Thursday, June 7, 2012

பலாக்கொட்டை பிரட்டல்

தேவையான பொருட்கள்
பலாகொட்டை - 15
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி - சிறிது
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
(சக்தி) கறிமசாலா பவுடர் -1டீஸ்பூன் (விரும்பினால்)
தண்ணீர்-11/2 கப்
உப்பு
எண்ணெய்

விழுதாக அரைக்க
வரமிளகாய் - 4
தேங்காய்த் துருவல்-1/4கப்

செய்முறை
பலாக்கொட்டையில் மேலுள்ள தோலை உரித்தபிறகே சமைக்கவேண்டும்.
இதைச் செய்கையில் கவனமாக உரிக்கவேண்டும், கொஞ்சம் ஏமாந்தாலும் பலாக்கொட்டையின் தோல் ஊசிபோல நகக்கண்ணில் ஏறிவிடும். எளிய வழி, அம்மிக்கல்லில் கொட்டைகளை தட்டி, உடைப்பது. உடைத்த பலாக்கொட்டைகளின் தோலை எளிதாக எடுத்துவிடலாம்.

பலாக் கொட்டைகளை தோலை உரித்து நறுக்கி வைக்கவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காய்- வரமிளகாயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு, கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளிக்கவும். பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் பலாக்கொட்டை, மஞ்சள்தூள் சேர்த்து சிலநிமிடம் வதக்கவும்.

பிறகு அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்க்கவும்.
ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பலாக்கொட்டை வெந்ததும், கறிமசால் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி, பிரட்டலாக வரும்வரை சிறுதீயில் வதக்கி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பலாக்கொட்டை பிரட்டல் கறி தயார். சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு
பலாக்கொட்டையை நேரடியாக வேகவிட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து வேகும். அவசரமாக சமையல் செய்கையில் பலாக்கொட்டையை குக்கரில் வேகவைத்து எடுத்து பிரட்டலில் சேர்க்கலாம். [அனுபவம்தாங்க..காலை அவசரத்தில் செய்தேன். ரொம்ப நேரமெடுத்த மாதிரி இருந்தது. பிறகு அம்மாவிடம் கேட்டபோது, பலாக்கொட்டையை குக்கரில் வேவித்து சேர்த்திருக்கலாமேன்னாங்க..அவ்வ்வ்வ்! அடுத்தமுறை அப்படி செய்துருவோமில்ல?! ;) ]

24 comments:

  1. மகி, நல்ல ரெசிப்பி. இன்னும் எத்தனை ரெசிப்பி இருக்கு பலாக்கொட்டை வைச்சு!!!! எனக்கு இந்த பலாப்பழத்தில் சுளை எடுப்பது அலுப்பு பிடிச்ச வேலை. அம்மா ஒரு முறை கையில் எண்ணெய் தடவிய பிறகு செய்தார்கள். நான் நல்லா சாப்பிட்டேன். அதன் பிறகு என் ஆ.காரர் ஒரு நாள் வாங்கிவந்தார். நான் எந்த ரிஸ்கும் எடுக்கமாட்டேன் என்று சொன்னதும் அவரே சுளைகளை எடுத்தார். அதன் பிறகு வாங்குவதில்லை.

    நாங்கள் பலாக்கொட்டைகளை அவித்த பின்னர் பொரியல் செய்வோம். சூப்பரா இருக்கும். இன்னொரு முறை பலாப்பழம் வாங்கி என் ஆ.காரரிடம் சொல்லணும்.

    ReplyDelete
  2. /நாங்கள் பலாக்கொட்டைகளை அவித்த பின்னர் பொரியல் செய்வோம்./ எங்க வீட்டிலும் அப்படித்தான் வானதி! ஆனா பாருங்க, இதெல்லாம் சமைத்து பலவருஷம் ஆனதால் எனக்கு மறந்துபோய் அப்படியே டைரக்ட்டாக பொரியல் செய்துட்டேன்.

    /இந்த பலாப்பழத்தில் சுளை எடுப்பது அலுப்பு பிடிச்ச வேலை./ :) நீங்க மெஜாரிட்டி சைடுன்னு மறுபடியும் ப்ரூவ் பண்ணிட்டீங்க! ஒரு முழு பலாப்பழத்தையே கொடுத்தாலும் சலிக்காம செய்யும், டிவி விளம்பரம் ரசித்துப் பார்க்கும் மைனாரிட்டி வர்க்கம் நான்! ;))

    இங்கே சிறிய துண்டுகளாகத்தானே பலாப் பழம் கிடைக்குது. சம்மர் முடிவதற்குள் வாங்குங்க!

    /இன்னும் எத்தனை ரெசிப்பி இருக்கு பலாக்கொட்டை வைச்சு!/ இப்போதைக்கு இந்த ஒரு ரெசிப்பிதான். இனி வாங்கினா வேற ஏதாச்சும் செய்யலாம். ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!

    ReplyDelete
  3. /இந்த பலாப்பழத்தில் சுளை எடுப்பது அலுப்பு பிடிச்ச வேலை./ :) நீங்க மெஜாரிட்டி சைடுன்னு மறுபடியும் ப்ரூவ் பண்ணிட்டீங்க! ஒரு முழு பலாப்பழத்தையே கொடுத்தாலும் சலிக்காம செய்யும், டிவி விளம்பரம் ரசித்துப் பார்க்கும் மைனாரிட்டி வர்க்கம் நான்! ;)) //haha.........haiyo haiyo.

    ReplyDelete
  4. ///haha.........haiyo haiyo. /// சிரிங்க, சிரிங்க! சின்னவங்களைப் பார்த்து பெரியவங்கள் சிரிப்பது சகஜம்தானே!!

    ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை! :)))))

    [எதுக்கு இது...சம்பந்தமில்லாம?? எண்டு யோசிக்கப்படாது, சொல்லணும்னு தோணுச்சு, சொல்லிட்டேன்! ஹாஹாஹா! :))))))]

    ReplyDelete
  5. ம்.. சூப்பர். புகை கர்ர்ர்ர்ர்

    இங்க பழமே இல்லையே! டின்ல பலாக்கொட்டை விற்கிறாங்க. அதுல கறி வைக்கலாம். பொரிக்க நல்லால்ல. ;( பிரட்டல் செய்வேன்.

    எல்லாத்துலயும் க.ப, உ.ப, கொ.ம சேர்க்கிறீங்க. ம்...

    எனக்கு... பலாக்கொட்டை டீப்ஃப்ரை + மி.தூள் + உப்பு + தே.புளி இஷ்டம் ;PPP

    தணலில் சுட்டுச் சாப்பிடவும் பிடிக்கும்.

    ReplyDelete
  6. /பலாக்கொட்டை டீப்ஃப்ரை + மி.தூள் + உப்பு + தே.புளி இஷ்டம் ;PPP / புது ரெசிப்பிக்கு நன்றி இமா! ;)

    டின்-ல அடைச்சது வாங்கினா ருசி குறைவுதானே! உங்க ஊர்ல ஏன் பலாபழம் வருவதில்லைன்னு தெரியலையே..ட்ராப்பிகல் கன்ட்ரிதானே இமா?!

    /ம்.. சூப்பர். புகை கர்ர்ர்ர்ர்/ புகை விடாதீங்க, இஞ்சின் பழுதாகிரும்! ;))))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஐட்டம்ம்ம்ம்:)))).. எனக்குத்தான் வேணும்.. மீதான் 1ஸ்ட்டா ஓடிவந்தேன், ஆனா வான்ஸ் எனக்கு ஒரு இடி விட்டா, நான் போய் பக்கிங்காய் பலஸ் வேலியில விழுந்துட்டேன்ன்ன் கிழுவ முள்ளு வேற குத்திப்போட்டுது, அதுதான் லேட்டூஊஊஊஊஊ..

    மகி.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்கோ.. எனக்கல்ல வான்ஸ்க்கு:)))) கர்ர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
  8. //மகி.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லுங்கோ// சொல்லிட்டாப் போகுது அதிரா, காசா,பணமா? ;)))

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!...ஆனா உது ஆருக்கு என்று மட்டும் சொல்ல மாட்டேன், ஆருக்கு விருப்பமோ வச்சிக்கிடுங்கோ! ;)))

    //கிழுவ முள்ளு வேற குத்திப்போட்டுது,// வ்வ்வ்வாட்? கிழவன் முள்ளோ? புதுசா இருக்குதே முள்ளு? பத்திரம் அதிரா! :)

    உங்களுக்கு தனியா ஒரு பக்கற் கறி எடுத்து வைச்சிருக்கேன்,இந்தாங்கோ! அடிச்சுப் பிடிச்சு ஓடிவந்ததுக்கு ஸ்பெஷல்! :))))
    நன்றி அதிரா!

    ReplyDelete
  9. /எல்லாத்துலயும் க.ப, உ.ப, கொ.ம சேர்க்கிறீங்க./ :)))

    இமா, இந்த "மானே-தேனே-பொன்மானே" ஐட்டங்கள் ;) இல்லாம எனக்கு சமைக்கவே தெரியாதுன்னு வைச்சுக்கோங்களேன்! இது மூணு, பிறகு வெண்;)காயம், தக்காளி இவை ஐந்தும் பேஸிக் இங்கிரிடியன்ஸ் இன் மை கிச்சன்! ஹிஹிஹி! :))

    ReplyDelete
  10. சூப்பர் கறி.... எனக்கு எவ்ளோ தந்தாலும் சாப்பிடுவேன், ஆனா மகி, நன் என்ன செய்வதென்றால், ரீவி பார்க்கும் நேரங்களில் இதனை, போர்ட்டில் வச்சு, 2,4 ஆக வெட்டிப்போட்டு தோலை உரித்து பிரிஜ்ஜில் வைட்த்திடுவேன்...

    அப்போ நினைத்தவுடன் செய்யலாம்.. பிராப்புளம் என்னன்னா.. எங்களுக்கு இது இங்க கிடைக்காது:))

    ReplyDelete
  11. கிழவன் முள்ளுப்பற்றி.:))))))0. வான்ஸ் அல்லது கீரிதான் விளக்கமாச் சொல்லுவினம்:))).

    பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ் வித்தவுட் கிழவன்:)) அவரை இங்கின விட்டிட்டுப் போறேன்ன்ன்ன்ன்ன்:))) ஹா..ஹா...ஹா.. எங்கிட்டயேவா?:))

    ReplyDelete
  12. /வான்ஸ் அல்லது கீரிதான் விளக்கமாச் சொல்லுவினம்:)))./ இவ்வளவு அப்பாவியா இருந்தா எப்படி பூஸ்?! பக்கிங்ஹம் பேலஸின் வேலியோரத்தில்;) குடுமிபிடி சண்டை நடப்பதா இப்பத்தானே பிபிசியில காட்டினாங்க, பார்க்கேல்லையா நீங்க? நைஸா நழுவி இங்கிட்டு ஓடியாந்திட்டீங்க. அங்கே க்வீனுக்கு யார் பந்தி பரிமாறுவதுன்னு அவிங்க ரெண்டுபேருக்கும் தகராறாம்! ;)))))

    /போர்ட்டில் வச்சு, 2,4 ஆக வெட்டிப்போட்டு தோலை உரித்து பிரிஜ்ஜில் வைட்த்திடுவேன்./ அடுத்த முறை என்னோட மெதட் நீங்க ஃபாலோ பண்ணுங்க, உங்க மெதட் நான் ஃபாலோ செய்கிறேன், எது ஈஸினு பார்க்கலாம்! ;)
    நன்றி அதிரா!

    ReplyDelete
  13. It's been ages since i tasted jackfruit seed. i miss home terribly after seeing ur post...this is my fav...

    ReplyDelete
  14. குக்கரில் வேக வைத்துவிட்டால் போதுமே. அப்ப்டியே சாப்பிடலாம். ருசியாக இருக்கும். அல்லது சாம்பாரில் தான் போலப் போடலாம்.

    ReplyDelete
  15. Looks awesome... palakottaya nerupil suttu than saapitu iruken... ipdi panni saapitathu illa....

    Ongoing Event: Dish Name Starts With M till July 15th
    Learning-to-cook

    Regards,
    Akila

    ReplyDelete
  16. It's been a long time I've had palakottai, looks very good..

    ReplyDelete
  17. செய்முறை நல்லாருக்கு.அடுத்த தடவ வாங்கினா இப்படியும் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  18. மகி நலமா? உங்கள் முறையில் ட்ரை பண்ணி பார்க்கனும்

    ReplyDelete
  19. வழக்கம்போல லேட் கமென்ட். நானும் கொட்டைகளை ஒரு தட்டு தட்டிவிட்டுதான் தோலை
    உறிப்பேன். இதுவும் ஒரு புதுமாதிறியான பிரட்டல். ரொம்பவே ருசியாயிருக்கும்போல. செய்யணும். கிடைக்கும் வஸ்துக்களைக் கொண்டு புதுப் புது முயற்சி எல்லாவற்றிலும்.அருமையாகவும்இருக்கு

    ReplyDelete
  20. பலே..அப்போ வாங்கிய பலாப்பழத்தில் இப்போ பலாகொட்டை கறியா?நாங்களும் பலா கொட்டைகளை இன்னும் சற்று வித்தியாசமான முறையில் சமைப்போம்.இமா சொன்னது போல் தணலில் சுட்டு சாப்பிட்டால..ம்ம்ம்ம்....

    ReplyDelete
  21. பலாக்கொட்டையை சுட்டு அல்லது அவித்து தருவாங்க சாப்பிட்டு இருக்கோம்,பிரட்டல் சூப்பர்.

    ReplyDelete
  22. சித்ரா, அனு, PT, VGK சார், அகிலா, ஹேமா, சித்ராக்கா, சிநேகிதி, காமாட்சிம்மா, ஸாதிகாக்கா, ஆசியாக்கா அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails