
எதற்கு முன்னோட்டம்? என்று கேட்டுக்கொண்டே என் வலைப்பூவுக்கு *வருகை தரும்* அனைவருக்கும் வணக்கம்! அது வேற ஒண்ணுமில்லீங்க, சில பல வருஷங்கள் கழித்து நமக்குப் பிடித்த சில பொருட்களை பார்த்தா கொஞ்சம் ஓவர் எக்ஸைட் ஆவோம் இல்லையா? என்னது...இல்லையா?? அவ்வ்வ்வ்வ்...அப்ப நாந்தான் ஓவர் ரியாக்ட் பண்ணறேனா? எனிவேஸ்..வந்தது வந்துட்டீங்க, மேற்கொண்டு படிங்க, உங்களுக்கே புரியும்!
எங்க வீட்டில் இருந்து ஜஸ்ட் 10 மைல் தொலைவில் இருக்கும் ஒரு சனீஸ்..ச்சீ,வாய் குழறுதே, சைனீஸ் மார்க்கெட் போனதும், அங்கே வாங்கிய பொருட்களும், அதை வைச்சு நான் சமைச்ச ரெசிப்பிகளும் பற்றிய ஒரு முன்னோட்டம் தாங்க இந்தப் பதிவு.
இந்த 99 Ranch Market என்னவரின் அலுவலகம் போகும் வழியிலேதான் இருக்கிறது. வாரம் 5 நாட்கள் அதே டைரக்ஷனில் போவதாலோ என்னவோ, வீகென்ட் ஆனால் அங்கே ஷாப்பிங் என்றால் எதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிருவார். கூடவே அங்கே இருக்கும் பிரத்யேகமான வாசனை(!)யும் அந்தக் கடையை அவாய்ட் பண்ண வலு சேர்க்கும் காரணமாகிவிடும். இந்தக் கோடையில் ஒரு முறையாவது போய் பலாப் பழம் வாங்கிவரவேண்டும் என்று பலநாள் திட்டமிட்டு(!) ஒரு நாள் வெற்றிகரமா போயிட்டு வந்துட்டோம். அந்தக் கொலாஜ் தான் முதல் படத்தில் நீங்க பார்ப்பது.

இவையெல்லாம் ரான்ச் மார்க்கட் சென்று வந்ததின் பை-ப்ராடக்ட்ஸ்! :)))) மொதப் படத்தில் பலாப் பழமும், கொட்டையும் & பலாக்கொட்டை பொரியல் (லஞ்ச் பாக்ஸில்), மாம்பழம் (நறுக்குவது எப்படின்னு போனவருஷம் போட்ட பதிவு மறந்து போயிருந்தா இதோ,
இங்கதான் இருக்கு. மறுபடியும் பாருங்க), அடுத்த படத்தில், முருங்கை கீரை & முருங்கை கீரை பொரியல், அது ஒண்ணும் பிரமாதமான ரெசிப்பி இல்லே,
இங்க இருக்கு, நேரமிருந்தா அதையும் எட்டிப் பாருங்க. கடைசிப்படம் ஆர்கானிக் மஷ்ரூம். அதில செய்த ரெசிப்பியும் விரைவில் வரும்.
~~~~~~
இன்றைய பதிவில், "ஸ்டார் ஆஃப் தி போஸ்ட்"! :)
பழங்களின் அரசன் பலா!

ராஞ்ச் மார்க்கட்டில் நுழைந்தவுடன் கண்ணில் பட்டது ஸேல்-ல இருந்த ஸ்ட்ராபெரியும், மாம்பழமும்! இரண்டையும் எடுத்து ட்ராலில போட்டுகிட்டு உள்ளே என்டர் ஆனோம். உள்ளே போய் முருங்கை கீரையையும் எடுத்தாச்சு. என்னவர் அவர் பங்கிற்கு 2 பாக்கட் மஷ்ரூமை எடுத்துப் போட்டார். அங்கயும் இங்கயும் சுத்தி சுத்தி பாத்தோம், நம்ம தேடி வந்ததை காணோம்! சரி இந்த வருஷம் வரவே இல்லை போலன்னு மனசைத் தேத்திட்டு திரும்பினோம், ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தார் பழங்களின் அரசர்! :))
உடனடியாக என்னவரிடம் இருந்து ஐ-ஃபோனைப் புடுங்கி ஆசைதீர படம் பிடித்தபிறகு மெதுவா பக்கத்தால போய்ப் பார்த்தேன். ரெண்டு துண்டு நறுக்கி வைச்சிருந்தாங்க, மத்த பழம்லாம் முழுசு! நறுக்கிய 2 துண்டுமே அழுகிப் போயிருந்தது! பொக்குன்னு போச்சு எனக்கு. அப்புறம் அங்க இங்க தேடி, மார்க்கட்டில் வேலை செய்யும் ஆளை தேடிப் பிடித்து, புதுசா பலாபழம் வெட்டிக் குடுங்க என்று கூட்டிவந்தேன், அதற்குள் அங்கே புதிதாய் வெட்டிய பழத்துண்டுகள் ரெண்டு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டியது! நான் அங்கிட்டுப் போய் இந்த ஆளைக் கூட்டிட்டு வரதுக்குள்ள புதுசா கட் பண்ணி வைச்சிருக்காங்க... கர்ர்ர்ர்ர்ர்! என் பேச்சைக் கேட்டு, கைவேலையை விட்டுட்டு, பலாப்பழம் நறுக்கித்தர வந்த ஆளிடம் கொஞ்சம் அசடு வழிஞ்சுட்டு, பழத்தை எடுத்து கார்ட்-ல வைச்சுகிட்டு நடையக் கட்டினேன்! :)))

உஸ்....ஸப்பா! ஒரு வழியா அரசரை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டோம். வந்த உடனே எங்க வீட்டு அரசர் மும்முரமாக பழத்தை நானே கட் பண்ணி எடுக்கிறேன் என்று கையில் எண்ணெயெல்லாம் தடவிக்கிட்டு போஸ் குடுத்தார். ஆனா அவர் நினைச்சது போல ஈஸியா வேலை நடக்கலை. இந்தா நீயே பாத்துக்கோ என்று என்னிடம் தள்ளிட்டார்!

மேலே இருந்த தண்டுப் பகுதியை நறுக்கிட்டு...பழத்தைப் பிளந்து..

சுளைகளை எடுத்தாச்சு...மொத்தம் 15 சுளைகள் முழுதா இருந்தது. வேலை நடக்க நடக்க சைடுல வாய்க்குள்ள போனதெல்லாம் கணக்கில்லைங்கோ! ;)

முழுசா தேறிய சுளைகளில் இருந்து கொட்டை, மாசு ( பழத்துக்கும் கொட்டைக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய படலம்) எல்லாம் எடுத்து க்ளீன் பண்ணி, சாப்பிடத்தயாராய் பலாச்சுளைகள்!

கோவையில் உக்கடம் பகுதியில் கோடையில் மாம்பழமும் பலாப் பழமும் சக்கைப்போடு போடும்! கேரளாவில் இருந்து வரும் இரண்டு பழங்களும் மலை போலக் குவித்து வைச்சிருப்பாங்க. இது மட்டும் வாங்க என்றே தனியாக ட்ரிப் போய் வருவோம். முழுப்பழம், அரைப் பழம் என்று கிடைக்கும் பலாவை அரிவாள் மனையில் தேங்காயெண்ணெய் தடவி அரிந்து பிரிப்பதுக்கு வீட்டில் எல்லாரும் அலுத்துக்கொண்டாலும் நான் மட்டும் விதிவிலக்கு. ரொம்ப ஆர்வமா இந்த வேலையைச் செய்வேன்.
பலாச்சுளைகள் நிறையஇருந்தால் வெல்லம் சேர்த்து வதக்கி வைப்பது/ பாயசம் செய்வதும் எப்பவாவது நடக்கும். பலாக்கொட்டையை விறகடுப்பில் வேகப்போட்டு சாப்பிட்டா ஜூப்பரா இருக்கும்! பலா சீசனில் கடைகளில்/சந்தையில் கொட்டைகள் மட்டுமே கூட தனியா விற்பாங்க..50, 100 என்று எண்ணிக் குடுப்பாங்க. இங்கே பலாப் பழம் எப்படி இருக்குமோ என்று டவுட்டிலயே வாங்கினோம், ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க..தேன் போல சுவைம்பாங்களே,அப்படி ஒரு இனிப்பு! :P

பலாவுடன் தேன் சேர்த்தும் சாப்பிடுவது நிறையப் பேரின் வழக்கம். என்னவர் பலாப் பழம் தயாரானதுமே தேன் எங்கேன்னுதான் கேட்டார்! வெறும் சுளைகளே தேன் போல இருக்கே, அப்புறம் தேன் எதுக்கு என்று கேட்டேன். "சாப்பிட்டுப்பார் உனக்கே தெரியும்"-னு பதில் கிடைத்தது! :P :)

பழங்களை அப்படியே சாப்பிடறதுதான் என் (ப)வழக்கம். என்னன்னாலும் இப்படி காம்பினேஷன்லாம் அவ்வளவு சீக்கிரம் ட்ரை பண்ணிர மாட்டேன்! அதனால் நான் தேன் தொட்டு சாப்பிடலை. நீங்க எந்தக் கட்சி? ;)
இந்த முறை பழத்தைப் பிரித்து எடுக்கையில் என்னவர் சொன்னார், "என்ன மாதிரி ஒரு பாதுக்காப்பான பெட்டகத்துக்குள்ளே இவ்வளவு இனிப்பான பழத்தை வைத்திருக்கு இந்த இயற்கை..முள்ளு முள்ளா இருக்கும் பழத்தைப் பிரிக்கணும், அதிலும் பிசின் போலே ஒட்டும் பாலுடன் போராடி! சுளைகளை எடுத்தாலும் உடனே சாப்பிட முடியாது..உள்ளே இருக்கும் கொட்டை, அதைச் சுற்றி இருக்கும் மாசு ..இதையெல்லாம் பொறுமையா எடுக்கணும்! அப்புறம்தான் சாப்பிடமுடியும்! மனிதர்களைத் தவிர வேறு யாருமே இந்தப் பழத்தை ருசிக்க முடியாது"என்று! இல்லையே, நம்ம முன்னோர்கள் ருசித்திருக்காங்க என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார். நீங்க நம்புறீங்களா?
எதுவுமே சுலபமாக் கிடைச்சுட்டா அதன் அருமை தெரியாது இல்லையா? அதனாலதான் கஷ்டப்பட்டு சாப்பிடணும் என்று இப்படி ஒரு பழமும் படைக்கப்பட்டிருக்கிறது போலும்! சரிவிடுங்க, ரொம்ப பேசிப்போட்டன், 2 பலாச்சுளை சாப்டுட்டுப் போங்க! :)))

*-- இந்த வார்த்தையைத் தவறவிட்டு மறுபடி இணைத்திருக்கிறேன். :)
Mahi looks like you forgot to put the links for cutting Mangoes etc... Pls check
ReplyDeleteThanks for the quick feed back Anony! Thought of adding the links at last,I did forget and published the post! ;)
ReplyDeleteAdded the links now, thanks again! :)
மக்களே,படங்கள் தெளிவாத் தெரியுதா?
ReplyDeleteவழக்கமா வரும் ஸைஸ் இல்லாம சிறியதா தெரியுது எனக்கு. ரைட் க்ளிக் செய்து பார்த்தாலும் zoom பண்ணக்கூட முடியலை, சின்ன ஃபோட்டோஸாகவே தெரியுது..உங்களுக்கு எப்படி?
எங்களுக்கு படம் தெளிவாக தெரிகிறது
ReplyDeleteGood one. Here we can buy jack fruit in Korean store.
ReplyDeleteHave to go. Will be back later.
Enga 99 ranch doesnot sell jackfruit...soooo bad....interesting write up as always
ReplyDeleteEnaku ippo poi thoongum pothu dreamla pala pazam than varapothunu ninaikiren...very nice post.
ReplyDeleteSuper post, pazhasulai paarkave supera irukku..
ReplyDeleteபலாப்பழம் இவ்வளவு நல்லா இருக்குமா? எனக்குமட்டும் அதன் வாசனை பிடிக்கவே இல்லே. அதனால சாப்பிடமாட்டேன்.
ReplyDeleteEven i love to have with honey... :)
ReplyDeleteமகி பலாப்பழத்தை உருக்கின நெய்யில் தோய்த்து சாப்பிட்டுப்பாருங்க... படங்களும் பதிவும் பலாப்பழம் போல் சுவையாக இருந்தது.
ReplyDeleteமுன்னோட்டம்னதும் எனக்கு தூர்தர்ஷந்தான் ஞாபகம் வந்தது.... ;)... பலாப்பழம்,பலாக்கொட்டை அத சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம்னு ஆகிடுச்சு... நீங்க சொன்னதுக்காகவாவது வாங்கணும் மகி. (எப்படியெல்லாம் டெம்ப்ட் பண்றாங்கப்பா :((..)...
ReplyDeleteமுக்கனிகளில் மிகுந்த சுவைக் கொண்டவை மா, பலா இரண்டும். இப்போ அவை கண்ணுக்கு எட்டியும் வாய்க்கு கிடைக்காமல் இருப்பதால் மஹிக்கு வயித்த வலிக்கப் போகுது... :)))
ReplyDeleteபலாவில் தேன் தொட்டெல்லாம் பிடிக்காது. ஆனா கருப்பட்டி பாகில் போட்டது ரொம்...ம்ம்ம்ம்ப பிடிக்கும் :-) முடிந்தால் என் வலையில் ரெசிபி கொடுக்கிறேன். ஃபோட்டோஸ் அருமை மஹி!
பலா பழ படங்கள் படா அழகு!
ReplyDeleteகூடவே அங்கே இருக்கும் பிரத்யேகமான வாசனை(!)யும் //
ReplyDeleteawww
இங்கே அந்த கடைக்கு வெளியே சேர் போட்டிருப்பாங்க அங்கே உக்காந்து ஐஸ் க்ரீம் சாப்பிடுவேன் .சாப்பிட்டு முடியுமுன் என் கணவர் உள்ளே போய் பொருள் வாங்கிட்டு வருவார்
பலாபழம் பார்க்கவே அவ்ளோ கலரா தகதகன்னு இருக்கு இந்த வீக் போய் வாங்கி சாப்பிடனும் .
ReplyDeleteஆமா பூசார் இந்த போஸ்டை பாக்கவில்லையா.எங்க வீட்டிலும் அடுப்பில் சுட்டு சாப்பிடும் பழக்கமுண்டு .இங்கேயும் நான் கிரில் போடும்போது சுட்டு சாப்பிட்டிருக்கேனே :))))
மகி மற்ற நேரம் தெரிவதை விட இந்த முறை எல்லா படங்களும் என்லார்ஜ் ஆகி தெரியுது .very clear
ReplyDeleteவாறேன் மகி, ஆறுதலாகப் படிச்சுப்போட்டே பின்னூட்டம் போடுவேன்.
ReplyDeleteமகி, ஒரு வழியா பழத்தை வாங்கி சாப்டாச்சா!பழமும் பார்க்க புதுசா நல்லாருக்கு.நம் முன்னோர்கள்(!) மட்டுமில்லாம அணிலும் மரத்திலேயே நல்ல, சுவையான, பழுத்த பழமாகப் பார்த்து டேஸ்ட் பன்னிடும்.
ReplyDelete//எதற்கு முன்னோட்டம்? என்று கேட்டுக்கொண்டே என் வலைப்பூவுக்கு அனைவருக்கும் வணக்கம்!////
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ஆரம்பமே வசனப்பிழை:)))
இதில இருந்து என்ன தெரியுது, எல்லோருமே படம் மட்டும் பார்த்துப் பின்னூட்டம் போட்டிருக்கினம்:)) மீ மட்டும்தேன் ரொம்ப நல்ல பொண்ணு:)))...
அஞ்சுவும் படம்தான் பார்த்தவ, நான் கண்டனான்:))
சைனீஸ் மார்கட் எனில் சொல்லவா வெண்டும்.. ரொரண்டோ, ஒட்டாவாவில் சூப்பர் மார்கட்டுகள் இருக்கு... அதென்னமாதிரி குமித்து வைத்திருப்பார்கள்.
ReplyDeleteமுருங்கை இலை சூப்பர் ஃபிரெஷா இருக்கு.
பலாப்பழம் என்றாலே தேன், அதுக்கு தேன் வேண்டுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) உதுவும் கனடாவில் நல்லா சுவை பார்த்தோம்...
ReplyDeleteஅழகாக இருக்கு பலாச்சுளைகள்.
நல்லிரவு மகி... எங்கே ஒளிச்சிருக்கிறீங்க, கெதியா வந்து எனக்கு நன்றி சொல்லுங்கோ.... சே..சே... இதைக்கூட கேட்டுப் பெறும் நிலைக்கு ஆழா/ளாயிட்டமே தாய்க்குலமே:)))
ReplyDelete//கேட்டுப் பெறும் நிலைக்கு ஆழா/ளாயிட்டமே தாய்க்குலமே:))) // செல்லாது,செல்லாது! ஒரு ளா-தான் போடோணும்! இப்புடி எஸ்கேப் ஆனா அது கணக்கில எடுத்துக்கொள்ளப்படாது! :))))))
ReplyDeleteதட்டுங்கள்,திறக்கப்படும்! கேளுங்கள், கொடுக்கப்படும்!
நன்றி அதிரா! ஒருதரம்..
நன்றி அதிரா! ரெண்டுதரம்..
நன்றி அதிரா! மூஊஊணுதரம்!!!
//எங்கே ஒளிச்சிருக்கிறீங்க// பரவால்லையே,கரெக்ட்டான"ளி"போட்டுட்டீங்க? இல்லைன்னா ஒழிச்சுக் கட்டிருவீங்களே எப்பவும்? ஹிஹி!...
நான் எங்கயும் ஒளியலை அதிரா! இங்கயேதான் இருக்கேன். நீங்கதானே அப்பவே சொன்னீங்க? கரெக்ட்டா 12 மணிக்கு உறங்கப் போவதாக? அதான் வலைப்பூக்களை விட்டுட்டு வேற இடத்தில இருந்தேன்! ;)
எல்லாப் பலாப்பழங்களும் இனிப்பாகவே இருக்கும்னு சொல்லமுடியாதுல்ல, இனிப்புக் குறைவான பழங்களுக்கு தேன் தொட்டு சாப்புட்டு இருப்பாங்களோ? என்னோட கிட்னியை கசக்கிப் பிழிஞ்சு யோசிச்சதில் இதான் தோணுது!;) வேற காரணம் தெரியலை! :)
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ஆரம்பமே வசனப்பிழை:)))// என்ன வசனப்பிழை கண்டனீங்கள் யுவர் ஹானர்? சொற்குற்றமா..பொருள்குற்றமா? எதுன்னாலும் பட்டுன்னு சொல்லுங்க பார்ப்பம்! :)))
```
கொஞ்சம் வேலைகளை முடிச்சுக்கொண்டு வந்து எல்லாருக்கும் மீதி நன்றியச் சொல்லறேன். :)
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்களுக்குமா தெரியேல்லை.. முடியேல்லை சாமீஇ.. ஒட்டுமொத்தக் குடும்பமுமே.. ஒரு மாஆஆஆஆதிரி இருப்பாங்க போல இருக்கே:))...
ReplyDeleteஎன் வலைப்பூவுக்கு.......
அதில “வரும்” அல்லது “வருகைதரும்” என்பது மிஸ்ஸிங்:))...எங்கிட்டயேவா?:)..
நாங்க எல்லாம் ஆரு.. அவ்வ்வ்வ் அஞ்சு பார்க்கமுன் சொல்லிடுறேன்ன் யவள தபள ரமழ.......:)))
தேடிப்பிடிச்சாலும் ஜம்முனு அரசர் நன்றாகவே இருக்கிறார். கலரும் நூறு பர்ஸென்ட். ருசியையும் நீயே சொல்லிவிட்டாய். தேனும், பலாச்சுளையும் அருமையான ஜோடி. சென்னையில் ருசித்ததை திரும்ப ஞாபகப்படுத்திவிட்டாய். ராஞ்ச் மார்க்கெட்டுக்கு ஜே போடணும் போல இருக்கு. நானும் கொஞ்சம் ராஞ்ச் மார்க்கெட்டைப் பற்றி தெறிந்து கொண்டேன்
ReplyDeleteஅழகாகவும், அருமையாகவும் இருக்கு உன் பதிவு.
நாங்க எல்லாம் ஆரு.. அவ்வ்வ்வ் அஞ்சு பார்க்கமுன் சொல்லிடுறேன்ன் யவள தபள ரமழ.......:)))//
ReplyDeleteநான் பார்த்திட்டேனே:))))))
//இது யாரு தச்ச சட்ட எங்க தாத்தா தச்ச சட்ட //
இதை ஃபாஸ்டா ராஜதானி எக்ஸ்ப்ரஸ் வேகத்துல மூச்சு விடாம சொல்லணும் அது தான் பனிஷ்மன்ட்
மகி நேத்திக்கே பலாபழத்த ருசி பார்த்திட்டு போயிட்டேன். கமெண்ட் போடாததுக்கு மன்னிச்சுக்கோங்க. (அது வேற ஒண்ணும் இல்லே மூக்குல ஒரே ரத்தம் பின்னே என்ன எப்ப பார்த்தாலும் உங்க கிட்டே நோஸ் கட் வாங்குறேன் இல்லே போன பதிவு கை மேட்டர் தான்:)) அதுதான் சரி ஆனதும் வரலாமுன்னு ஹீ ஹீ ( நம்பிட்டீங்கல்லே???) .
ReplyDelete//ஓவர் எக்ஸைட் ஆவோம் இல்லையா? என்னது...இல்லையா?? //
ReplyDeleteஇல்லே இல்லே இல்லே இங்கே எனக்கு பலா பழம் என்ன பலா கொட்டை கூட கெடைக்காது அப்புறம் எங்கே இருந்து எக்சைட் ஆவுறது ஹும்ம்ம்
//எனிவேஸ்..வந்தது வந்துட்டீங்க// ஸோ பலாபழம் சாப்புடாம விட மாட்டீங்க சரி உங்க ஆசைய ஏன் கெடுக்கணும் ? அந்த 15 சுளையில் எனக்கு ஒரு பத்த தள்ளுங்க :))
//ஜஸ்ட் 10 மைல் தொலைவில் இருக்கும் ஒரு சனீஸ்// ஜஸ்ட் அஞ்சு மைல் இல் இருக்கும் சைனீஸ் உக்கு நான் இந்த எட்டு வருஷத்தில் போனது இல்லே ஒன்லி சூப்பர் மார்க்கெட் அண்ட் இந்தியன் ஷாப். இனிமே போய் பார்க்கணும்.
ReplyDelete//என்று பலநாள் திட்டமிட்டு(!) // எதையும் பிளான் பண்ணித்தான் பண்ணனும் (வடிவேலு ஸ்டைல் இல்:))
//மாம்பழம் (நறுக்குவது எப்படின்னு போனவருஷம்// அந்த அதிர்ச்சியில் இருந்து நெறைய பேரு இன்னும் மீழவே இல்லே அதை எல்லாம் எப்புடி மறக்குறது :)) தேங்காய் மேட்டர் பத்தி விட்டுடீங்களே:))
//பலாப்பழம் நறுக்கித்தர வந்த ஆளிடம் கொஞ்சம் அசடு வழிஞ்சுட்டு,// அட அட அட இத இமாஜின் பண்ணி பார்க்கும் போதே எவ்ளோ சந்தோசம் போயிங்குது தெரியுமா ????
ReplyDelete//பழங்களை அப்படியே சாப்பிடறதுதான் என் (ப)வழக்கம்// மீ டூ . தேன் கூட சாப்புட்டா ரொம்ப சுவீட்டா இருக்காதா ?
//இல்லையே, நம்ம முன்னோர்கள் ருசித்திருக்காங்க // ஆகா என்னே ஒரு கண்டு பிடிப்பு :))
//ரொம்ப பேசிப்போட்டன், 2 பலாச்சுளை சாப்டுட்டுப் போங்க! :)))// என்னாது இவ்ளோ நேரம் நீங்க பேசினத பொறுமையா படிச்ச எங்களுக்கு எல்லாம் வெறும்ம்ம்ம் ரெண்டு சுளைதானா இதை வன்ன்ன்மையா கண்டிக்குறேன் :))
////எங்கே ஒளிச்சிருக்கிறீங்க// பரவால்லையே,கரெக்ட்டான"ளி"போட்டுட்டீங்க? இல்லைன்னா ஒழிச்சுக் கட்டிருவீங்களே எப்பவும்? ஹிஹி// //
ReplyDeleteஹையோ மகி பூச இப்புடி போட்டு கன்பியுஸ் பண்ணுறீங்களே பாவம் :))
//தட்டுங்கள்,திறக்கப்படும்! கேளுங்கள், கொடுக்கப்படும்!//
நான் கேட்ட காமெரா இன்னும் வந்த பாடில்லே:))
//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்களுக்குமா தெரியேல்லை// நீங்களுக்குமா இது மட்டும் கரீக்டா (உஸ்ஸ் அப்பா கொழுத்தி போட்டாச்ச் :))
மகி... நான் இன்னிக்கு தான் உங்க வீட்டுக்கு (பேஜுக்கு) வந்து சேர்ந்தேன்... நம்ம கூகுள் அக்கா( அது ஏன் அக்கான்னு அப்புறம் சொல்லுறேன்) கிட்ட ஜாங்கிரி எப்பிடி பண்ணனும்னு கேட்டேன் அந்த அக்கா நேரா உங்க வீட்டுக்கு கொண்டாந்து விட்டுடுத்து.... என் மனைவிக்கு வாய்க்கு ருசியா ஜாங்கிரி பண்ணி கொடுக்கலாம்னு தான்... இப்போ என்ன கவனிப்பு ன்னு கேக்காதீங்க... எங்க வீட்டுல அடுத்த மாசம் ஒரு புது ஏஞ்சல் வரப்போறா... உங்க வீட்டுக்கு வந்த பிறகு தான் தெரியுது நீங்க எவ்வளவு கடினமா உழைகுறீங்கன்னு... நிஜமாவே உங்க அருண் சாரை பாரட்டனும்க... உங்களுக்கு நல்ல உதவி பண்ணுறார்(அப்பிடி என்ன பண்ணினார்னு முறைக்காதீங்க).. இந்த அளவுக்கு உங்கள என்கரேஜ் பண்ணுறதே பெரிய பெரிய உதவிங்க.... அப்புறம் உங்க எழுத்து நடை மிகவும் அருமை... சும்மா உங்க கூட நேர்ல உக்காந்து பேசினா மாதிரி இர்ந்துச்சு.... நல்ல படியா உங்க எண்ணம் ஈடேற மனமார்ந்த வாழ்த்துக்கள்.... உங்க கார்டேனிங் முறை மிகவும் அருமை... ஓகே மேடம்... ஆபிஸ் டைம் ஓவர் ....பிறகு பார்க்கலாம்... சரி அருண் வந்துட்டருன்னு நினைக்கிறேன்... போய் அவருக்கு முருகலா ஒரு தோசை வார்த்து கொடுங்க....
ReplyDelete/Siva sankar said... / படம் தெரியுதுனு சொன்னீங்க,சரி! போஸ்ட்டைப் பத்தி எதுவுமே சொல்லலியே சிவா? :)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
-------
/vanathy said... Good one. Here we can buy jack fruit in Korean store. Have to go./ வானதி,கொரியன் ஸ்டோர்ல பலாபழம் வாங்கவா போனீங்க?;) வாங்கியாச்சா? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
-------
/ramya anand said... Enga 99 ranch doesnot sell jackfruit...soooo bad..../ எங்க 99 ராஞ்ச்-னு சொல்றீங்க, உரிமையாய் போய் வாங்கிவைக்கச் சொல்லுங்க ரம்யா! ;)))
நான் பார்த்தவரை 3 இடத்திலயும் (torrance,ஆர்ட்டீஷியா,எங்க வீட்டுப் பக்கம்) பலாப்பழம் இருந்ததேங்க. உங்கூர்ல ஏன் வாங்காம இருக்காங்க?! கொரியன் ஸ்டோர் எதாச்சும் இருந்தா பாருங்க!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
-------
/Sumi said... Enaku ippo poi thoongum pothu dreamla pala pazam than varapothunu ninaikiren./ ஹாஹா! jackfruit dreams வந்ததுங்களா சுமி? :)) நான் பலவருஷம் கழிச்சு சாப்பிட்டேன், அதான் இம்பூட்டு பில்ட்-அப்பூ!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
-------
/Hema said... / ஆமாங்க ஹேமா! நல்ல இனிப்பா இருந்தது. உங்களுக்கென்ன,ஊரில நினைச்சா வாங்கி சாப்புடப்போறீங்க! ;) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
-------
/Lakshmi said... பலாப்பழம் இவ்வளவு நல்லா இருக்குமா?/ நல்லாக் கேட்டீங்க லஷ்மிம்மா! :))) கேள்விக்கான காரணத்தை அடுத்த வரில நீங்களே சொல்லிட்டீங்க!
/எனக்குமட்டும் அதன் வாசனை பிடிக்கவே இல்லே./ முதல்முதலா இப்படி ஒரு விஷயம் கேள்விப்படறேன். பழத்தை உரிக்க சிரமப்படுவாங்க,ஆனா வாசனை பிடிக்காதுன்னு இதுவரை கேள்விப்படலை! சொன்னா நம்ப மாட்டீங்க..இந்த பழத்துண்டை பில் போடறப்ப, பில்லிங் கவுன்டர்ல இருந்த சைனாக்காரர் அவருக்கு இந்த வாசனை ரொம்ம்ம்ம்பப் புடிக்கும் அப்படின்னு, க்ளியர் ராப் பண்ணிருந்த பழத்தை மோப்பம் புடிக்க ட்ரை பண்ணார்,தெரியுமா? எனக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்-னு வந்துச்சு. என்ன செய்ய? அவ்வ்வ்...
பழம் புடிக்காட்டியும், வந்து கருத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றிம்மா!
----------
/Sangeetha Nambi said... / ஆஹா,சங்கீதா, நீங்களும் தேன் கூட சாப்பிடுவீங்களா? எனி ஸ்பெஷல் ரீசன்? எல்லாரும் மண்டையப் பிச்சிக்கறோம், கொஞ்சம் வந்து சொல்லுங்களேன்! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
-------
/ஸாதிகா said... மகி பலாப்பழத்தை உருக்கின நெய்யில் தோய்த்து சாப்பிட்டுப்பாருங்க.../ அட, இது இன்னொரு காம்பினேஷனா? எங்காத்துக்காரர்ட்ட சொல்றன் ஸாதிகாக்கா! ;) நாட் மீ! ;);)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
---------
/enrenrum16 said... முன்னோட்டம்னதும் எனக்கு தூர்தர்ஷந்தான் ஞாபகம் வந்தது.... ;)../ சேம் பின்ச் பானு! எனக்கும் முன்னோட்டம்னதும் தூர்தர்ஷன், நிர்மலா ராமன், சித்ரஹார், சுரபி எல்லாம் நினைவுக்கு வந்ததுங்க! :) அதெல்லாம் மறக்க கூடிய நினைவுகளா? ஆனா பாருங்க, தூர்தர்ஷன் அறிவிப்பாளர்கள் நிறையபேர் பெயர்கள் மறந்துபோச்!
ReplyDelete/(எப்படியெல்லாம் டெம்ப்ட் பண்றாங்கப்பா :((..)... / ஹாஹா, வழக்கம் போல, ஏதோ....என்னால முடிஞ்ச உதவி! ;) இப்பூடி அலுத்துகிட்டா எப்புடி? டக்குன்னு போய் பலாப்பழம் வாங்கிவந்து சாப்புடுங்க பானு! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
----------
/அஸ்மா said... கண்ணுக்கு எட்டியும் வாய்க்கு கிடைக்காமல் இருப்பதால் மஹிக்கு வயித்த வலிக்கப் போகுது... :))) / இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதானே பழம் வாங்கி பலநாள் கழிச்சு போஸ்ட் பண்ணினேன் அஸ்மா? ;))
எங்க வீட்டில் கருப்பட்டி அவ்வளவா யூஸ் பண்ணதில்லைங்க. நீங்க ரெசிப்பி போஸ்ட் பண்ணுங்க, எப்படின்னு பார்க்கிரேன் அஸ்மா! உங்க ரெசிப்பிகள் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்,நீட்டா செய்து காட்டுவீங்க! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
--------
/கே. பி. ஜனா... said... /வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஜனா சார்!
---------
/angelin said... இங்கே அந்த கடைக்கு வெளியே சேர் போட்டிருப்பாங்க அங்கே உக்காந்து ஐஸ் க்ரீம் சாப்பிடுவேன். சாப்பிட்டு முடியுமுன் என் கணவர் உள்ளே போய் பொருள் வாங்கிட்டு வருவார்/ அவ்வ்வ்...குடுத்து வைச்ச ஏஞ்சல் அக்கா! என்சொய்,என்சொய்!
பலாக்கொட்டை வேற சுட்டு சாப்பிட்டு இருக்கீங்களா...ஹ்ம்ம்ம்ம்! என்னது ஒரே புகை மண்டலமா இருக்கு? ச்சே,ச்சே, என் காதில இல்லைங்க..ஏஞ்சல் அக்கா வீட்டு க்ரில்ல இருந்துதான் புகை புகையா வருது! :)))))
/மகி மற்ற நேரம் தெரிவதை விட இந்த முறை எல்லா படங்களும் என்லார்ஜ் ஆகி தெரியுது .very clear / அவ்வ்வ்...நான் சொல்லவந்தது வேற...இப்பச் சரிபண்ணிட்டேன்! :)
பூஸ் ஒட்டீஈஈஈ :) சுட்ட பிஸில இங்க லேட்டா வந்திருக்காக ஏஞ்சல் அக்கா!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!
--------
/chitrasundar5 said...மகி, ஒரு வழியா பழத்தை வாங்கி சாப்டாச்சா!/ ஆச்சு,ஆச்சு சித்ராக்கா! :))
/நம் முன்னோர்கள்(!) மட்டுமில்லாம அணிலும் மரத்திலேயே நல்ல, சுவையான, பழுத்த பழமாகப் பார்த்து டேஸ்ட் பன்னிடும்./ அணில் பலாப்பழமும் சாப்பிடுமா? புது தகவல்!
என் பதிவை கவனமாகப் படிச்சு கருத்து சொல்லும் ஆட்கள்ல நீங்களும் ஒருத்தர்! =) மிக்க நன்றி சித்ராக்கா!
--------
/athira said...என் வலைப்பூவுக்கு....... அதில “வரும்” அல்லது “வருகைதரும்” என்பது மிஸ்ஸிங்:))...எங்கிட்டயேவா?:)../ ஆஹா! நிஜமாலுமே நீங்க சொல்லும்வரை நான் கவனிக்கவே இல்லை அதிரா! ஒரு flow-ல டைப் பண்ணீட்டே வந்தனா, அதுல "வரும்" என்ற வார்த்தை மனசில வந்துது, ஆனா டைப்பிங்-ல மிஸ் ஆகிருச்சு! ஹிஹிஹி!
ReplyDelete/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்களுக்குமா தெரியேல்லை.. முடியேல்லை சாமீஇ.. ஒட்டுமொத்தக் குடும்பமுமே.. ஒரு மாஆஆஆஆதிரி இருப்பாங்க போல இருக்கே:)).../ நீங்களுக்கும்!!! ஓஎம்ஜி! இது எந்த ஊர்த் தமிழ்?! ஙே...ஞே...ஙே...! :)))
அது என்ன ஒட்டுமொத்தக் குடும்பமுமே? கர்ர்ர்ர்ர்ர்ர்! குடும்பத்தில ஒரு ஆள் நல்லாத்தான் இருக்காரு, நாந்தேன் சகவாசதோஷத்தில இப்படி;)த் திரிஞ்சுகிட்டு இருக்கேன் அதிராவ்!
/யவள தபள ரமழ.......:))) / உங்கட தமிழைப்பார்த்து தமிழன்னை உச்சி (கொஞ்சம் ஓவராவே)குளிர்ந்து சளி பிடிச்சு, ஆன்டி-ஹிஸ்டமைன் போட்டுகிட்டு இருப்பதாக் கேள்வி! எதுக்கும் ஒரு எட்டு போயி நலம் விசாரிச்சுட்டு வந்துடுங்கோ! :)))
நன்றி அதிரா!
---------
/Kamatchi said.. தேனும், பலாச்சுளையும் அருமையான ஜோடி./ அடுத்தமுறை பலாப்பழம் வாங்கினா நான் சாப்பிட்டே பார்க்கணும் போலஇருக்கே காமாட்சிம்மா?! :)
வருகைக்கும், அன்பான கருத்துக்கும் மிக்க நன்றிம்மா!
-----------
/இதை ஃபாஸ்டா ராஜதானி எக்ஸ்ப்ரஸ் வேகத்துல மூச்சு விடாம சொல்லணும் அது தான் பனிஷ்மன்ட் / ஜூப்பர் பனிஷ்மென்ட்! பூஸ் துண்டைக் காணம்,துணியக் காணம்னு ஓட்டம் எடுத்து,கீழ விழுந்து, மீசையில மண்ணு ஒட்டி...அதை பிபிசி-ல ரிபீடட் டெலிகாஸ்ட் பண்ணி... :)))))))) ஏஞ்சல் அக்கா, பாத்தீங்களா இல்லையா?
------------
/En Samaiyal said...அது வேற ஒண்ணும் இல்லே மூக்குல ஒரே ரத்தம் பின்னே என்ன எப்ப பார்த்தாலும் உங்க கிட்டே நோஸ் கட் வாங்குறேன் இல்லே போன பதிவு கை மேட்டர் தான்:))/ என்ன கிரிஜா இப்பூடிச் சொல்லிட்டீங்க? நீங்க எவ்வ்வ்வ்வ்வ்வளவு அடிச்சாலும் தாங்கும் "கைப்புள்ள"ன்ற தகிரியத்தில அடிச்சு ஆடினா... எஸ்கேப் ஆகிட்டு லேட்டா வந்து இன்ஜூர்ட்-னு ரீஸன் சொல்றீங்க?! :)))))
/( நம்பிட்டீங்கல்லே???)/ ஆங்...எனக்கு சின்ன வயசிலயே ரெண்டு காதும் குத்தியாச்சு. நீங்க ட்ரை பண்ணவேணாம்!
/இன்னும் மீழவே இல்லே/ஸ்ஸ்ஸ்..ஸப்பா! இந்த ள/ ழ பிரச்சனை தீரவே தீராது போலிருக்கே..கிரிஜா, தப்பா எழுதறவங்களுக்கெல்லாம் இம்போஷிஷன் குடுத்துருவமா? ;)
/சந்தோசம் போயிங்குது தெரியுமா ????/ என்னாது?! சந்தோஷம் போயிங்-ஆ? ஜெட், கிங்க்ஃபிஷர்லாம் இல்லீங்களா கிரிசா? எல்லா சந்தோஷத்தையும் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் ப்ளைட்ல ஏத்தி இங்ஙன அனுப்பிச்சு விடுங்க,சரியா? ;))))))
/இதை வன்ன்ன்மையா கண்டிக்குறேன் :)) / நீங்க வன்மையா கடிக்காதவரை ;) ஐ டோன்ட் ஹேவ் நோ ப்ராப்ளேஏஏஏஏம்! நல்லா கண்டியுங்கோஓஓஓ! :)
/நான் கேட்ட காமெரா இன்னும் வந்த பாடில்லே:)) / சிப்பு சிப்பா வரது கிரிசா! எது கிடைக்கும்னு தெரிஞ்சு பூஸு கேக்கிறாங்க, கிடைக்குது! நீங்களும் அது மாதிரி எதுனா;) கேட்டா பரவால்ல..SLR கேமரால்லாம் கேட்டா? ;)))))) கிடைக்கும்,கிடைக்கும், வெயிட் பண்ணுங்கோ கொஞ்சம் டிகேட்! :)))
/உஸ்ஸ் அப்பா கொழுத்தி போட்டாச்ச் :)/ கர்ர்ர்ர்ர்..மீள, கொளுத்தி...ஒரு ஒன் மில்லியன் டைம் எழுதுங்க கிரி!
