொடியைப் போட்டே ரசம் வைத்திருப்பேன்னு நினைக்கிறேன்.
இந்த 2 வருஷத்திலே சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்வது போல, மெல்ல மெல்ல ரசம் வைத்துப் பழகிட்டேன்..நண்பர்கள் பலருக்கும் எங்க வீட்டு ரசம் மிகவும் பிடிக்கும்,என்னவரும் ஆஹா-ஓஹோன்னு பாராட்டுவார்..அவ்வளவு ஏன்,எனக்கே ரசம் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுன்னா பாருங்களேன்! :) அப்பப்ப நினைத்துப் பார்த்துக்குவேன்,எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்!??!!
முன்குறிப்பு :
இது இந்த 2 வருஷங்கள்ல நானா டெவலப் பண்ணிகிட்ட முறை..தப்புகள்-தவறுகள் இருக்கலாம்..கிச்சன் கிங்ஸ்-க்வீன்ஸ் எல்லாம் அவற்றைக் கண்டுகொள்ளாமல் படிங்க என்று அன்புடன் கேட்டுக்கொல்கிறேன்.;)
வெறும் ரசம் வைக்கலாம் முதல்ல...ஒரு தக்காளி-கொஞ்சம் புளி-கொஞ்சம் தண்ணி (அளவெல்லாம் குத்துமதிப்பா போட்டுக்குங்க)
இவற்றை ஒரு மைக்ரோவேவ் ஸேஃப் பாத்திரத்தில் எடுத்து 5-6 நிமிஷம் மைக்ரோவேவில் வேகவைச்சு ஆற வையுங்க. (இதை மைக்ரோவேவ்லதான் வைக்கோணும்னு இல்ல,அடுப்பிலேயும் வைச்சு வேகவைக்கலாம்)
நல்லா ஆறினதும், அதை கரைச்சுக்குங்க..
பாத்திரத்தில் துளியூண்டு எண்ணெய் காயவைத்து (இந்த இடத்தில இன்னொரு விஷயம் நினைவு வருது..நெய்ல தாளிச்சா நல்லா மணமா இருக்கும்னு ஒரு ரமணி சந்திரன் கதைல படிச்சிருக்கேன்,நான் இதுவரை செய்ததில்ல,நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க.)
அவ்வ்வ்வ்வ்வ்! கத சொன்னதுல எண்ணெய் காஞ்சு புகையே வந்துடுச்சு பாருங்க..சமைக்கும்போது இப்படியெல்லாம் கத பேசாம கவனமா சமைக்கோணும்.ஓக்கை? கடுகு-சீரகம்-பெருங்காயம்-கறிவே
அப்புறமா, ஊர்ல இருந்து கொண்டுவந்து ஃப்ரீஸர்ல ஒரு வருஷமா(!) வச்சிருக்கும் ரசப்பொடியோ, இல்ல உங்க கைவசம் இருக்கற ரசப்பொடியோ கொஞ்சம் போடுங்க. போட்டோவப் பாத்தா உங்களுக்கே தெரியும், எல்லாப்பொடி வகைகளும் ஒரு குத்து மதிப்பாதேன் போடறேன்னு..ஹிஹிஹி!
ரசத்த கொதிக்க விடக்கூடாது,அதனால அடுப்பை மிதமான சூட்டில வையுங்க. ரசம் நுரை கட்ட ஆரம்பிச்சதும் தணலை குறைத்து, கொஞ்சூண்டு சர்க்கரை போட்டு, கொத்துமல்லித்தழை போட்டு அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.
பருப்பு ரசம் வைக்கறதுக்கு, பருப்பு வேகவச்ச தண்ணியை வடிகட்டி(அதுக்கப்புறம் அந்த பருப்பிலே ருசி குறைஞ்சு போகும்,அதையும் பாத்துக்குங்க.) தக்காளி-புளி வேகவைச்சு கரைச்சு வைச்சது கூட இந்த பருப்புத்தண்ணியையும் சேத்துக்கோங்க,அம்புட்டுதான்!
பின்குறிப்பு:
பொதுவாவே எல்லா விஷயத்திலும் எனக்கு கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸுன்னு, +2 படிச்சப்ப எங்க தமிழ் வாத்தியார்கிட்ட சர்ட்டிபிகேட் வாங்கிருக்கேனுங்க,அது சமையல்ல கொஞ்சம் தூக்கலாவே தெரியும்.என்ன சமைச்சாலும், உப்பு சரியா இருக்கான்னு ருசி பாக்கவே மாட்டேன்.இதுவரை எல்லாமே கிட்டத்தட்ட கரெக்ட்டாவேதான் இருக்கும். சரி,இப்ப எதுக்கு இந்த சுயபுராணம்னு கேக்கறீங்களா? ஓக்கே,ஸ்டாப் பண்ணிட்டு பாயிண்டுக்கு வரேன்.
சமைக்கும் உணவு வகைகள்ல உப்பு கரெக்ட்டா போட்டம்னாதான் நல்ல மணம் வருமாம்,உப்பு கம்மியா இருந்தா சாம்பாராகட்டும்,ரசம்,புளிக்கு
Wednesday, January 19, 2011
சாப்பிட வாங்க!
கடந்த பதிவில் இந்த வலைப்பூவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
மாட்டுப்பொங்கலன்று ( ஊர்ல காணும் பொங்கல் ஆகிட்டது:)) நண்பர்களுடன் இதோ,இந்தப் பனிமலைக்கு போயிட்டு வந்தோம்.பனி அந்தளவுக்கு இல்லை என்றாலும் பெரிய கும்பலா போனதால ட்ரிப் மிகவும் நல்லா இருந்தது.எல்லாரும் கொண்டுவந்திருந்த உணவு வகைகளை ஒரு கை பார்த்தோம்.. :)
குளிர்ல இந்த டேங்கி லெமன் ரைஸ் சூப்பரா இருந்தது. முதல் படமும் கேக்கை நண்பர்கள் எல்லாருக்கும் கொடுக்கும்பொழுது எடுத்ததுதான்.
அப்புறம் இந்த ரெஸார்ட்டில் போய் கொஞ்சம் ஸ்னோ கேம்ஸ் விளையாடிவிட்டு வீடுவந்து சேர்ந்தோம்.
~~~
பொங்கலுக்கு கேக்கோட விட்டுட்டேனான்னுதானே கேக்க வந்தீங்க? இல்லல்ல,பொங்கலும் பண்ணிட்டேன். :)ஓட்ஸ் வெண்பொங்கலும்,பார்லி சர்க்கரைப் பொங்கலும் செய்தேன், நீங்களும் செய்து பாருங்க.அவற்றின் ரெசிப்பி இங்கே..
~~~
பொங்கல் என்றதும் என்னவருக்கு இந்த வீடியோவின் நினைவு வந்துவிட்டது..இது ஏஷியன் பெயிண்ட்டின் விளம்பரம்..சிலபல வருஷங்களின் முன்பு பொங்கல் சமயத்தில் வந்தது..ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் மிகவும் நன்றாக இருக்கும். நாங்கள் ரசித்தது,நீங்களும் ரசிக்க..Thursday, January 13, 2011
பொங்கல் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட ஆதவன் அருள் புரியட்டும்! அறுவடைத் திருநாள்-மாட்டுப் பொங்கல்-காணும் பொங்கல் என எல்லா நாட்களும் மகிழ்ச்சி நிலவ வாழ்த்துக்கள்!
வீடெல்லாம் ஒட்டடை அடித்து, பூசி (ஒயிட் வாஷ்..வெள்ளை அடிக்கிறதுங்க..),
வளித்து(சாணமிட்டு மெழுகுவது),முறுக்கு சுட்டு,லட்டு பிடித்து, மைசூர்பா கிளறி..அப்பாடின்னு ஓய்ந்து ஒரு நிமிஷம் உட்கார நேரமில்லாம பொங்கலன்னிக்கு காலங்காத்தால எழுந்து வாசல் தெளித்து,கோலமிட்டு,கோலத்தில வண்ணப்பொடிகள் இட்டு, புத்தரிசியில் பொங்கல் வைக்கப்போகும் எல்லாருக்கும் "பொங்கலோ பொங்கல்!!" வாழ்த்துக்கள்!
எல்லார் வீட்டிலும்(ப்ளாகிலதானுங்க!:) ) சர்க்கரைப்பொங்கலையே பார்த்திருப்பீங்க, ஃபார் எ சேஞ்ச்..எங்க வீட்டிலிருந்து எல்லாருக்கும் 'பனானா-வால்நட் கேக்' குடுக்கிறோம்! :)
தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா -11/4கப்
சர்க்கரை-1/2கப்
ஒன்றிரண்டாக உடைத்த வால்நட்-1/2கப்
கனிந்த வாழைப்பழம்-2
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/2டீஸ்பூன்
முட்டை(அறை வெப்பநிலையில்)-2
வெண்ணை(அறை வெப்பநிலையில்)-4டேபிள்ஸ்பூன்
பால்(அறை வெப்பநிலையில்)-1/4கப்
வெனிலா எஸன்ஸ்-1டீஸ்பூன்
பட்டை தூள்(சின்னமன் பவுடர்)-1/4டீஸ்பூன்
செய்முறை
மைதாவுடன் பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர்,சின்னமன் பவுடர் சேர்த்து 2-3 முறை சலித்து வைக்கவும்.
முட்டையில் வெள்ளைக்கரு-மஞ்சள்கரு தனித்தனியாகப் பிரித்து வைக்கவும்.
வெண்ணையுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் முட்டையின் மஞ்சள் கருக்கள்,வெனிலா எஸென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
சலித்து வைத்த மாவு மற்றும் பாலை, வெண்ணை-சர்க்கரை கலவையுடன் சிறிதுசிறிதாக சேர்த்து மெதுவாக கலக்கவும். மாவு-பால்-மாவு-பால் என்ற வரிசையில் கலக்கவும்.
வாழைப்பழங்களை பீட்டரால் நன்றாக மசித்து மாவுக்கலவையுடன் சேர்க்கவும்.
முட்டையின் வெள்ளை கருக்களையும் நன்கு நுரை பொங்க கலந்து மாவுடன் சேர்த்து எல்லாம் ஒன்று சேரும்படி நன்றாக கலந்துவிடவும்.
இறுதியாக உடைத்த வால்நட்-டை சேர்த்து கலக்கவும்.
வெண்ணை தடவிய பேக்கிங் பாத்திரத்தில் கேக் கலவையை ஊற்றி..
350F ப்ரீஹீட் செய்யப்பட்ட அவன்-ல் 45 முதல் 50 நிமிடங்கள் பேக் செய்யவும்.
பனானா-வால்நட் கேக் ரெடியாகிடுச்சு..2 மணிநேரம் ஆறவைத்த பின்னர், பேக்கிங் பான்-லிருந்து கேக்கை எடுத்து வைச்சிருங்க. இனி என்ன,கேக்கை வெட்ட வேண்டியதுதான்!
யாரோ 'ஹேப்பி பர்த்டே டு யூ!' பாடறீங்க போல இருக்குது?!! தேங்க் யூ,தேங்க் யூ வெரிமச்! போனவருஷம் இதே நாளில்தான் இந்த வலைப்பூ உதயமாச்சு!! ஆமாங்க,இன்று என் வலைப்பூவுக்கு முதல் பிறந்தநாள்! :) :)
என்னவர் கேக்-ஐ வெட்டிகிட்டு இருக்காரு..காலைல எல்லாரும் கேக் பரிமாறப்படும். அதுவரைக்கும் அன்பா காத்திருக்கும் உங்களனைவரின் பொறுமைக்கும் நன்றி! ஹிஹிஹிஹி!
"தமிழர் திருநாளுக்கு பனாஆஆஆஆனா வால்(!!)நட் கேக் குடுக்கும்போதே தெரியுது உன் லொள்ளு"ன்னு ஒரு குரல் தொலைவில் கேக்குது..குரல் நெருங்கிவருமுன் நான் எஸ்கேப் ஆகிக்கறேன்,நன்றி,வணக்கம்!

ரெடி,ஒன்...டூ...த்ரீ..

என் வலைப்பூவைத் தொடங்கி இன்றுடன் 365 நாட்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன என்பதைக் கொஞ்சம் பெருமிதத்துடனும்,நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஒருவருடத்தில் என் மனத்தோட்டத்தில் பல புதிய நட்புப் பூக்கள் பூக்க இந்த வலைப்பூ ஒரு காரணமாக இருக்கிறது. இதுவரையிலும் நீங்களனைவரும் தந்த/தரும்/தரப்போகும் ஊக்கத்திற்கும்,ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி! :) :) :)
~~~
Friday, January 7, 2011
டாய் ஸ்டோரி -2
எங்கள் இனிய தமிழ்மக்களே, நாங்கள்லாம் நல்லா இருக்கிறோம்..நீங்களும் நலம்தானே? என்ன,சிரிக்கறீங்க? பொறுப்பா நலம் விசாரிக்கணும்ல? உங்களைப் பார்த்து ஒரு வருஷமே ஆகிப்போச்சு,எல்லாரும் எங்களை மறந்து போகலையே?
