Tuesday, March 29, 2011

தொடர்பதிவு


பெண்எழுத்து-தொடர்பதிவுக்கு வானதி அழைத்திருந்தார்கள். அழைப்புக்கு நன்றி வானதி!

இதுவரை இந்தப்பதிவை எழுதியவர்கள் அனைவரும் நிறையக் கருத்துக்களை சொல்லிவிட்ட காரணத்தாலும், அடிக்கடி காலியாகிவிடும் என் மேல்மாடி இப்பவும் காலியாக இருப்பதாலும்..ஏதோ எனக்கு மனதில் தோன்றிய கருத்துக்களை எழுதுகிறேன். முதலாவதாக, நான் எழுத்துக்களை/பதிவர்களை பாலினவேறுபாட்டில் பார்ப்பதில்லை..எனக்குப் பிடித்த எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிச்சென்று படிப்பேன். அதுபோலவே எனக்கு மனதில் தோன்றியதை இங்கே எழுதுவேன்.நான் எழுதுவது யார் மனத்தையும் புண்படுத்தாமல்,வருத்தப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்று இந்த வலைப்பூவைத் தொடங்கிய முதல் நாளில் முடிவெடுத்தேன்,அதை இன்று வரை கடைப்பிடிக்க முயன்றும் வருகிறேன்.

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நல்ல கருத்துக்களை எழுதவேண்டும்..நமது பதிவுகள் படிப்பவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்,அறிவுரை கூறவேண்டும்,வழிநடத்தவேண்டும். இவைதான் என் எழுத்துக்களின் நோக்கம் என்று இல்லாவிட்டாலும், படிப்பவர்களை வருத்தப்படவோ,கவலைப்படவோ வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. படிப்பவர்கள் வாய்விட்டு சிரிக்கவேண்டும், அட்லீஸ்ட் ஒரு சின்னப்புன்னகையுடனாவது என் பதிவைக் கடந்து சென்றால் மகிழ்ச்சி..(மற்ற பதிவர்கள் பற்றி இங்கே நான் கூறவில்லை,இது என் சொந்தக்கருத்து.)

இதையே தான் எல்லார் எழுத்துக்களிலும் எதிர்பார்க்கிறேன்,அது ஆணாகஇருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி. பெண்கள் ஒரு எல்லைக்கோட்டுக்குள் எழுதவேண்டும்,ஆண்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்பது எனக்கு உடன்பாடில்லை..யாராக இருந்தாலும் நாகரீகமாக எழுதவேண்டும்,அவ்வளவுதான்! இது என் எதிர்பார்ப்பு.எதிர்பார்ப்புக்கு அளவுகள் இருக்கின்றதா என்ன?!

புத்தம் புது பூமி வேண்டும்..
நித்தம் ஒரு வானம் வேண்டும்..
தங்க மழை பெய்ய வேண்டும்..
தமிழில் குயில் பாட வேண்டும்!

சொந்த ஆகாயம் வேண்டும்..
ஜோடி நிலவொன்று வேண்டும்..
நெற்றி வேர்க்கின்ற போது- அந்த
நிலவில் மழை பெய்ய வேண்டும்!

வண்ண விண்மீன்கள் வேண்டும்..
மலர்கள் வாய் பேச வேண்டும்..
வண்டு உட்காரும் பூ மேலே – நான்
வந்து உட்காரும் வரம் வேண்டும்!

கடவுளே, கொஞ்சம் வழிவிடு..- உன்
அருகிலே ஒரு இடம் கொடு..
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு..
பூமியில் சில மாறுதல் தனை வர விடு!

யுத்தம் காணாத பூமி – ஒரு
சத்தம் இல்லாமல் வேண்டும்.
மரணம் காணாத மனித இனம் – இந்த
மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்!

பஞ்சம் பசி போக்க வேண்டும்..
பாலைவனம் பூக்க வேண்டும்..
சாந்தி,சாந்தி என்ற சங்கீதம் – சுகம்
ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்!

போனவை அட,போகட்டும்..
வந்தவை இனி வாழட்டும்..
தேசத்தின் எல்லைக் கோடுகள்..அவை தீரட்டும்..
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்!

வைரமுத்து அவர்களின் இந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அது போலத்தான் என் எதிர்பார்ப்பும்! இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் என் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று நம்புகிறேன். கடைசியாக ஒன்றே ஒன்று..நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்,
"You are responsible for What You Are!!!!!!"
~~~~

வழக்கம்போல பொறுமையாக இதைப்படித்தமைக்கு என் நன்றிகள்!

மேத்தி புலாவ்-சப்பாத்தி-ஸ்பினாச்,பாசிப்பருப்பு பொரியல்-சோயாபீன்ஸ் குருமா-ஆரஞ்சுப் பழம்....சாப்பிட்டுட்டு போங்க! :))))))))))))))

Wednesday, March 23, 2011

பாடல்கள் தொகுப்பு-3


அந்தக்காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை பெண்களை வர்ணித்து வந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்கள் இந்த நான்கும். காலங்களில் அவள் வசந்தம்...இந்தப்பாடலில் P.B.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலும்,பாடல் வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது.



அபூர்வ ராகங்கள்..இடியாப்ப சிக்கலான ஒரு கதையை அழகாக படம்பிடித்திருப்பார் K.பாலசந்தர். எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும்.



கொஞ்சம் லேட்டஸ்ட்டா வந்த பாடல்களில் இரண்டுமே பிரபு படங்களாவே இருக்கு. ரம்பாவா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தப்பாடலில் இருப்பாங்க..பானுப்பிரியாவும் அழகா இருப்பாங்க..பாடல்வரிகளும் அழகா இருக்கும். :)


நதியா-வை பூவே பூச்சூடவா படத்திலிருந்தே எனக்கு மிகவும் பிடிக்கும்..இந்தப்பாட்டில் புடவையில் மிக அழகா இருப்பாங்க,மீனாவை (இந்தப்பாடலில்) அவ்வளவாப் பிடிக்காது. S.P.B.குரலில் இன்னொரு இனிமையான பாட்டு!


~~~~~
நிழல்கள் படத்தில் பூங்கதவே,தாழ் திறவாய்...ஹீரோயின்(பேர் தெரியவில்லை) ஹோம்லியா அழகா இருப்பாங்க..இசையும் நன்றாக இருக்கும்.



ரெட்டைவால் குருவி படத்தில் ராஜ ராஜ சோழன் நான்..நானும் என்னவரும் ரசித்துக் கேட்கும் பாடல். பாடல் வரிகள் கிட்டத்தட்ட மனப்பாடம்னே சொல்லலாம். யூ ட்யூப் லிங்க் எடுத்து வைத்திருந்தேன்,வொர்க் ஆகல இப்போ..மறுபடி தேடியதில் கிடைத்தது இது..



பகல் நிலவு படத்தில் இந்தப்பாடல் ரொம்ப நல்லா இருக்கும்..ரேவதி-முரளி, அழகான லொகேஷன் எல்லாத்தையும் விட இளையராஜா-ஜானகி இருவரின் குரலும் கலந்து கலந்து வருவது எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். :)
பூ மாலையே..தோள் சேரவா...

இதுவரை நான் ரசித்த பாடல்களின் தொகுப்பு இங்கே.

Friday, March 18, 2011

நூடுல்ஸ்


இதையெல்லாம் ஒரு ரெசிப்பின்னு ப்ளாக்ல போடணுமான்னு ஒரு கேள்வி எழுவது(உங்களுக்கில்ல,எனக்குத்தான்,ஹிஹி!) ஆச்சரியமில்லை.
ஆனா (எனக்கில்ல,உங்களுக்கு) வேறவழியில்லை,என்சொய்! :)

MAGGI (தமிழ்-ல எழுதுனா மகி நூடுல்ஸுன்னு படிப்பீங்க,அதுக்குதான் இங்கிலீஷ்!;)) நூடுல்ஸ் எனக்கு அறிமுகமானது பக்கத்து வீட்டிலிருந்த ராஜண்ணா வீட்டில்தான்! பள்ளிப்பருவத்திலே இது மேல ஏற்பட்ட க்ரேஸ் இவ்வளவு நாளாகியும் இன்னும் குறையல. என்னவருக்கும் அப்படியே! இந்த நூடுல்ஸை செய்வது ரெம்ப ஈஸி..கொதிக்கறதண்ணில நூடுல்ஸ்&டேஸ்ட் மேக்கரை போட்டா 2 நிமிஷத்திலே ரெடியாகிரும்னுதான் கவர்ல போட்டிருப்பாங்க.ஆனா பாருங்க, அங்கங்கே கடுகு-உ.பருப்பு-க,பருப்பு (வெங்காயம்,ப.மிளகாய்,வெஜிடபிள்ஸ் இந்த மாதிரி "மானே, தேனே,பொன்மானே" இதெல்லாம் நீங்களே போட்டுக்கணும்.:)) இல்லாம ப்ளெய்ன் நூடுல்ஸை சாப்பிடுவதுங்கறது என்னாலே இமேஜின் பண்ணக்கூட முடியாது. (அவ்ளோ நீளம் என் நாக்கு!:P)

கொஞ்ச நாளுக்கு முன் இண்டியன் ஸ்டோர்ல ஆட்டா நூடுல்ஸ் வந்திருந்தது. அதைப் பார்த்ததுமே என்னவர் வாங்கிட்டு வந்து, அவரே செய்தார். நெட் ரிசல்ட் சூப்பரா இருந்தாலும், அவர் சிங்க்ல போட்டிருந்த பாத்திரங்கள், காலியாகியிருந்த எண்ணெய்க் கிண்ணம் இதையெல்லாம் பார்த்து இப்ப அவரை கிச்சனுக்குள்ள விடறதில்ல நானு! (அவர் எப்படி செய்தாருன்னு தெரிந்துக்க ஆசைப்பட்டா கமெண்ட்ல சொல்லுங்க,உங்களுக்காக இன்னொருநாள் சமைக்கசொல்லி(!!?!!) போஸ்ட் பண்ணறேன். எப்படி செஞ்சாலும் அவர் செய்த மாதிரி வரமாட்டேன்னுது..அவரும் கிச்சன் பக்கம் வரமாட்டேன்றாரு, எங்கே சான்ஸ் கிடைக்கும்ணு வெயிட் பண்ணிட்டிருக்கேன், ஒரு நாலஞ்சு பேராவது கேளுங்க,ப்ளீஸ்!! :))

இது நான் செய்யும் முறை..
காய்களை(ஒருகேரட்- நாலஞ்சு பீன்ஸ்-கொஞ்சம் ப்ரோக்கலி துண்டுகள்-ஒரு கைப்பிடி பச்சைப்பட்டாணி) கொஞ்சம் பெரிய துண்டுகளா நறுக்கி, லைட்டா உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணி தெளிச்சு மைக்ரோவேவ்-ல 2 நிமிஷம் வேகவைச்சுப்பேன். கடுகு-உ.பருப்பு-க.பருப்பு தாளிச்சு, நீளமா நறுக்கின ஒரு பெரியவெங்காயம், ஒரு பச்சைமிளகாய்,(preferably கலர்)கேப்ஸிகம்,கறிவேப்பிலை தாளிச்சு, வேகவைச்ச காய்கள், ஒரு பேக்கட் டேஸ்ட் மேக்கர் சேர்த்து 2 நிமிஷம் வதக்கி, 2 டம்ளர் தண்ணி ஊத்தி, இன்னொரு டேஸ்ட் மேக்கரையும் போட்டு கொதிக்க விட்டு, நூடுல்ஸை உடச்சு போட்டு 3 நிமிஷம் வேகவச்சு, கொத்துமல்லித்தழையப் போட்டு இறக்கினம்னா.....டின்னேஏஏஏர் ரெடி! :)
இதுக்கு MAGGI -hot & sweet tomato chilli sauce வைத்து சாப்பிடுவது என்னவர் வழக்கம்,அதுக்காகவே சாஸ் வாங்கிட்டு வந்திருக்கோம்.எனக்கு சாஸெல்லாம் வேண்டாம்,அப்படியே சாப்பிடுவேன். அப்ப நீங்க?!
:))))))))))))


பி.கு. போஸ்ட்டுக்கு இடையில ஒரு ஸ்மைலிக்கு பக்கத்தில ப்ளாங்க்-ஆ இருக்கும்,அதை ஹைலைட் பண்ணி படியுங்க மக்கள்ஸ்!

Tuesday, March 15, 2011

அஞ்சலி..

இயற்கையின் கோபமான கோரத்தாண்டவத்திற்குப் பலியான ஜப்பான் மக்களுக்காக சிலசொட்டு கண்ணீர்த்துளிகள்!!! :(
இந்தப் பதிவிற்கு இரங்கற்கருத்துக்கள் பதிக்க நினைத்த நேரத்தில் அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்,அது போதும்.
நன்றி!

Wednesday, March 9, 2011

கோன் தோசை & கொள்ளு இட்லிப்பொடி

-----------டைட்டிலையும்,போட்டோவையும் பார்த்தவுடனே இது சமையல்குறிப்பு ஒன்லி என்று ஓடாமல், ப்ளாகுக்கு வந்து முழுப்பதிவையும் படியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். :)
பாலாஜி சரவண கணேஷ் சீதாராமன்...(அப்பாடி,பேரை சொல்லி முடிச்சுட்டேன் பாலாஜி,ஒரு கப் ஜில் வாட்டர் ப்ளீஸ்! :) ) ஒரு தொடர் பதிவுக்கு என்னை கூப்பிட்டிருக்கிறார். பெயரின் பின்னால் ஒரு குட்டிக்கதை வைத்திருக்கும் ஆட்களுக்கான ஸ்பெஷல் சுவாரசியமான தொடர்பதிவு,கோன் தோசை & கொள்ளுப்பொடிக்கப்புறம் தொடர்கிறது.-------------

எனக்கும் பொடிவகைகளுக்கும் அவ்வளவா ஒத்துவராது,அப்படி இருந்தும் இட்லிப்பொடி மட்டும் நான் வீட்டிலேயே அரைத்துக்கொள்வதும் உங்க எல்லாருக்குமே ஏற்கனவே தெரிந்தவிஷயம்தான். :) இந்த முறை பொடிக்கு வறுக்கும்போது கொள்ளு இட்லிப்பொடி அரைக்கலாம்னு ஒரு ஐடியா வந்ததால், வழக்கமாக வறுக்கும் பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் கொள்ளையும் சேர்த்து வறுத்து அரைத்தேன். (அதென்ன வழக்கமா சேர்க்கறது..அளவு சொல்லக்கூடாதா என்பவர்கள் இங்கே க்ளிக்குங்க.)

கொள்ளு இட்லிப்பொடியில் எள்ளு போடுவாங்களான்னு டெக்னிகல் கேள்வி எல்லாம் கமெண்ட்டிலே கேட்டுடாதீங்கன்னு இப்பவே கேட்டுக்கொள்கிறேன். ஹிஹி!!

