Tuesday, July 27, 2010

கடலோரக் கவிதைகள்..

மலையும்,மலை சார்ந்த இடமும், கடலும்,கடல் சார்ந்த இடமுமான இந்த ஊரில் இருக்கும் அழகுக் கடற்கரையொன்றின் ஓரத்தில் நான் கண்ட கவிதையான காட்சிகள்..

மணலில் தத்தித் தத்தி நடைபழகும் புறா..

கரையிலும் துள்ளிக்குதிக்கும் பச்சை டால்பின்கள்..

சற்றும் பயமின்றி,ஜனத்திரளில் உலவும் பறவைகள்..

கரையோரத்தில் இருந்த கண்ணைக் கவரும் அழகு ரோஜாக்கள்..


பாராசூட்டில் பறக்கும் ஜோடி..


பீச்சிற்கு வந்திருந்த கனவான்கள்:)...

மொத்தத்தில் இந்தக் கடற்கரை,இதுவரை நான் பார்த்த கடற்கரைகளிலேயே மிகவும் அழகான ஒன்று!!

இன்னும் புகைப்படங்கள் காண இங்கே க்ளிக்குங்கள்!!!!

Friday, July 23, 2010

இட்லிப்பொடி & பொடிதோசை


வீட்டிலேயே பொடிவகைகள் அரைத்து வைக்கும் திறமை எல்லாம்
எனக்கு கிடையவே கிடையாது. ஊரில் அம்மா மிளகாய்த்தூள் அரைத்துவைப்பார்கள். மெஷினுக்கு கொண்டுபோய் அரைத்துக்கொண்டு வந்து கொடுப்பதுடன் நம்ம வேலை முடிந்தது..அதிலே என்னென்ன சாமான்கள்,என்னென்ன ப்ரபோர்ஷன் எல்லாம் நான் ஒரு முறை கூட பார்த்ததில்ல. அதுக்கு மெயின் ரீஸன்,இந்த மிளகாப்பொடிக்கு எல்லாம் வறுத்து எடுத்துவைப்பதற்குள்ள அம்மா ஒரு ஆயிரத்தெட்டு தும்மலாவது போட்டுடுவாங்க..இதுக்கப்புறமும் அந்த டேஞ்சரஸ் ஜோனுக்கு நம்ம எட்டிப்பாப்பமா என்ன??

திருமணத்தின் பின்னரும் என் கணவர் எம்.டி.ஆர்.-இல் எத்தனை பொடிவகைகள் உண்டோ,அத்தனையும் வாங்கி கிச்சனை நிறைத்து வைத்திருந்தார். அதனால் என் சமையலும் சுமாரா:) ஓடிக்கொண்டு இருந்தது.காமெடி என்னன்னா, எனக்கு சாம்பார் பொடிக்கும்,ரசப்பொடிக்கும் வித்யாசம் தெரியாது..இரண்டும் ஒரே கலர்ல இருக்கும். இவரானா பிக்பஸார்ல அழகழகா ஒரேமாதிரி டப்பா(வித் ஸ்பூன்) வாங்கி கிச்சன் கப்போர்ட் எல்லாம் அடுக்கி வைச்சிருந்தார்.அட்லீஸ்ட் பேக்கட் இருந்தாலாவது கண்டு பிடிச்சிருப்பேன்னு வைங்க.ஏதோ சமைத்துட்டு இருந்தேன். அப்புறம் ஒருமுறை மாமியார் வந்தப்ப அவங்ககிட்ட கேட்டேன்..கொஞ்சம் லைட் கலர்ல இருப்பது ரசப்பொடி,டார்க் கலர்ல இருப்பது சாம்பார் பொடின்னு சொன்னாங்க. (எனக்கு எல்லாமே ஒரே கலர்ல தெரிந்தது!!ஹிஹி)

வீட்டிலிருந்த இட்லிப்பொடி தீர்ந்துடுச்சு. திருமணத்துக்கு முன் அம்மா பொடிக்கு வறுத்து தந்தா,அம்மியில் நுணுக்கி எடுப்பது என் வேலை. அந்த அனுபவத்திலே(!!) ஒருமுறை நானே இட்லிப்பொடிக்கு வறுத்துஅரைப்போம்னு முடிவு செய்து, து.பருப்பு, க.பருப்பு,உ.பருப்பு,கொள்ளு,அரிசி,ப.பயிறு,வரமிளகாய்,பெருங்காயம் இப்படி வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் வறுத்து எடுத்துவைச்சேன்.இவையெல்லாமே அம்மா இட்லி பொடிக்கு போடுவாங்க..ஆனா, ப்ரபோர்ஷன்-னு ஒண்ணு இருக்கில்ல? அதுபத்தி யோசிக்காம நான்பாட்டுக்கு ஏதோ வறுத்து,என்னமோ அரைத்தும் விட்டேன். வாசனை எல்லாம் நல்லாவே வந்தது..பக்கத்துவீட்டு ஆன்ட்டி இட்லிப்பொடிக்கு வறுத்தாயா?-ன்னு கேட்கும் அளவுக்கு சூப்பர் வாசனை. ஆனா டேஸ்ட்டுதான் கொஞ்சம் காமெடியாடிடுச்சு.காரம்,உப்பு இரண்டும் தூக்கலா தெரிந்தது.அத்தோட விட்டேன்,இந்த இட்லி பொடி அரைப்பதை!!

அதுக்கப்புறம் நேரா ரோட் ஐலேண்ட் வந்து இறங்கினோம்..எனக்கும் சமையல்ல இன்ட்ரஸ்ட் வந்தது.இருந்தாலும், எல்லாம் ரெடிமேட் மசாலா பொடிகள்தான்! சாம்பார் பொடி,ரசப்பொடி,எம்.டி.ஆர்.மெட்ராஸ் கறி பவுடர் இவை மூன்றும் என் ப்ரீஸரில் எப்பொழுதும் இருக்கும்.இட்லி பொடி அப்பப்ப வாங்கிப்போம்..போனவருஷத்தில ஒருமுறை அறுசுவை.காம்-ல உலவிட்டு இருக்கும்போது இந்த இட்லிப்பொடி கண்ணுல பட்டது..1:1 கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பு, கூட மிளகாய்,பெருங்காயம்,உப்பு!! வறுத்து அரைத்தா அவ்ளோதான்..ரொம்ப சிம்பிளா இருக்கே,ட்ரை பண்ணிப்பார்ப்போம்னு கொஞ்சமா செய்தேன்..ரொம்ப நல்லா வந்தது.அதிலிருந்து வீட்டிலேயேதான் இட்லிப்பொடி அரைத்துக்கொள்வது.

ஒரிஜினல் ரெசிப்பியின் லிங்க்-ஐ கொடுக்கலாம்னு தேடிப்பாத்தேன்.கண்டுபிடிக்க முடியவில்லை..அதனால அந்தப்பிரிவின் லிங்க் இதோ. இந்த ரெசிப்பியை கொடுத்தவருக்கும், அறுசுவைக்கும் என் நன்றிகள்!

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு-1/4கப்

உளுந்துப்பருப்பு-1/4கப்

வரமிளகாய்-12(காரத்திற்கேற்ப)

பெருங்காயத்தூள்-3/4 ஸ்பூன்

உப்பு
செய்முறை கடலைப்பருப்பு,உளுந்துப்பருப்பை தனித்தனியாக வெறும் கடாயில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவைக்கவும். மிளகாயையும் கருகாமல் வறுத்து எடுத்து வைக்கவும். இவை அனைத்தும் நன்கு ஆறியதும் மிக்சியில் கொறகொறப்பாக பொடித்து,உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

பலமுறைகள் இதனை செய்த பின்னர் கான்பிடென்ஸ் வந்து இப்ப இதே பொருட்களுடன் 2 டேபிள்ஸ்பூன் வெள்ளை எள்ளையும் வறுத்து அரைக்க ஆரம்பித்திருக்கேன்.கூடவே சிறு துண்டு வெல்லமும்.

