ஜூன் 18ஆம் தேதி..'ராவண்'(ஆமாங்க,ஹிந்திதான்..என்னவரின் ஆபீஸில் பெரும்பாலானவர்கள் வட இந்தியர்கள்..அதுவுமில்லாமல், எங்க வீட்டுப்பக்கத்து தியேட்டரிலும் ஹிந்தியில்தான் ரிலீஸ் பண்ணினாங்க) நூன் ஷோ-விற்கு போனோம். பாடல்களைக் கேட்டு அதிகம் எதிர்பார்த்துவிட்டோம் என்ற உணர்வைத் தந்துவிட்டது படம்..ரசித்து ரசித்து கேட்ட பாடல்கள் ஒன்று கூட முழுதாய் வந்தமாதிரி தெரில..வட இந்திய கிராமப்புறங்கள்,மக்கள் இதுவும் மனதிற்கு ஒட்டல..ஏமாற்றம்..ஏமாற்றம்!!
ஏமாற்றத்துடன் வெளியே வந்தோம்..வீட்டிற்கு போக மனமில்லை..அங்கிருந்து அப்படியே ஒரு பீச்சிற்கு போனோம்..அலையடிக்கும் பஸிபிக் கடலை பார்க்கும்வரை, படம் இப்படி இருந்துட்டதேன்னு புலம்பிட்டே இருந்தேன்.
கடற்கரையில் அரைமணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.ஏமாற்றத்துக்கு மருந்திடுவது போல, ஒரு டால்பின் ஜோடி கடலில் துள்ளித் துள்ளிக் குதித்துச் சென்றது. (கேமரா எடுத்துட்டுப் போகாததால், நோ போட்டோஸ்)
அன்று அருகிலிருந்த ஒரு பார்க்கில் 'அஸ்ட்ரானமி நைட்'.
அஸ்ட்ரானமர்ஸ் க்ளப்-ல இருந்து அஸ்ட்ரானமர்ஸ் மாலை ஏழிலிருந்து ஒன்பதரை மணிவரை
தத்தம் டெலஸ்கோப்புகளுடன் வந்து கோள்கள்,நட்சத்திரங்கள் இவற்றையெல்லாம் பொதுமக்கள் பார்க்க உதவுவார்கள்.அங்கு வருபவர்கள் எல்லாருக்கும், குக்கீ,ஜூஸ் என்று கொடுத்தார்கள்..சாப்பிட்டு முடிக்கும்பொழுது மெதுவே இருட்டத் தொடங்கியிருந்தது..ஏழெட்டு பெரிய டெலஸ்கோப்புகளை செட் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
வானில் மேற்கில் வீனஸ்..அதிலிருந்து கொஞ்சம் தொலைவில்(!!??) மார்ஸ்..அடுத்து சாடர்ன், அமாவாசை முடிந்து சரியாக பதினைந்து நாட்கள் ஆனதால் அழகான அரைவட்டமாக நிலவு..இப்படி அணிவகுத்திருந்தன.
இதுவரை நான் இரவு வானத்தில் நட்சத்திரங்களைப் பார்ததில்லை..அதனால் பல தகவல்கள் எனக்கு புதியதாய்த் தெரிந்தன.வானில் நட்சத்திரங்கள் மின்னுமாம்..கோள்கள் மின்னாமல் ஒளி வீசுமாம்.அதை வைத்து கோள்களை அடையாளம் காணலாம் (இது என் கணவர் சொல்லித்தான் எனக்கு தெரியும்.என்னைப்போல அதிபுத்திசாலிகளுக்கு இந்த தகவல்..இது தெரிந்தவங்கள்லாம், முறைக்காம கன்டினியூ பண்ணுங்க.:) )
என்னென்ன பார்க்கப்போகிறோம் என்று ஒரு அஸ்ட்ரானமரிடம்(தமிழ்-ல என்ன சொல்லுவதுன்னு பிடிபடல..அட்ஜஸ்ட் பண்ணிகோங்க) கேட்டோம்..வீனஸ்,மார்ஸ்,சாடர்ன்,மூன் மற்றும் ஒரு சில நெபுலாஸ்(நட்சத்திரக் கூட்டங்கள்) எல்லாம் பார்க்கப்போகிறோம்..ஒரொரு டெலஸ்கோப்பும் ஒரொரு இடத்தில் போகஸ் பண்ணுவோம் என்றார்.
ஜூபிடர்,நெப்டியூன் இவற்றையெல்லாம் பார்க்க முடியாதான்னு கேட்க, அதோ அங்கே பாருங்க,தெரியும் என்று எதிர்புறம் கைகாட்டினார்..நாங்களும் அங்கு ஏதாவது டெலஸ்கோப் இருக்கிறதோ என்று சீரியஸா திரும்பிப் பார்க்க, சிரித்துக்கொண்டே அந்த ப்ளானட்ஸ் எல்லாம் வெகு தொலைவில் இருக்கு..அதிகாலை ரெண்டு மணி வாக்கில்தான் பார்க்கமுடியும் என்று ஜோக் அடித்தார்.(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
அங்கிருந்த அஸ்ட்ரானமர்ஸ் எல்லாரும் குழந்தைகள் முதற்கொண்டு எல்லாரும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாய்,விளக்கமாய் பதில் சொன்னார்கள்..மக்களும் ஒவ்வொரு டெலஸ்கோப் அருகிலும் கியூவில் நின்று ஒவ்வொருவரும் நிதானமாக கோள்களை கண்டுகளித்தார்கள்.
வெள்ளி(வீனஸ்)விடிவெள்ளி..இது மாலையில் நிலவு தோன்றும் முன்னரே மேற்கில் தோன்றும்,காலையில் சூரியன் உதிக்குமுன்னர் கிழக்கில் தெரியும்..டெலஸ்கோப்பில் பார்த்தபொழுது, அதிக பிரகாசத்துடன் நிலவின் வடிவில்தான் தெரிந்தது.