குறிஞ்சி கதம்பத்தில் கோன் தோசை பார்த்ததும் முயற்சித்துப்பார்த்த கோன் தோசையுடன் கொள்ளு இட்லிப்பொடி...(தோசை ரெசிப்பிக்கு இங்கே க்ளிக்குங்க)

~~~~~
இப்ப அந்த ஸ்வாரஸ்யமான தொடர் பதிவுக்கு வருவோம். வித்யாசமான புனைப்பெயர்கள் (உ.ம். சந்தனா,அதிரா,தக்குடு,என்றென்றும் 16)உள்ளவங்க அந்தப்பெயரைத் தேர்ந்தெடுத்ததுக்கான காரணத்தை விவரிக்க ஒரு வாய்ப்பாக இந்தத் தொடர் பதிவு இருக்கும். பாலாஜி மாதிரி 3 இன் 1 பேருள்ளவர்களுக்கும் இது நல்லதொரு வாய்ப்பு. என்னைப் பொறுத்தவரை இது தொடர்பாகச் சொல்வதற்கு ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு.என்னதுன்னா, மகேஸ்வரி என்ற இந்தப்பெயர் நானே செலக்ட் பண்ணிகிட்டதாக்கும்! :)

இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக :- பெயர்க்காரணம்

இடம்: எங்க வீடுதேன்.

பொருள்: மகேஸ்வரி - சிவனின் துணைவியார் பார்வதியின் பெயர்களில் ஒன்று என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த விளக்கம். பெயர்க்காரணம்னு கூகுளாண்டவர்கிட்ட கேட்டேன்,அவர் கொட்டிய தகவல் குவியல் இதோ.

விளக்கம்: வீட்டிலே கடைக்குட்டியான எனக்கு பேர் வைக்க ஒரு வித்யாசமான முறையை கையாண்டிருக்காங்க. என் அண்ணன்(பெரியம்மா பையன்,அவர் இப்பொழுது இல்லை.:( ) சொன்ன ஐடியாவின்படி, நிறையப் பெயர்களை சீட்டுகளில் எழுத்தி சுருட்டிப்போட்டு, என்னை எடுக்கவைத்தார்களாம். 3 மாசக்குழந்தைக்கு எப்படி பேரெல்லாம் செலக்ட் பண்ணத்தெரியும்,நீங்களே சொல்லுங்க??!! கையைக் காலை உதைக்கும்போது எந்த சீட்டில் என் கை பட்டதோ அதான் நான் தேர்ந்தெடுத்த பெயர்னு வைச்சிட்டாங்க. இப்படியாக எனக்கு நானே வைத்துக்கொண்டதுதான் இந்தப்பெயர்.

வீட்டில் எல்லாரும் மகி-ன்னு கூப்பிடுவாங்க. கல்யாணத்துக்குப் பத்திரிக்கை அடிக்கும்போது என்னவர் அதே போல அடித்துவிட்டார்.அப்ப இருந்தே கிட்டத்தட்ட மகி என்பதே என் அஃபிஷியல் நேம்(!!?) ஆகிவிட்டது. யு.எஸ். வந்து இந்த ஊர்மக்கள் என் பேரைக் கடித்துக்குதறுவது பொறுக்க மாட்டாம, பேரை சொன்னதுமே, நானே "கால் மீ மகி"ன்னு சொல்லிடுவேன்.

ஸ்கூல்ல படிக்கும்போதெல்லாம் நம்ம பெயர் மாடர்னா இல்லையேன்னு கொஞ்சம் வருத்தமா இருக்கும்,இப்பல்லாம் நினைத்தா சிரிப்பா இருக்கு. விவரம் தெரியாமல் செய்ததுதான்னாலும், நானே செலக்ட் பண்ணிகிட்ட பேர் இதுன்னு கொஞ்சம் பெருமையாத்தான் இருக்கு.:)

பெயர்களைப்பத்தி யோசிக்கும்போது ஞாபகம் வந்த சில நிகழ்வுகள்... கல்லூரியில் என்னுடன் படித்த ஒரு நண்பனின் பெயர் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடில..அவர் பெயர் 'இளங்கிளி'!!! முதலில் கொஞ்சம் சிரிப்பு வந்தாலும் போகப்போக பழகிட்டது. கிளி-ன்னுதான் கூப்பிடுவோம். :) பணிபுரிகையில் சக ஊழியர் ஒருவர் பெயர் 'செஞ்சுடர் வண்ணன்'.அவங்க தம்பி பெயர் 'கார்முகில் வண்ணன்'. சுத்தமான தமிழ்ப்பெயர்களைக் கேக்கும்போதே காதுக்கு இனிமையாத்தான் இருக்கு,இல்லையா? :)

இந்தத் தொடர் பதிவுக்கு யாரையெல்லாம் சிக்கவைக்கப்போறேன்னா....முன்னாலயே ஒரு நாலு பேர் பேரை சொல்லியிருக்கேன்.இன்னொருவரையும் சேர்த்து,
1.சந்தனா
2.அதிரா
3.தக்குடு
4.என்றென்றும் 16
5.குறிஞ்சி ------ ஐந்து பேராக இந்தத் பதிவைத் தொடருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்க புனைப்பெயருக்கான காரணத்தை சொல்லுங்க,அப்படியே உங்க சொந்தப்பேரையும் சொல்லிடுங்க.;)
நன்றி!

Thursday, March 3, 2011

Crazy Cashew Vegetables/க்ரேஸி கே ஷு வெஜிடபிள்ஸ்

இந்தப் பெயர் Thai ரெஸ்டாரன்ட் செல்பவர்களுக்குப் பரிச்சயமானதாய் இருக்கும்.:) போன சனிக்கிழமை லன்ச்சுக்கு சப்பாத்தி செய்துட்டேன்,சைட் டிஷ் என்ன செய்வதுன்னு மண்டையப் பிச்சுகிட்டு இருந்தபோது என்னவர் ஹெல்ப்புக்கு வந்தார்.சமையல் முழுக்க அவருடையது..போட்டோ மட்டும் நான் எடுத்தேன்... ஓவர் டு த ரெசிப்பி!!
~~~~~

கடாயில் எண்ணெய் காயவைத்து,சீரகம் தாளித்து, கொஞ்சம் முந்திரி- நீளமாக நறுக்கிய பனீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வச்சிருங்க.
ஒரு பெரிய வெங்காயம்-2 பச்சைமிளகாயைப் பெரிய துண்டுகளா நறுக்கி அதே எண்ணெயில் வதக்குங்க..
வெங்காயம்-மிளகாயை கடாயில் சேர்த்து கிளறினதும் மூடி வச்சிருங்க. 2-3 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
பெரிய துண்டுகளா நறுக்கிய 2 கேரட்-10 பீன்ஸ்-ப்ரோக்கலி பூக்கள் ஆறேழு ,நீளமாக நறுக்கிய பாதி கேப்ஸிகம் எல்லாத்தையும் கடாயில் சேர்த்து..
நறுக்கிய தக்காளி ஒன்றையும் சேர்த்து 2 நிமிஷம் மூடி வையுங்க. சமைக்கும் நேரம் முழுவதும் அடுப்பு அதிகமான சூட்டிலேயே இருக்கட்டும்.
தக்காளி கொஞ்சம் குழைந்ததும், பொரித்த பனீர்-முந்திரியை சேர்த்து கலந்து..
அரை ஸ்பூன் மல்லித்தூள்-அரை ஸ்பூன் சீரகத்தூள்-கால்ஸ்பூன் சோம்புத்தூள்-அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் ,உப்பு போடுங்க. (ஸ்பூன் சைஸை கவனிங்க. :)) அப்புறம் கொஞ்சமா தண்ணி தெளிச்சு, 2 நிமிஷம் வேகவிடுங்க.
ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் விழுதை சேர்த்து, ஒரு நிமிஷம் வதக்கி,

கொத்துமல்லி இலை-உலர் திராட்சை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கிருங்க. க்ரேஸி கே ஷூ வெஜிடபிள்ஸ் தயார்.
காரசாரமா,திராட்சையின் இனிப்புடன் டேஸ்ட் சூப்பரா இருந்தது. நீங்களும் ட்ரை பண்ணிப்பாருங்க.:)

Tuesday, March 1, 2011

எம்ப்ராய்டரி-2



இணையத்தில் உலவுகையில், எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் என்னை மிகவும் கவர்ந்தது.அதனால், இந்தமுறை பட்டாம்பூச்சியை தைத்துப்பார்க்கலாம் என்று இந்த டிஸைனைத் தேர்ந்தெடுத்தேன்.

பூவிற்கு வயலட் கலர் தைத்து முடித்து,நடுவிலும் இரண்டு அடுக்கு இதழ்களையும் டார்க் வயலட்டில் தைக்கலாம்னு அவுட்லைன் அந்தக்கலரில் தைத்திருந்தேன். அந்நேரம் எட்டிப்பார்த்த என்னவரிடம் அபிப்ராயம் கேட்க,அவர் சிவப்புக்கலரில் தைக்கச்சொன்னார்.எதுக்கு சம்பந்தம் இல்லாம சிவப்புன்னு கேட்டா,'சென்டர்ல இருப்பது இதயம்தானே? இதயம் சிவப்புக்கலரில்தானே இருக்கும்?'னு லாஜிக்கல் கொஸ்டின் கேட்டார். :) சரின்னு, இதயத்தையும் இரண்டு அடுக்கு இதழ்களும் சிவப்புக்கலரிலேயே பட்டன்ஹோல் தையலில் தைத்து முடித்தேன்.

பட்டாம்பூச்சிக்கும் மெய்ன் கலர் சிவப்பு,சிவப்புன்னா கான்ட்ராஸ்ட் மஞ்சள்..பூச்சியின் உடலுக்கு ஆரஞ்சு இப்படி எனக்குத் தோணிய நிறங்களில்,வண்ணத்துப்பூச்சியை முழுக்க ஸாட்டின் ஸ்டிச் செய்தேன். பார்க்க சிம்பிளா இருக்கு,ஆனா தைத்து முடிக்க ரொம்ப நேரமெடுக்கும் தையல் இது. 6 இழைகள் கொண்ட நூலில் ஒரு இழையை மட்டும் எடுத்து தைக்கணும். கொஞ்சம் ஏமாந்தாலும் தையல் டைரக்ஷன் மாறி, நாம் தைக்கும் ஷேப் மாறிப்போயிடும். ஆனால், செலவிடும் நேரத்துக்கு ஏற்ப,தைத்து முடித்ததும் பார்த்தா ரொம்ப அழகா இருக்கும். :)

அடுத்து இந்த குட்டிப்பூக்களை லாங் & ஷார்ட் ஸ்டிச்சில், பீச் கலர் -லைட் ஆரஞ்ச்-டார்க் ஆரஞ்ச் என்று 3 கலரில் தைத்தேன். இப்படி தைப்பது முதல் முறை என்பதால் கொஞ்சம் சுமாராதான் வந்தது. (ஆனால் என்னவருக்கு இந்த டிசைனிலேயே அந்தப்பூக்கள்தான் பிடித்ததாம்! :) )

பொதுவா 3 கலர் ஆல்டர்னேட் பண்ணறாங்க லாங் & ஷார்ட் ஸ்டிச்சுக்கு,எனக்கு அவ்ளோ பொறுமை இல்லாததால் இலைகளை 2 கலரிலேயே தைத்துட்டேன். அவுட்லைனை ஸ்ப்ளிட் ஸ்டிச்சில் தைத்துமுடித்து ஒரு இழை லைட் க்ரீனில் fill பண்ணணும்.முதலிலேயே இப்படி டைரக்ஷனல் ஸ்டிச்சஸ் போட்டுக்கொண்டால் ஈஸியா இருக்கும்.லைட் க்ரீன் முடிந்ததும் அதே போல டார்க் க்ரீனில் fill செய்து, நடுவில் 2 இழை டார்க் க்ரீன் நூலில் ஸ்டெம் ஸ்டிச் போட்டால் இலைகள் உருவாகிவிடும்.

பூவின் இரண்டு புறமும் தண்டுப்பகுதிக்கு சங்கிலித்தையல்- மற்ற குட்டிக்குட்டி டிட்-பிட்ஸுக்கு ஸாடின் ஸ்டிச்- பட்டாம்பூச்சியின் உணர்கொம்புகளுக்கு ஸ்ப்ளிட் ஸ்டிச் என்று முடித்தபோது "அப்பாடி"ன்னு இருந்தது! ஆனால் பைனல் அவுட்கம்-ஐப் பார்க்கும்பொழுது கிடைக்கும் சந்தோஷத்தில் எல்லா டயர்டும் காணாமப்போச்!

என்னவர் அவர் பங்குக்கு, இப்படி போட்டோ ப்ரேம்கள் வாங்கி ப்ரேம் செய்து கொடுத்தார். நான் செய்த எம்ப்ராய்டரி மேலே இருக்கும் ஒரிஜினலைப்போல ஓரளவுக்காவது இருக்கா? ;)

அதிர்ஷ்டவசமா, இந்த ஃபெல்ட் க்ளாத் சைஸுக்கேற்ற மாதிரி போட்டோ ப்ரேம்கள் கிடைத்தன.
சிவப்புக்கலர் எம்ப்ராய்டரியையும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். எப்படி இருக்கு இரண்டு ப்ரேமும்?!

NB: Right click and zoom the images for better & clear view of the stitches.

LinkWithin

Related Posts with Thumbnails