என் அன்புக்கணவருக்கு(இமா&சந்தனா,நோட் திஸ் பாயின்ட்:)) இந்த இட்லிப்பொடி மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் நான் இட்லிப்பொடி அரைப்பதே அவருக்குத்தான்!(எனக்கு இட்லிப்பொடி அவ்வளவா பிடிக்காது.) இதோ,அதற்கான சாட்சி..:))))))

இட்லிப்பொடியை எப்பவும் நான் ப்ரிட்ஜில்தான் வைப்பது.மற்ற பொடிவகைகள் எல்லாம் ப்ரீஸர்ல..இதுமட்டும் ப்ரிட்ஜ்ல.(அது ஏன்னு யாரும் கேட்டுடாதீங்க,எனக்கே தெரியாது!ஹிஹி)
ப்ரிட்ஜ்/ப்ரீஸர்ல வைச்சா பொடிகள் ப்ரெஷ்ஷா இருக்கும் என்று படித்த ஞாபகம்.

இந்த இட்லிப்பொடியுடன் இதயம் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையா இருக்கும்,இதயத்துக்கும் நல்லது. நல்லெண்ணெய் இல்லயா? இட்ஸ் ஓக்கே, பாராசூட் தேங்காயெண்ணெய் கூட ஊற்றி சாப்பிடலாம்..அதுவும் இல்லையா, அப்ப சமையல் எண்ணெய்,ஆலிவ் ஆயில் இதுல ஒண்ணு கண்டிப்பா உங்க கிச்சன்ல இருக்கும்ல?அதை ஊற்றி சாப்பிடுங்க.:)

இட்லிப்பொடியில் செய்த பொடிதோசை..(தோசைய தோசை மாவில் சுட்டு,இந்த இட்லிப்பொடிய தூவணுங்க:) )












பொடிதோசை &இட்லிப்பொடி (சாம்பார்,சட்னியெல்லாம் செய்யலை..பொடியேதான்! அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க:))

பின்குறிப்பு
இந்த மைண்ட்வாய்ஸ்(நன்றி அப்பாவிதங்கமணி:)) தொந்தரவு தாங்க முடீலங்க.
"வெள்ளிக்கிழமயும் அதுவுமா காலங்காத்தால, /அட்லீஸ்ட் பேக்கட் இருந்தாலாவது கண்டு பிடிச்சிருப்பேன்னு வைங்க./ன்னு பொய் சொல்லறியே,நீயெல்லாம் உருப்படுவியா? இன்னும் ப்ரீஸருக்குள்ள எல்லா பொடியும் பேக்கட்,பேக்கட்டா தானே வைச்சிருக்கே? உண்மைய ஒத்துக்கோ"-ன்னு டிஸ்டர்ப் பண்ணுது. ஸோ..ஒத்துக்கிறேன்!ஹிஹிஹி!!

இந்த போஸ்டிங்-ஐ சமையல் குறிப்புல போடுவதை விட 'மொக்கை'ல போட்டா பொருத்தமா இருக்குமேன்னு லேபிள்ஸ்லயும் மாத்திட்டேன்.

Thursday, July 15, 2010

ஸ்வீட் பன்

தேவையான பொருட்கள்
மைதா-2கப்
ஏக்டிவ் ட்ரை ஈஸ்ட்-1டீஸ்பூன்
சர்க்கரை-1/3கப்
உப்பு-1டீஸ்பூன்
இளம் சூடானதண்ணீர்-1/4கப்
முட்டை(அறை வெப்பநிலையில்)-1
வெண்ணெய்(அறை வெப்பநிலையில்)-1டேபிள்ஸ்பூன்
பால் -1/4கப்
வெள்ளை எள்-1டேபிள்ஸ்பூன்

செய்முறை
வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்,2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை,உப்பு சேர்த்து கலந்து பத்துநிமிடங்கள் வைக்கவும்.
முட்டையில் மஞ்சள்கரு-வெள்ளைக் கருவைத் தனித்தனியாகப் பிரித்து வைக்கவும்.
பாலைக் காய்ச்சி,ஆறவைக்கவும். அத்துடன் உருக்கிய வெண்ணெய்,முட்டையின் வெள்ளைக்கரு,மீதமுள்ள சர்க்கரை சேர்த்து கரைத்துவைக்கவும்.
பத்துநிமிடங்களில் ஈஸ்ட்கலவை நுரைத்திருக்கும். அத்துடன் பால்+முட்டை கலவையை சேர்த்து கலக்கவும்.
மைதாவுடன் இந்தக்கலவையை சிறிதுசிறிதாக சேர்த்துகலக்கவும். மாவு சற்றே தளர்ச்சியாக இருக்கவேண்டும். பிசைந்த மாவை 2மணி நேரங்கள் சற்றே சூடான இடத்தில் வைக்கவும்.

மாவு இரண்டுமடங்காகி இருக்கும்.உலர்ந்த மாவினை கைகளில் தடவிக்கொண்டு பிசைந்த மாவை மறுபடியும் பிசைந்து எலுமிச்சைப்பழ அளவில் உருண்டைகளாக்கி சூடான இடத்தில் ஒரு மணிநேரம் வைக்கவும்.

முட்டையின் மஞ்சள்கருவுடன் ஒருஸ்பூன் பால்சேர்த்து நன்றாக கலந்து, அதனை நன்றாக உப்பியிருக்கும் பன்களின் மீது சீராகத் தடவவும்.

பன்கள் மீது எள்ளை தூவி, 375F ப்ரீஹீட் செய்த அவன்-ல் சுமார் 16நிமிடங்கள் பேக் செய்யவும்.

பன்கள் தயார்.


விருப்பபடி பட்டர்,ஜாம் தடவி சாப்பிடலாம்.



Tuesday, July 13, 2010

ஏ குருவி!!

இங்கே வீட்டைச் சுற்றிலும் நிறைய மரங்கள்.கிட்டத்தட்ட காட்டுக்குள் இருப்பது மாதிரிதான். அவ்வப்பொழுது, சின்னசின்ன குருவிகள் கீச்-கீச் என்று கத்தியபடி அருகில் இருக்கும் மரங்களில் அமர்ந்திருக்கும்..சிட்டுகுருவி போல சுறுசுறுப்பு என்று சொல்வது முற்றிலும் சரியே..இந்தக் குருவிகள் சிட்டுக்குருவிகளில்லை,ஆனால் இவையும் ஒரு வினாடி ஒரு இடத்தில் இருக்காது.படபடவென்று இறக்கைகளை அடித்தபடி அங்குமிங்கும் பறந்துகொண்டேதான் இருக்கும்.மேற்கண்ட புகைப்படத்திலிருப்பவர் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் குருவியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.(எல்லாக் குருவிகளும் ஒரேமாதிரியாய் இருக்கே,எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? :))

ஒருநாள் மாலை நேரம், பக்கத்து வீட்டைக் கடக்கும் சமயம் குருவிகள் சத்தமாக இருந்தது..சில நிமிஷங்களில் திரும்பி வரும்போதும் அதே சத்தம்..இதே போல் ரெண்டு மூன்று முறை கவனித்தபின்னர், அப்படியே கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால்..ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது.

இது ஒரு முற்பகல் நேரம்..இவர் வீடு(கூடு) கட்ட கட்டுமானப் பொருட்கள் சேகரித்துக்கொண்டிருந்த வேளை..

பொறுமையாய் சில போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்..அதன்பின்னர் 'எத்தனை போட்டோதான் எடுப்பே?' என்பது போல ஒரு லுக் விட்டுட்டு பறந்துவிட்டார்.

பறந்து,பறந்து எங்கு சென்றார் குருவியார்? அவர் கட்டிய கூடுகள்,அவரது குழந்தைகளையெல்லாம் பார்க்க ஆவலா? இங்கே க்ளிக் பண்ணுங்க!

Thursday, July 8, 2010

க்ராஸ்-ஓவர் வெஜ். பஃப்ஸ்

தேவையான பொருட்கள்
பஃப் பேஸ்ட்ரி ஷீட்
வெஜிடபிள் ஸ்டஃபிங்-1கப்
முட்டை-1
மைதா(அ)ஆட்டா மாவு-1/4கப்

செய்முறை
பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை பேக்-இல் குறிப்பிட்ட நேரம் முன்பாக ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.

ஸ்டஃபிங்-ஐ தயாரித்துக் கொள்ளவும்.

உலர்ந்த மாவு தூவி பேஸ்ட்ரி ஷீட்டை செவ்வகமாக தேய்க்கவும்.அதன் நடுவில் பூரிக்கட்டையை வைத்து இரண்டாக மடித்து,கத்தியால் பேஸ்ட்ரி ஷீட்டை படத்திலுள்ளவாறு நறுக்கவும்.

நறுக்கிய துண்டுகளை கவனமாக பிரித்து பூரிக்கட்டையை எடுத்துவிட்டு ஸ்டஃபிங்-ஐ வைக்கவும்.

ஒரு ஓரத்திலிருந்து ஒரு முனையை எடுத்து எதிர்புறமாக வைத்து அழுத்திவிடவும். பின்னர் அதற்கு எதிர்புறமிருக்கும் துண்டையும் அதே போல குறுக்காக வைத்து அழுத்திவிடவும்.

இதேபோல எல்லா துண்டுகளையும் ஒட்டவும்.

முட்டையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துகொண்டு பேஸ்ட்ரிஷீட் மீது சீராக தடவி 5நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.

400F ப்ரீஹீட் செய்த அவன்-ல் பேஸ்ட்ரி ஷீட்களை வைத்து 15நிமிடங்கள் பேக் செய்யவும்.

க்ராஸ்-ஓவர் பஃப்ஸ் ரெடி! கத்தியால் வேண்டிய அளவு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

குறிப்பு
ஒரே ஷேப்பில் பஃப்ஸ் செய்வதற்கு பதிலாக இப்படி செய்தால் வித்யாசமாக இருக்கும். இதில் நான் ஸ்டஃப் செய்திருப்பது உருளை-கேரட்-பச்சை பட்டாணி சேர்த்த மசாலா. அவரவர் விருப்பப்படி முட்டை,மஷ்ரூம், நான்வெஜ் ஸ்டஃபிங், அல்லது பிடித்தமான பழங்கள்,ஜாம்,சாக்லேட் இனிப்புதேங்காய்த்துருவல் வைத்து பேக் செய்யலாம்.

இங்கு உபயோகித்திருக்கும் பேஸ்ட்ரிஷீட் சிறிய சதுரங்களாக இருப்பது. Pepperidge farm pastry sheet எனில் ஒரு ஷீட்டினை தேய்த்தாலே நல்ல நீளமாகும்.

Tuesday, July 6, 2010

பீர்க்கங்காய் பொரியல்

தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய்-1
வெங்காயம்-சிறிது
பச்சைமிளகாய்-3(அ) காரத்துக்கேற்ப
தேங்காய்த்துருவல்-1ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு-தலா 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை
பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,ப.மிளகாய் நறுக்கிவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து கறிவேப்பிலை,வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பீர்க்கங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
காய் வெந்ததும் தேங்காய்த்துருவல்,உப்பு சேர்த்து கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும்.

இது எங்க வீட்டில் பேவரிட் பொரியல்..பீர்க்கங்காய் ஒவ்வொருமுறை வாங்கிவரும்போதும் அதில் வேறு ஏதாவது ரெசிப்பி செய்யவேண்டும் என்று நினைப்பேன்..ஆனால் டீபால்ட்டா இதே பொரியல் செய்துடுவேன். :) மிகவும் சுலபமாக இருக்கும்..விரைவாகவும் செய்துவிடலாம்..டேஸ்ட்டும் அருமையாக இருக்கும்.

இதில் பச்சைமிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்தும் செய்யலாம். காயிற்கு உப்பு சேர்க்கும்போது கவனமாக சேர்க்கவேண்டும்..இதுவும் கீரை போலதான்..நறுக்கி வைக்கும்போது நிறைய இருப்பதுபோல இருக்கும்,ஆனால் வெந்தபின்னர் அளவு குறைந்துவிடும்..அதனால் நான் தேங்காய்த்துருவல் சேர்க்கும்பொழுதுதான் உப்பு சேர்ப்பேன்.
~~~~~~~
ஜெய்லானி அண்ணா வழங்கிய தங்கமகன் விருதிற்காக ஒரு சிம்பிள் ட்ரீட்..

இது என் கணவர் செய்யும் ஈஸி அண்ட் ஹெல்த்தி ஸ்நாக்..எல்லோரும் எடுத்துக்கோங்க! :)

விருதுக்கு நன்றி ஜெய்லானி அண்ணா!

Friday, July 2, 2010

தோட்டநிலவரம்..

வீட்டுத்தோட்டத்தின் முதல் அறுவடை..ஒரே ஒரு ஸ்ட்ராபெர்ரி!:) சரிபாதியா நறுக்கிருக்கேன்,எல்லாரும் சுவைத்துப் பாருங்க.

இந்தப்பதிவில் நாங்க வாங்கிவந்த செடிகள் பற்றி..

இவைதான் நர்சரியிலிருந்து வாங்கி வந்த மொத்த செடிகள்! மோஸ்ட்லி எல்லா நாற்றுகளும் தெரியுதுன்னு நினைக்கிறேன்.(என்னென்ன செடிகள்னு கண்டுபிடிங்களேன்,முடிஞ்சா.. :) )

ப்ளாஸ்டிக் டப்பால புதைத்து வைத்த வெந்தயம், இவ்வளவு அழகா,செழிப்பா முளைத்து வந்தது.சில நாட்கள்-ல ப்ளாஸ்டிக் டப்பா-ல இருந்து மண்ணுக்கு மாற்றி வைக்கிறேன் பேர்வழின்னு, மொத்த நாற்றுகளையும் பிரித்து மண்ணில நாலைந்து இடத்தில நட்டுவைத்தேன்..பிரிக்கும்போது வேர்கள் அறுந்து போயிருக்கணும்..எல்லா செடிகளும் அப்படியே வாடிப்போய்விட்டன.அதே மாதிரி கொத்துமல்லி விதைகள் ஒன்றுகூட முளைக்கவேயில்லை.:(

இரண்டு ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் வாங்கிவந்தோம்(சில பிஞ்சுகளுடன்).
மண்ணில் நட்டபின்னர் பெரிதாய் இருந்த காய்கள் செடிக்கு ஒன்று என்ற வீதத்தில் பழுத்தன.மற்றவை அப்படியே வாடிப்போய்விட்டன.இதோ எங்க ஸ்ட்ராபெர்ரி பார்ம் அறுவடை... :)


செடிகள் வளர்கிறது..எப்ப பூ,காய்,பழமெல்லாம் விரைவில் வந்துடும்னுஎதிர்பார்க்கிறேன்.


யெல்லோ கோல்டன் பீன்ஸ்..இதுவும் பூக்களுடன் நர்சரில இருந்து வந்தது.இரண்டிரண்டா ரெண்டு மூன்று முறை காய்த்தது.


இப்போதைக்கு இவ்ளோதாங்க அப்டேட்டு..மீண்டும் அடுத்த பதிவில தோட்டநிலவரம் தொடரும்.

முந்தைய பதிவுகள் காண,
என் வீட்டுத் தோட்டத்தில்...
தோட்டம்..

LinkWithin

Related Posts with Thumbnails