Sunday, February 24, 2019

அறுந்த வாலு..குறும்பு தேளு..!!

 ஆனாலும் அவ ஏஞ்சலு!!! :) :D

ஆமாங்க..எங்க வீட்டு குட்டி தேவதை ஒரு அறுந்தவாலு, குறும்புத்தேளு..விஷமக்காரக் குட்டி!! அப்பாவை தன் சுண்டுவிரலில் கட்டிச் சிறை வைப்பதிலாகட்டும்...
அம்மாவை அரை நொடி அக்கடான்னு அமர விடாமல் படுத்துவதிலாகட்டும்..
அக்காவை பார்த்துப்பார்த்து அவள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வதாகட்டும்..
ஜீனோவை "அட்ட்ட்ட்டி (அடி!!)..." என்று செல்ல மிரட்டல் செய்வதாகட்டும்...
அப்பாவோ அம்மாவோ கோபக்குரல் கொடுத்தால் கழுத்தைக்கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்துவதாகட்டும்..
லயாவுடன் சண்டை போட்டு அடி பின்னுவதாகட்டும்...
ஸ்வராக்குட்டியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது எங்க சின்ன சாம்ராஜ்யத்தில்!!

இப்பத்தான் சின்னூண்டு விரல்களைப் படம் பிடித்த நினைவாக இருக்கிறது..அதற்குள் இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன..அம்மணி இப்ப எங்களையெல்லாம் மிரட்டியது போதாதென்று வருண பகவானையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார். மழை வரும்போதெல்லாம் "ரெய்ன் ரெய்ன் கோ அவே.." பாடிப்பாடி போரடித்தபின் ஒருநாள் வெளியே பெய்து கொண்டிருந்த மழைக்கு ஒரே மிரட்டல்..."ரெய்ன்...ஸ்டாப்!! அக்கா அண்ட் பாப்ப வான்ட்ஸ் டு ப்ளே..ஸ்டாப்!" என்று கத்த ஆரம்பித்தார்..ஆனாலும் மழை விடலைங்கறது வேற கதை..ஹிஹி..!! 

இரண்டாம் பிறந்தநாளுக்கு முதல்நாள் கொட்டிய மழையில் தானே குடையைப் பிடித்துக்கொண்டு நடப்பதாய் அடம்பிடித்து அக்காவும் தங்கையும் மழையில் கொட்டமடித்து கும்மாளம் போட்டார்கள்..
கூடவே அக்காவுக்கு ஒரு வாரமாய் இருந்த ஜலதோஷமும் தங்கைக்கு ஒட்டிக்கொள்ள பிறந்தநாளன்று நல்ல சளி.. வாங்கிவந்த கேக்கை கட் செய்யவில்லை..எதுவுமே செய்யவில்லை..வாடிப்போன கீரைத்தண்டாய் வதங்கிக்கிடந்தவளைத் தோளில் போட்டுக்கொண்டே பிறந்தநாள் ஓடிவிட்டது.. ஒரு வாரம் படுத்தி எடுத்த ஜலதோஷம் கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே இந்த வருடம் குளிரும் மழையும் கொஞ்சம் அதிகபட்சமாகவே இருப்பதால் சளித்தொந்தரவும் விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. 

சரி, அவையெல்லாம் போகட்டும்..பதிவில் இறுதியாக ஒரு புது ரெசிப்பி..டிரையல்!! கொஞ்சம் சொதப்பிவிட்டது என நான் முடிவேகட்டி குளிர்சாதனப்பெட்டியில் பூட்டி வைத்த மறுநாள் சில உணவுகள் பழசானாத்தான் ருசி என்பதை நினைவூட்டிய ஆப்பிள் க்ரம்ப் பை ( Apple Crumb Pie)
ரெசிப்பி விரைவில் எங்க குட்டி வாலுங்க, குறும்புத்தேளுங்க ரெண்டு பேரும் அனுமதிக்கையில் வெளியிடப்படும். வழக்கம் போல என் ஸ்வராக்குட்டி-க்கு நீங்கள் வழங்கும் ஆசீர்வாதங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


8 comments:


  1. ஸ்வராக்குட்டி-க்கு எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களும் ...

    இப்போ குட்டிஸ் ஓகே ஆகிட்டாங்கலா..


    ரெய்ன்...ஸ்டாப்!! அக்கா அண்ட் பாப்ப வான்ட்ஸ் டு ப்ளே..ஸ்டாப்!" என்று கத்த ஆரம்பித்தார்..

    ஹா ஹா செம்ம



    ஆப்பிள் க்ரம்ப் பை ..பார்க்கவே நல்லா இருக்கு நானும் ஒரே ஒரு முறை செஞ்சு பார்த்தது உண்டு ..உங்க ரெசிபி பார்க்க waiting

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி அனு..அவ பிறந்தநாள் பிப்ரவரி 1.. :) இப்ப ஓரளவுக்கு சரியாகிட்டா!
      சீக்கிரம் ஆப்பிள் க்ரம்ப் பை ரெசிப்பி அப்டேட் செய்யறேன்..கருத்துக்களுக்கு நன்றி!

      Delete
  2. ஸ்வராக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
    அதற்குள்ளாக 2வயதாகிவிட்டதா. எல்லாரும் இப்படி மகிழ்வோடும்,சதோசமாக இருக்கவேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்முலு..வாழ்த்துக்களுக்கு நன்றி!

      Delete
  3. Replies
    1. நன்றி டிடி அண்ணா!

      Delete
  4. அதுக்குள் 2 வயதாகி விட்டது பாருங்கள்..... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அதிரா..உங்களுக்கு 21 நாட்கள் மூத்தவளாக்கும்! ;) :)
      நன்றி!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails