இந்த மிக்ஸர் சுடச்சுடச் செய்து ஈவினிங் டீ-யுடன் கொறிக்க சரியான ஜோடி! இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மிகக் குறைந்த அளவில் செய்த பேஸிக் ரெசிப்பி. இதனுடன் உங்கள் விருப்பப்படி வேர்க்கடலை-முந்திரி-திராட்சை-கறிவேப்பிலை-பூண்டு இவற்றையும் சேர்த்து செய்யலாம். மிளகுத்தூளுக்குப் பதில் மிளகாய்த்தூள்-பெருங்காயமும் சேர்க்கலாம். ஷாலோ ஃப்ரை செய்வதற்கு பதிலாக டீஃப் ஃப்ரையும் செய்துகொள்ளலாம். உங்கள் தேவை மற்றும் வசதிப்படி செய்து ருசித்துப் பாருங்க. :)
தேவையான பொருட்கள்
கெட்டி அவல்-1/2கப்
பொட்டுக் கடலை-1டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள்-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2டீஸ்பூன்
செய்முறை
மிதமான தீயில், கடாயில் எண்ணெய் காயவைத்து அவலைச் சேர்த்து வறுக்கவும்.
அவல் கருகாமல் பொரியும் வரை கவனமாக கை விடாமல் கிளறிவிட்டு வறுக்கவும்.
அவல் மொறுமொறுப்பாக பொரிந்ததும் பொட்டுக்கடலை சேர்க்கவும். [வேர்க்கடலை-முந்திரி-கறிவேப்பிலை சேர்ப்பதாக இருந்தால் இந்நிலையில் சேர்த்துக்கொள்ளவும்]
மிளகுத்தூள், தேவைக்கு உப்பு சேர்த்து கலக்கவும். [மிளகாய்த்தூள்-பெருங்காயத்தூள்-உப்பு சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்க்கலாம்.]

எல்லாப் பொருட்களும் நன்றாக கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
நிறையச் செய்து காற்று புகாத டப்பாக்களில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை வைத்துக்கொள்ளலாம். நினைத்த நேரம் குற்ற உணர்ச்சி இல்லாமல் கொறிக்க ஒரு கறுக் மொறுக் ஸ்னாக்ஸ் இது. ரெசிப்பி கர்ட்டஸி என் மாமியார். படமெடுத்தது மட்டுமே நான்! :)