செவ்வாய்(மார்ஸ்)ரெட் ப்ளானட் என்று அழைக்கப்படும் இந்த செவ்வாய் டெலஸ்கோப் வழியே பார்க்கும்போது பளீரென்று, கிட்டத்தட்ட ஆரஞ்சு நிறத்தில், ஒரு நிலா சைஸில்தான் தெரிந்தது.
சனி(சாடர்ன்) வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளான சனி..மாசுமறுவில்லாத வெள்ளை நிறத்தில் ஒரு வட்டம்..அதனைச் சுற்றி வளையங்கள்..வலப்புறமும் இடப்புறமும் இரண்டு நட்சத்திரங்கள் சைஸில் இரண்டு வெளிச்சப்புள்ளிகள்..அவைதான் டெலஸ்கோப்பில் நம்மால் பார்க்க முடியும் இரண்டு நிலவுகள்.
இந்த கிரகத்துக்கு இருக்கும் நிலவுகளின் எண்ணிக்கை 62. இதிலே இரண்டு நிலவுகள்,அதிகபட்சம் மூன்று நிலவுகள் மட்டுமே டெலஸ்கோப்பில் பார்க்கும்பொழுது தெரிகின்றன.மேலதிக தகவலுக்கு
இங்கே க்ளிக் பண்ணிப் பாருங்க.
சந்திரன்(மூன்) சூரியன் மறைந்தபின்னர், தன் பாலொளியால் பூமியைக் குளிப்பாட்டிய நிலவை க்ளோஸ்-அப்ல பார்க்கப்போகிறோம் என்று ஆவலோடு பார்த்தால்..அந்த அரைவட்டம் முழுவதும் சொறி-சொறியாய்(!!) மேடும் பள்ளங்களும்!!
நாங்கள் பார்த்த டெலஸ்கோப் 120 மடங்கு உருப்பெருக்கிக் காட்டும் திறனுள்ளதாம்.வெறும் கண்களால் பார்க்கையில் அழகு பொலியும் நிலா, அருகில் சென்று பார்த்தால்...அத்தனை அழகும் போய் வெறும் வெள்ளைப் பாறையாய்த் தெரியுது.
நெபுலாஇவை பலமில்லியன் நட்சத்திரங்கள் சேர்ந்த நட்ச்சத்திரக்கூட்டங்கள்தான் இந்த நெபுலாஸ்.டெலஸ்கோப் வழியே பார்க்கையில் உள்ளத்தைக் கொள்ளைகொண்டன.
அன்றைய இரவின் ஹீரோ சனிபகவான்தான்..ஏனென்றால், வீனஸ்,மார்ஸ் இரண்டு கோள்களுமே சிறிய சந்திரன் வடிவில்தான் தெரிந்தன..நிலா..அதன் மேல் யாரும் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை..தொலைநொக்கி வழியே பார்க்கையில், சுற்றிலும் காற்று வளையங்களுடன், கண்ணைக்கவரும் பால்வெள்ளை நிறத்தில், இரண்டு நிலவுகளோடு காட்சிதந்து சிறுவர்முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தது சனிதான்..இப்படி ஒரு கோளிற்கு காக்கை வாகனம் தந்து உருவமும் தந்த நம் முன்னோர்கள் திறமை/ நம் வானசாஸ்திரத்தின் பெருமையை எப்படி சொல்வது என்று தெரியவில்லை..
புதிதாய் ஒரு ப்ளானட்டைப் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தரும்
சனி-யின் வித்தியாசமான வளையங்களுடன் கூடிய உருவத்தைத்தான் பெரும்பாலான அஸ்ட்ரானமர்ஸ் ஃபோகஸ் செய்து வைத்திருந்தார்கள். வந்திருந்த
எல்லாரும் சனிபகவானைத்தான் ஆர்வம் குறையாமல், வெவ்வேறு கோணங்களில் ரசித்தோம்.
இவ்வளவு பெரிய வளிமண்டலம்..பலகோடி நட்சத்திரங்கள்..பூமியைப் போல பலமடங்கு பரப்புள்ள கோள்கள்..
இந்தப் புகைப்படத்தில் மற்ற கிரகங்களுடன் ஒப்பிடுகையில் பூமி எவ்வளவு சிறியதாய் இருக்கிறது பாருங்கள்! நமது பால்வெளி மண்டலம் போல பலநூறு மண்டலங்கள் கொண்ட இந்த யுனிவர்ஸ்-இன் முன்னே நாம் எவ்வளவு சிறிய தூசு என்பதைப் புரியவைத்த ஒரு நிகழ்வாய் இருந்தது இந்த ஸ்கை வாட்ச்சிங்
!
ராவண் பார்த்து புண்பட்ட மனதை சனிபகாவான் சரியாக்கிவிட்டார்.:)
ஆனால் இதன் பின்விளைவாக இங்கே ஒருவர் நான் ஒரு பைனாகுலர்,இல்லல்ல,ஸ்பேஸ் டெலஸ்கோப் வாங்கப்போகிறேன் என்றும், நீங்க எப்படி வாங்கறீங்கன்னு பார்த்திடறேன்னு இன்னொருவரும் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு தேவையில்லாத ஒரு அதிகபட்சத் தகவல்.ஹிஹி!
குறிப்புபீச் போட்டோ மட்டுமே(முன்பொருமுறை அதே பீச் சென்றபொழுது) எங்கள் கேமராவில் எடுத்தது..மற்ற படங்கள் உதவி:கூகுள் இமேஜஸ்