போனவருஷம் வந்தப்ப மகி அக்காவைப் பத்தி(மட்டுமே) சொல்லியே ஒரு பதிவு ஆகிடுச்சு..நீளம் அதிகமானதால நாங்க பேசினதை எல்லாம் கட் பண்ணிட்டாங்க!(கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)அதுக்காக வழக்கம்போல அமைதியா உட்கார்ந்துட்டு இருக்கமுடியுமா?நீங்களே சொல்லுங்க? :) சரி,நம்ம ப்ரெண்ட்ஸ்-ஐ எல்லாரும் பார்த்து கொஞ்சநேரம் பேசிட்டு இருக்கலாம்னு வந்திருக்கம்.
முதல்ல எங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லிக்கறோம்..அக்காவைப் பத்தி நாங்க சொன்னதையே கேட்டுட்டீங்க,இதை கேக்கமாட்டீங்களா என்ன?ஹிஹிஹீ!
Ted:ஹாய்,ஹாய்,ஹாய்!! மை நேம் இஸ் Ted! வீட்டுல நாந்தான் செல்லப் புள்ள! Teddy-ங்கறத செல்லமா சுருக்கி Ted-ன்னு ஷார்ட் & ஸ்வீட்டா என் பேரு! நல்லார்க்கா? :)
அப்பு:நான் ஆனைக்குட்டியா இருக்கறதால இது என் டீபால்ட் நேமாம்.என் பெரிய காதுக்குப் பக்கத்துல இந்த குட்டி ஸ்பீக்கர் மேட்ச்சாவே இல்ல பா! டிவி-க்கு சைட்ல என்னை உட்கார வைச்சுட்டாங்க..நோ வீடியோ..ஆல்டைம் ஆடியோ ஒன்லி ஐயாம் ஹியரிங்! :-|
க்ரிஸ்லி:வீட்டுலயே நாந்தான் பெரிய மனுஷன்,ச்சே,ச்சே பெரிய கரடி! யெல்லோஸ்டோன்ல இருக்க கரடி நினைவா எனக்கு இந்தப் பேரு.வீட்டுக்கு வர குட்டீஸுக்கெல்லாம் நாந்தான் மெய்ன் அட்ராக்ஷன்!
மோக்லி:இது மகி அக்கா வளர்த்த நன்றியுள்ள நாய்க்குட்டி பேராம்.(அதோட இறுதிக்காலம் ரெம்ப சோகமா இருக்கும்.) அந்தப் பேரை எனக்கு வச்சுட்டாங்கோ..பத்தாததுக்கு எங்களை வீட்டுக்குள்ள ஒரு மூலைல ஸ்பீக்கர்(woofer) மேல உட்கார வச்சிருக்காங்க. சத்தம் தாங்க முடீல! இப்ப தெரியுதா என் கண்ணுல இருக்க சோகத்துக்குக் காரணம்?!! அப்புச்சி:என்னையப் பாத்தா அருணுக்கு க்ராண்ட்பா ஞாபகம் வந்துச்சா,அதனால நான் "அப்புச்சி" ஆகிட்டேன். கேப்லாம் போட்டு இமேஜ மெய்ன்டெய்ன் பண்ணிட்டு இருக்கேன்,நான் ஓல்ட்மேன்னு நினைச்சுராதீங்க!
குட்டி:நான் குள்ளமணி மாதிரி குட்டியா இருக்கேன்னு இப்படி கொடுமையா பேரு வச்சிட்டாங்க.கர்ர்ர்ர்ர்ர்ர்!
அப்புச்சி:இட்ஸ் ஓக்கேடா பேராண்டி! நீ குட்டியா இருந்தாலும் க்யூட்டா இருக்கே! ;)
ட்வீட்டி: ஹாய் லேடீஸ் அன்ட் ஜென்டில் மேன்! ஐ யாம் ட்வீட்டி! வீட்டுல இருக்க டாய்ஸ் அல்லாத்துலயும் நான்தான் ரெம்ப ப்ரெட்ட்டியா இருப்பேன்.நீங்க என்ன சொல்றீங்க? நான்பாட்டுக்கு அமைதியா ஒரு ஓரத்துல உட்கார்ந்திருந்தேன்..புத்தாண்டு ஸ்பெஷலா என்னையும் குட்டியையும் மேலே தூக்கி, ஒரு ஷெல்ஃபுக்குள்ள உக்காரவைச்சிட்டாங்க பா! கீழே விழுந்துடுவமோன்னு பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு!
குட்டி:ஸ்ஸூ!சும்மா இரு ட்வீட்! எலிவேட்டட் வியூல படம் பாத்து என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன்,இப்ப நீ பயமுறுத்தாதே.
ட்வீட்டி: மொத மொதலா எங்களைப் பத்தி சொன்னதால இனிப்பா ஒரு எண்டிங்! எல்லாருக்கும் ஒரு ப்ளேட் முழுக்க முழுக்க முழுக்க கேசரி! சந்தோஷமா சாப்பிடுங்க. :) :) :)

Wednesday, January 5, 2011
கிளிப்பேச்சு கேட்க வாங்க!
போனவாரத்தில் ஒரு நாள் தற்செயலாக இவற்றைப் பார்க்க நேர்ந்தது. ஐந்தறிவுப் பிராணிகளும் இவ்வளவு அழகாகப் பேசுமா..இப்படியெல்லாம் புத்திசாலித்தனமாக வேலைகள் செய்து நமக்கு உதவுமா என்று ஆச்சர்யமாக இருந்தது. இந்த அளவுக்கு ஐன்ஸ்டீனுக்கும், Dazzle-க்கும் பயிற்சி கொடுத்த மனிதர்களின் திறமையை வியப்பதா, அல்லது சொல்லிக்கொடுப்பதை இவ்வளவு அழகாகக் கற்றுக்கொண்ட அந்த மிருகங்களின் புத்திசாலித்தனத்தை வியப்பதா என்று தெரியவில்லை! :)
இந்த வீடியோவில் வரும் dazzle செய்யும் வேலைகள் ஆச்சர்யத்தில் நம்மை வாயைப் பிளக்கவைக்கிறது!
Pencil: I'm sorry....
Eraser: For what? You didn't do anything wrong.
Pencil: I'm sorry cos you get hurt bcos of me. Whenever I made a mistake, you're always there to erase it. But as you make my mistakes vanish, you lose a part of yourself. You get smaller and smaller each time.
Eraser: That's true. But I don't really mind. You see, I was made to do this. I was made to help you whenever you do something wrong. Even though one day, I know I'll be gone and you'll replace me with a new one, I'm actually happy with my job. So please, stop worrying. I hate seeing you sad. :)
I found this conversation between the pencil and the eraser very inspirational. Parents are like the eraser whereas their children are the pencil. They're always there for their children, cleaning up their mistakes. Sometimes along the way... they get hurt, and become smaller (older, and eventually pass on). Though their children will eventually find someone new (spouse), but parents are still happy with what they do for their children, and will always hate seeing their precious ones worrying, or sad.
~~~~~
இங்கே செல்லப்பிராணிகள் மனிதருக்கு சமமாக நடத்தப்படுகின்றன..பிள்ளைகளை விட்டு தனியே வசிக்கும் முதியவர்களுக்கு உற்ற தோழனாக இருப்பது இந்த நான்குகால் மிருகங்கள்தான். அவர்களுக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் செய்யும் வகையில் நாய்களுக்கு கோச்சிங் தர பயிற்சியாளர்களும் உண்டு.மனநலம் குன்றியவர்களுடன் விளையாடவும்,அவர்களை உற்சாகப்படுத்தவும் இந்த ஜீவன்கள் முக்கியபங்கு வகிக்கின்றன.baby sitting போல pet sitting,dog walkers இப்படி பல்வேறு வசதிகளும் இருக்கு! :)இந்த வீடியோவில் வரும் dazzle செய்யும் வேலைகள் ஆச்சர்யத்தில் நம்மை வாயைப் பிளக்கவைக்கிறது!
~~~~~~~~~~
இது மின்னஞ்சலில் வந்த ஒரு டச்சிங்கான விஷயம்...பென்சிலையும் ரப்பரையும் அழகா நம் வாழ்வுடன் இணைத்து நம் பெற்றோரின் அருமையைப் புரியவைக்கிறது.Pencil: I'm sorry....
Eraser: For what? You didn't do anything wrong.
Pencil: I'm sorry cos you get hurt bcos of me. Whenever I made a mistake, you're always there to erase it. But as you make my mistakes vanish, you lose a part of yourself. You get smaller and smaller each time.
Eraser: That's true. But I don't really mind. You see, I was made to do this. I was made to help you whenever you do something wrong. Even though one day, I know I'll be gone and you'll replace me with a new one, I'm actually happy with my job. So please, stop worrying. I hate seeing you sad. :)
I found this conversation between the pencil and the eraser very inspirational. Parents are like the eraser whereas their children are the pencil. They're always there for their children, cleaning up their mistakes. Sometimes along the way... they get hurt, and become smaller (older, and eventually pass on). Though their children will eventually find someone new (spouse), but parents are still happy with what they do for their children, and will always hate seeing their precious ones worrying, or sad.
…….ALWAYS RESPECT & TAKE CARE of Your PARENTS……
Subscribe to:
Posts (Atom)