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கைப்புள்ள --கிரிஜா!
-----
/Jeya said...நான் இன்னிக்கு தான் உங்க வீட்டுக்கு (பேஜுக்கு) வந்து சேர்ந்தேன்/ ஜெயா-ன்னு பேரைப் பார்த்ததும் இன்னொரு தோழி வந்திருக்காங்கன்னு நினைச்சேன்! ஆனா, ப்ரொஃபைலைப் பார்த்தா..தோழி இல்லை,தோழர்! :) நல்வரவுங்க தோழர்! :))
ReplyDelete/அந்த அக்கா நேரா உங்க வீட்டுக்கு கொண்டாந்து விட்டுடுத்து/ கூகுள் அக்கா வாழ்க! :)
/எங்க வீட்டுல அடுத்த மாசம் ஒரு புது ஏஞ்சல் வரப்போறா./ ஆஹா,வாழ்த்துக்கள்! எனக்கென்னமோ ஜாங்கிரி கேட்டது உங்க மனைவி இல்லை, உங்க ஏஞ்சல்தான்னு டவுட்டா இருக்குங்க. இண்டியன் ஸ்டோர் எதாவது தேடிப் புடிச்சு ஜாங்கிரி வாங்கிக் குடுங்க சீக்கிரமா!
/நிஜமாவே உங்க அருண் சாரை பாரட்டனும்க../ நன்றி,நன்றி! கட்டாயம் அவர்கிட்ட சொல்லிடறேன்!
/இந்த அளவுக்கு உங்கள என்கரேஜ் பண்ணுறதே../ அது மட்டும் இல்லைங்க..அவர் இன்னும் பெரிய பெரிய உதவியும் செய்வாருங்க! ஹி டிஸர்வ்ஸ் இட்! :) ரொம்ப நன்றி!
/உங்க கூட நேர்ல உக்காந்து பேசினா மாதிரி/ அப்படியா, ரொம்ப சந்தோஷம்ங்க ஜெயா!
/ஆபிஸ் டைம் ஓவர் ....பிறகு பார்க்கலாம்../ என்னது!!!?! ஆஃபீஸ் டைம்ல வேலை பார்க்காம, ஜாங்கிரி தேடினீங்களா?? அவ்வ்வ்....சரி,சரி, நான் எதுவுமே கேக்கலீங்க! ;)
/அருண் வந்துட்டருன்னு நினைக்கிறேன்... போய் அவருக்கு முருகலா ஒரு தோசை வார்த்து கொடுங்க.../ ஹாஹாஹா! வெகுநாள் பழகின நண்பர் போல நல்லாப் பேசறீங்க! இன்னிக்கு எங்க வீட்டில தோசை இல்ல, ஆப்பம்! :)
முதல் வருகைக்கும், விரிவான கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஜெயா! உங்க மனைவிக்கு என் அன்பான விசாரிப்புகள். உங்களோட ரெண்டு தேவதைகளையும் பத்திரமாப் பாத்துக்குங்க!
mahi kalakareenga... palapazham avlo fresh a nalla iruku... so tempting... aduku mela samosa post munnadi... eda vidarthu eda sapadrathu nu theriyala... cool posts!!
ReplyDeleteநான் ஏன் கூகுளை "அக்கா" ன்னு கூபிட்டேன்னு இந்த படத்த பார்த்து தெரிஞ்சுக்கோங்க...
ReplyDelete_ https://www.facebook.com/photo.php?fbid=367183006675165&set=a.353135251413274.81116.353131874746945&type=1&theater
பலாச்சுளைகளை பார்த்ததும் நாவுறுதே....
ReplyDelete/Vidhya said... / வித்யா, பலாபழம் கரெக்டா கட் பண்ணின உடனே வாங்கிட்டு வந்துட்டோம்ல, அதான் அவ்ளோ ப்ரெஷ்ஷா இருக்குங்க! :)
ReplyDeleteசமோசா,பலாப்பழம் ரெண்டையுமே சாப்பிடுங்க வித்யா,எதையும் விடவேண்டாம்! :P
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
----------
/Jey said... / ஒண்ணும் சொல்லறதுக்கில்லைங்க! இந்த ஜோக்கை எழுதியதே ஆண்கள்தான் எனும்போது தாய்க்குலமெல்லாம் என்ன செய்ய? லைட்டா சிரிச்சுட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்! ;)
--------
/S.Menaga said.../ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா!
நீங்க மார்க்கெட் போய் பொருட்கள் வாங்கி வந்த அழகே தனி,அதில் வேறு பலாப்பழத்தை ஸ்டெப் பை ஸ்டெப் போட்டு பார்வையிலே இனிப்பை உணர வச்சிட்டீங்க.ஆமாம்,மீனையும் வாங்கின மாதிரி முதல் படத்தில் தெரியுது.! ;)..
ReplyDeleteஇங்கு பலாச் சுளையை கட் செய்து ட்ரேயில் கிளிங்கான் கவர் செய்து சூப்பராக இருக்கும்,ஆனால் உங்க பலாப்பழ நிறம் இங்குள்ள் பழத்தில் இல்லை.பழம்னால் பார்த்தாலே சாப்பிட ஆசை வரணும்.சூப்பரப்பூ!வரிசையாக ரெசிப்பியை போடுங்க.வெயிட்டிங்..