அதனால் இந்த முறை கொஞ்சம் வேறுமாதிரியாக ரெசிப்பியை இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன், ஒரு வழியாக நான் எதிர்பார்த்த மாதிரியான "ரஸகுல்லா" கிடைச்சுருச்சு! இனி அடுத்தமுறை கலரெல்லாம் போட்டு, விதவிதமான ஷேப்லயும் செய்துரலாம் என்ற கான்ஃபிடன்ஸ் வந்துருச்சுங்க! ;)
தேவையான பொருட்கள்
பால்- 2 1/2 கப் ( ~~ 3/4லிட்டர்)
எலுமிச்சம் பழம்-1
மைதா மாவு-1டீஸ்பூன்
சர்க்கரை -1கப்
தண்ணீர்-3/4கப்
ரோஸ் எஸ்ஸன்ஸ் -சில துளிகள்
செய்முறை
எலுமிச்சையை சாறு பிழிந்து வைக்கவும். [பழம் பெரியதாக இருந்தால் ஒரு மூடியே போதுமானது]
1.வாயகன்ற பாத்திரத்தில் பாலைக் காய்ச்சவும்.
2. பால் நன்றாகப் பொங்கிவந்ததும் அடுப்பைக் குறைத்து எலுமிச்சை சாறை ஊற்றி கலக்கவும்.
3.பால் திரிந்ததும் எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் ஊற்றி வடிகட்டவும். [வடித்த நீரை கீழே கொட்டாம பத்திரமா எடுத்து வைச்சுக்குங்க. சப்பாத்திக்கு மாவு பிசைகையில் இந்த whey water ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி ஸாஃப்ட் & டேஸ்ட்டியாக வரும்]
4.வடிகட்டிய பனீரை குளிர்ந்த நீரில் 2-3 முறைகள் அலசிவிட்டு தண்ணீரை சுத்தமாகப் பிழியவும்.5. வெள்ளைத் துணியில் இருக்கும் பனீரை சிறு மூட்டையாக கட்டி ஒரு மணி நேரம் வைக்கவும். அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வடியும்படி இருக்கட்டும்.
6.தண்ணீர் சுத்தமாக வடிந்ததும் பனீரை எடுத்து ஒரு டீஸ்பூன் மைதா சேர்த்து சப்பாத்தி மாவு போல நன்றாகப் பிசையவும்.7.பிசைந்த மாவை விருப்பமான வடிவில் உருட்டி வைக்கவும். (உருண்டைகள் விரிசல் விழாமல் ஸ்மூத்தாக இருக்கவேண்டும்)
8.குக்கரில் 4கப் தண்ணீரை கொதிக்கவிட்டு (சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை, வெறும் தண்ணீரே போதுமானது) பனீர் உருண்டைகளைப் போட்டு ஒரு விசில் விடவும்.
9.குக்கரில் ப்ரெஷ்ஷர் அடங்கியதும் திறந்து சிறிது நேரம் ஆறவைக்கவும். பனீர் உருண்டைகள் வெந்து இருமடங்காக உப்பியிருக்கும்.
10.ஆறிய உருண்டைகளை எடுத்து அதிகப்படி தண்ணீரை பிழிந்துவிட்டு வைக்கவும்.
11.ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை + 3/4கப் தண்ணீர் ஊற்றி கரையவிடவும்.12.சர்க்கரைப் பாகு கொதிக்க ஆரம்பித்ததும் சரியாக 6 நிமிடங்களில் பாகு பிசுபிசுவென்று கையில் ஒட்டும் பதம் வந்துவிடும். அப்பொழுது தீயை சுத்தமாகக் குறைத்துவிட்டு ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.
13.தண்ணீரில்லாமல் எடுத்து வைத்த பனீர் உருண்டைகளை பாகில் சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.
14.ரஸகுல்லா பாகை உறிஞ்சி ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
15.அடுப்பிலிருந்து இறக்கிய ரஸகுல்லாவை ஆறவிட்டு ருசிக்க வேண்டியதுதான்!
Recipe Inspiration from HERE





















