எல்லாரும் பொழுது போகாமல் அழகா போட்டோஸ் போடுறாங்க..எனக்கும் பொழுது போகல..எங்க அபார்ட்மென்ட் முழுவதும் சுதந்திரமாய்த் திரியும் ஆட்கள் இந்த நத்தைகள் தான்..பாத் வே-யில் அங்கங்கே யார் காலிலாவது மிதிபட்டு சிதிலப் பட்டு கிடக்கும் நத்தை ஓடுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். இருக்கும் ஓரடி தடத்தை கடக்க ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்வதால், எதிர்பாராமல் யாரேனும் மிதித்து விடுகிறார்கள்..சரி, நத்தையைக் கொஞ்சம் தொடர்வோம் என்று எடுத்த படங்கள் தான் இவை.
கிட்டத்தட்ட ஓரடி தூரம் கடந்துவிட்டார்..
ம்ம்..செடிக்குப் போவோமா இல்லை டைரக்ஷனை கொஞ்சம் மாற்றிகொள்வோமா? என்று யோசித்து திசை மாற ஆரம்பித்தார்..
வேணாம்..இது இன்னும் தூரம்..செடிக்கே போய்விடுவோம் என்று நினைத்தார் போல..ஒரிஜினல் பாதைக்கே திரும்பி நகர ஆரம்பித்துவிட்டார். நத்தைகள் நகரும்போது இது போன்ற தாரைகளை விட்டுச் செல்கின்றன..சிறிது நேரத்தில் இந்த தடங்கள் வெள்ளை வெளேரென்று மின்னும்..அந்த தடத்தை வைத்தே இவ்வழியில் தனது வீட்டை சுமந்துகொண்டு ஒருவர் சென்றிருக்கிறார் என்று கண்டுகொள்ளலாம்.
அப்பாடி, மண்ணை நெருங்கி விட்டார்..
பை,பை நத்தையாரே!
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் கடந்து சென்ற பாதை.. ஒரு மூன்றடி இருக்கும்!!
அன்று போனவர் திரும்பி வரவே இல்லை..சின்ன நாற்றுகளை நத்தையார் சுவைத்து விடுவார்,அதற்கு மருந்து வாங்கிப் போடுங்கள் என்று எங்கள் இலவச அட்வைஸ்:) எக்ஸ்பர்ட் சொன்னார்..ஆனால் நான் அதை செய்யவே இல்லை! ;)நத்தையின் கூடைப் பார்க்கையில் அழகாய் இருந்தது..ஆனால் நகர்ந்து செல்லும் நத்தையைக் கவனித்ததில், அதன் ட்ரான்ஸ்பரன்ட்-டான உருவம் மண்புழுவை ஞாபகப் படுத்துது..எனக்கும் மண்புழுவிற்கும் ஏழாம் பொருத்தம்! சமீபத்தில் ஒரு முறை மண்ணைக் கிளறும்போது, ஒரு மண்புழு! கையில் இருந்த கொத்தும் கரண்டிய மண்ணுல போட்டுட்டு,ஒரே ஓட்டமாய் வீட்டுக்குள் ஓடிவிட்டேன்..இத்தனைக்கும்,காலில் ஷூ..கைகளில் க்ளவுஸ்!!
சரி, என்னோடு சேர்ந்து நீங்களும் வெகு நேரம் வெட்டி பொழுது போக்கியாச்சு..இங்கே இந்த வாரம் லாங் வீக் எண்ட்..மூன்று நாள் லீவு! ஸோ, அடுத்த வாரம் சந்திப்போம். நத்தையையே பார்த்து போரடித்த கண்களுக்கு குளிர்ச்சியாய் இந்தப் பூக்களையும் பார்த்துட்டு போங்க! :)


























