தேவையான பொருட்கள்
ஊறவைத்து முளைகட்டிய கொண்டைக்கடலை -1/4கப்
வெங்காயம்-1
தக்காளி-2
கத்தரிக்காய்-3
உருளைக் கிழங்கு -1
புளிக்கரைசல்-அரைக்கப்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
கொத்துமல்லி இலை கொஞ்சம்
அரைக்க
தேங்காய்த் துருவல் -2டேபிள்ஸ்பூன்
சோம்பு-1டீஸ்பூன்
வரமிளகாய்-4
மிளகு -7
செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.
வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
கத்தரி-உருளையை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். [உருளையை பெரிய துண்டுகளாகவும், கத்தரிக்காயை காம்பு நீக்கி, நான்காக பிளந்து வைக்கவும்.]
குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு போடவும்.
கடுகு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி, காய்கள் மற்றும் ஊறிய கடலையையும் சேர்க்கவும்.
சிலநிமிடங்கள் வதக்கிவிட்டு, புளிக்கரைசல்-தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும்வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ப்ரெஷர் இறங்கியதும் கொத்துமல்லி இலை சேர்க்கவும். சுவையான கொண்டைக்கடலை-கத்தரிக்காய்-உருளைக் கிழங்கு குழம்பு தயார். சாதம்-இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.
குறிப்பு
இந்த குழம்பை முளை கட்டாத கொ.கடலை, பட்டாணி இவற்றிலும் செய்யலாம். கருப்பு கொண்டைக்கடலையும் உபயோகிக்கலாம். [கருப்பு கொண்டைக்கடலை குழம்பை காண இங்கே க்ளிக் செய்யவும்.] கடலை மற்றும் காய்கள் மசாலாவுடன் ப்ரெஷர் குக் செய்யப்படுவதால் சுவை அலாதியாக இருக்கும். :)
~~~
கொண்டைக் கடலை குழம்புடன் லன்ச் போட்டோ எடுக்காமல் விட்டிருக்கிறேன். என் சாப்பாட்டுத் தட்டைப் பார்க்க ஆவலோடு வரும் ரசிகப் பெருமக்களை ஏமாற்றக் கூடாது என்று...