இன்றைய உலகில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை விட இடையிடையே வரும் விளம்பரங்கள்..ஓஹ்..மாற்றிச் சொல்கிறேன் என்று நினைக்கிறேன்! ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு இடையிடையேதான் நாம் மற்ற நிகழ்ச்சிகளையே பார்த்து வருகிறோம், கரெக்ட்டுங்களா? :)))))))
அவற்றில் ஒரு சில விளம்பரங்கள் சிரிப்பு மூட்டும், ஒரு சில விளம்பரங்கள் முகம் சுளிக்க வைக்கும்..சிலது எரிச்சலை மூட்டும்..சிலது அப்பொழுதே சேனலை மாற்றவைக்கும் அளவுக்கு சோகமாய்/பயமுறுத்துவதாய் இருக்கும். அப்படியான விளம்பரங்களில் சிலதை நீங்களும் பார்க்கணுமே....
ஹலோ,ஹலோ..நில்லுங்க,நில்லுங்க! சொல்லாமக் கொள்ளாம ஓடுனா எப்புடி,நம்ம என்ன அப்படியா பழகிருக்கோம்?? ஒரு ரெண்டு நிமிஷம் நின்னு பார்த்துட்டுப் போங்க! ;))))
******
இந்த விளம்பரம் "Chase" பேங்கினுடையது..சமீபத்தில் நடந்த கையால பந்துவீசிட்டு அதையக் கால்பந்துன்னு சொல்லிக்கிற(!!) "Super Bowl"சமயத்தில் வெளியானது. பையன் பந்தை உதைக்க, அது அக்கம் பக்கத்து வீடுகளில் கண்ணாடிகளை, காரை உடைக்கிறதாம்..உடனே அப்பா சேஸ் இன்ஸ்டன்ட் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் ஒவ்வொருத்தருக்கும் $200 டாலர் இன்ஸ்டன்ட்டா அனுப்பிருவாராம்! $200 டாலர் இன்ஸ்டன்ட் ட்ரான்ஸ்ஃபர்..அதுவும் 2-3 பேருக்கு! கொஞ்சம் ஓஓஓஓஓஓவரா இல்ல?? :))))))
இதைப் பார்த்தபொழுது எனக்கு ஒரு நம்மூர் விளம்பரம் நினைவு வந்தது. தாத்தாவும் பேரனும் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடி கண்ணாடிகள் உடையும். பேரன் உடைக்கையில் அவன் அம்மா வர, தாத்தா பேரனிடம் இருந்து பேட்டைப் பிடுங்கிட்டு "நான் தான் பேட் செய்தேன்" என்று சொல்லுவார். மருமகளும் பேசாமல் போய்விடுவார். அடுத்து தாத்தா பேட்டிங்கில் ஜன்னல் கண்ணாடி உடைய..பாட்டியிடம் தான் உடைத்ததாக பேரன் சொல்லிவிடுவான். உடைந்தது கண்ணாடியாய் இருந்தாலும் உடையாதது பாசப்பிணப்புன்னு சொல்வது போல இருக்கும் அந்த விளம்பரம்.:)
*********
இந்த விளம்பரத்தைப் பார்த்தாலே எரிச்சலாய் இருக்கும், உடனே சேனலை மாத்திடுவேன். இப்பக்கூட இதை ப்ளாக்ல போடணுமான்னு ரெம்ப திங்க் பண்ணித்தான் போட்டிருக்கேன்! ;) :)
மெத்தை விளம்பரத்துக்கு இப்படியுமா விளம்பரம் செய்வாங்க?? இந்த மாதிரி க்ரேஸி ஐடியாவெல்லாம் எப்படித்தான் இவங்களுக்குக் கிடைக்குமோ?? இந்த விளம்பரம்னு இல்ல, இந்த "Sit n Sleep"ன் எல்லா விளம்பரங்களுமே கொஞ்சம் இப்படித்தான் இருக்கும்!
:-} :-}
***************
இது JCPenny-கடையின் விளம்பரம். சமீபத்தில் அங்கு எல்லாப் பொருட்களுக்கும் கொள்முதல் விலைக்கு கொஞ்சமே கொஞ்சம் லாபம் வைத்து விற்பனை ஆரம்பித்தாங்க. அப்ப வந்தது இது!
மற்ற துணிக்கடைகளில் பலபேர்களைச் சொல்லி ஏமாத்தறாங்களாம்..JCPenny-ல Fair & Square-ஆம்!! இவர்களிடம் இதே சீரிஸ்ல இன்னும் பல போரடிக்கும் விளம்பரங்கள் உண்டு!
ராஜ்மஹால் பட்டுப்புடவைகளுக்குன்னு ஒரு விளம்பரம் வருமே..அதிலே ஒரு காதலி தன் காதலன் பெற்றோர்களை விதவிதமான அழகழகான பட்டுச் சேலைகளை உடுத்திப்போயே திருமணத்துக்குச் சம்மதம் வாங்குவாள். ஆனா இவிங்க எடுக்கற விளம்பரங்கள் பாத்தம்னா கடைக்குப்போகணும்னே தோணாதுங்க..விளம்பரம் முடியறதுக்குள்ள நாமளும் தூங்கிருவம்ல?? அப்புறம் எப்படிக் கடைக்குப் போக??! :)))))))
***********
ப்ரோக்ரெஸோ சூப்பின் விளம்பரங்கள் ஓரளவு சிரிக்க வைப்பது மாதிரி பரவாயில்லாமல் இருக்கும். இந்த விளம்பரம் உலகில் உள்ள ஆல் ரங்கமணிகளைக் குறிவைத்து எடுக்கப்பட்டது! ஒரு உண்மையை காமெடியாச் சொல்லியிருப்பாங்க. என்னதான் சொல்லுங்க..பெண்கள் மனசை ஆண்களுக்குப் புரிய வைப்பது பெரும்பாடு,சரிதானே?? ஹாஹாஹா!!
*********அடுத்து வரும் விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம். cat food-க்கான விளம்பரத்துடன் ஒரு அழகான காதல் கதையைச் சொல்லியிருப்பாங்க..நீங்களும் பாருங்களேன்!
காதலி காதலனை அறிமுகப்படுத்த அவள் அம்மா வீட்டுக்கு கூட்டிப்போவாள். அங்கே இருக்கும் பூஸாரை விட்டுவிட்டு வர மனசே இல்லாமல் வருவாள். (இந்த ஊர்ல அப்பா-அம்மா தனியே பிள்ளைகள் தனியே இருப்பதுதான் வழக்கம்! ) காதலிக்குப் பூனைக்குட்டி பிடிக்கும் என்பதைக் கவனித்த காதலன் பூனைக்குட்டியை வாங்கி திருமணத்துக்குப் propose செய்வதுதான் இந்த விளம்பரம்.
காதலி வீட்டுக்கு முதல் முதல் போவதில் இருந்து ப்ரபோஸ் செய்து, கல்யாணம் முடிவுசெய்து, கலியாணம் செய்து, ஹனிமூன் ப்ளான் செய்வது வரை தொடர்ச்சியாக விளம்பரங்கள் இருக்குது. நேரமிருந்தா யு ட்யூப் போய் Fancy Feast adds என்று தேடிப்பார்த்து ரசியுங்கோ! :)))))
நன்றி வணக்கம்!