Monday, March 16, 2015

அரிசி ரவை அடை

ஒரு முறை இந்தியன் ஸ்டோருக்கு போனபோது அவசரத்தில் வெள்ளை ரவை என நினைத்து அரிசி ரவையை வாங்கி வந்துவிட்டேன். இட்லிக்கு மாவரைக்கையில் உளுந்து மாவின் அளவு அதிகமாகத் தெரிய தனியே கொஞ்சம் உளுந்து மாவை எடுத்து வைத்தேன். இரண்டையும் கலந்து ஒரு நேர டிஃபனாக மாற்றியாயிற்று. :)

தேவையான பொருட்கள்
அரிசி ரவை-11/2கப்
அரைத்த உளுந்து மாவு-1/4கப்
முட்டை-1
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை-கொஞ்சம்
சீரகம்-1/2டீஸ்பூன்
உப்பு

செய்முறை 
அரிசி ரவை, உளுந்து மாவு, உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலந்து 6-7 மணி நேரங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
அடை செய்யும் பொழுது முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்துகொண்டு, அதனுடன் அரிசிமாவு, நறுக்கிய வெங்காயம்-மிளகாய்-கறிவேப்பிலை-கொத்துமல்லி மற்றும் சீரகம் சேர்த்து கலக்கவும்.
தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காயவைத்து அடைகளாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து திருப்பிப் போட்டு...
இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்.
நல்ல காரமான சட்னி - சாம்பார் வகைகள் எல்லாம் இந்த அடைக்கு மேட்ச் ஆகும். தயிர்-ஊறுகாய் கூட வைத்து சாப்பிடலாம். 

16 comments:

  1. வீட்டில் குறித்துக் கொண்டாயிற்று... நன்றிங்க...

    ReplyDelete
    Replies
    1. ஓ, அப்படியா..செய்து பார்த்துச் சொல்லுங்க, நன்றி! :)

      Delete
  2. வணக்கம்
    சுவையான உணவு செய்முறை விளக்கத்துடன் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    வணக்கம்
    ஐயா
    நல்லகதையுடன் வலைச்சரத்தை அலங்கரித்துள்ளீர்கள் அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்தக்கள்.
    எல்லாம் அறிந்த வலைப்பூக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஏதோ குழப்பத்தில் கருத்துப் பதிந்துட்டீங்க என்று நினைக்கிறேன். ;) :)
      நன்றிங்க!

      Delete
  3. தில்லியில் தோழி ஒருத்தர் அரிசி ரவையுடன் உளுந்து மாவு மட்டும் அரைத்து கலந்து எப்போதுமே இட்லி செய்வாங்க. நல்லாவும் இருக்கும்.

    அடை நன்றாக இருக்கிறது...இந்த அரிசி ரவையிலேயே அரிசி உப்புமா செய்யலாமேப்பா.

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படி நினைத்துத்தான் ரவையும் உளுந்து மாவும் கலந்து வைச்சேன், ஆனால் காலையில் பாத்தா மாவு இட்லி மாவு போலவே இல்லாததால் இப்படி அடையா கன்வர்ட் பண்ணிட்டேங்க! ;) :)

      அரிசி உப்புமா...ஹ்ம்ம்,,செய்து பார்க்கணும். அதெல்லாம் செய்யும் வழக்கம் இல்லாததால் நினைவு வருவதில்லை. ஹி..ஹி!!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி!

      Delete
  4. புதுமையான தோசை .....

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது , ஈசியான ரெஸிபீ. வெஜிடெபல் ஆம்லேட் போன்றும் இருக்கிறது.

    ReplyDelete
  6. அரிசி ரவை அடை நல்ல ஐடியா மகி. அரிசி ரவையில் பிட்டும் செய்யலாம். ரொம்ப சிம்பிள் . நல்லா கொதித்த நீரை கொஞ்சமா உப்பு சேர்த்து ரவையில் விட்டு 5நிமிடம் மூடி வைத்து பின் திறந்தால் ரவை பொல பொலவென்று வெந்திருக்கும். இதில் சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்தால் பிட்டு ரெடி.

    ReplyDelete
    Replies
    1. ராதாராணி, எனக்கு பிட்டு சாப்பிடும் பழக்கம் இல்லாததால் செய்யலை!! ஏனோ பிட்டு பிடிக்கிறதில்லைங்க!! தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  7. adai supera erukku Mahi, idli and upmavum supera erukkum...Laya yeppadi erukkanga?

    ReplyDelete
    Replies
    1. சரிதான் குறிஞ்சி..ஆனா ரவையை உளுந்துடன் சேர்த்து அரைக்கணுமோ என்ன?? நான் சும்மா கலந்து வைச்சேன், ஆனா இட்லி மாவு மாதிரியே இல்லையே..அதான் முட்டையும் சேர்த்து இப்படி அடையா சுட்டுட்டேன். :) லயா நலம்..உங்க குட்டியர் எப்படி இருக்கார்?

      Delete
  8. நல்ல ஐடியாவே இருக்கே மஹி...
    அடை பார்க்கவே க்ரிஸ்பியா இருக்கு..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷமி!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails