
~~~
கேபிள் டிவி இணைப்புக்கு போட்டியாக இருக்கும் Direct TV நிறுவனத்தின் விளம்பரம் இது. "ஈறை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி..." என்று ஒரு பழமொழி சொல்வாங்களே, அது போல! தலை முடியை விற்காதீங்க, டைரக்ட் டிவிக்கு மாறுங்க-ன்னு முடிப்பாங்க! :))))~~~
"அதிர்ஷடம் அடிக்கும்" என்று சொல்வோம் இல்லையா? இதை கலிஃபோர்னியா லாட்டரிகாரங்க ஒரு விளம்பரமாகவே எடுத்துட்டாங்க. முதல் முறை பார்த்து நான் கொஞ்சம் அசந்தே(!) போயிட்டேன்!சிலநாட்களில் ஏதாவது சர்ச்சை வந்ததோ என்னவோ, இப்ப லேடி லக், அடிப்பதற்கு பதிலாக அழகா, உஃப்ப்ப்-னு ஊதி அதிர்ஷடத்தைக் குடுத்துட்டுப் போவது மாதிரி விளம்பரத்தை மாத்திட்டாங்க! :)
~~~
செல்லப் பிராணிகளுக்கு எடுக்கவேண்டிய இன்ஷ்யூரன்ஸ் பற்றிய விளம்பரம் அடுத்து வருவது. செல்லங்களும் நம் குடும்பத்தில் ஒரு அங்கம் என்று அழகாகக் காட்டுவார்கள்.குறிப்பாக, அந்த தண்ணீர் குடிக்கும் நாயின் கண்களில் தெரியும் அன்பும், குட்டிப்பெண் புல் டாகுக்கு முத்தம் தரும் காட்சியும் ச்ச்ச்ச்சோ ச்வீஈஈட்! :)
~~~
எல்லா நாடுகளிலும் பூனைகள்(!) சிக்கினும் ஃபிஷ் ப்ரையும் தான் கேட்பார்கள் போலிருக்குது! மியாவ், மியாவ், மியாவ்-ஐ ஆண், பெண் குரல்களில் சொல்லி, பூனைகளின் விருப்பத்தை அழகாக் காட்டறாங்க! அவ்வ்வ்வ்....வ்வ்..கடேசியா வந்து சாப்பிடும் பூஸ் ஒரே வாயிலே எவ்வ்வ்வ்வ்வ்வளவு உணவை கபக்குன்னு கவ்வுது :) என்று காணத் தவறாதீர்! ;)
~~~
இந்த டென்டாஸ்டிக்ஸ் விளம்பரம் முதல் முறை பார்த்தப்ப கொஞ்சம் ஒருமாதிரியா இருந்தது. டெக்னாலஜியை வைச்சு என்னவெல்லாம் பண்ணறாங்க!!~~~
நாலுகால் ஆட்களின் விளம்பரம் நிறையப் பாத்தாச்சு! கடைசியாக மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே -வை டார்கெட் பண்ணி வந்திருக்கும் செல்ஃபோன் விளம்பரங்களோட முடிச்சுடறேன், டென்ஷன் ஆகாதீங்க! :)வெளிநாடுகளில் குழந்தைகள் கல்லூரியில் சேரும் காலங்களிலேயே குடும்பத்தைப் பிரிந்து தனியே வசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படி தனிக்குடித்தனம் போகும் ஒரு மகளும் தாயும் இந்த விளம்பரத்தில் பிழியப் பிழிய அழுது, ஃபோன் வாங்குவாங்க! அதே ஃபோன், ஆனால் ஒரு அப்பாவும் மகனும் வாங்கும்போது, எப்படி வாங்கறாங்கன்னு பாருங்க..
அதாவது, பெண்களுக்கிடையில் உணர்ச்சிப் பிரவாகமெடுக்கும் அன்பு ஆண்களுக்கிடையில் அவ்வளவு வெளிப்படையாகத் தெரிவதில்லையாம். :) எப்படின்னாலும் அன்பு என்ற ஒன்று இருந்தாச் சரி..என்ன நாஞ் சொல்றது?! ;) ;)
~~~
விளம்பர இடைவேளை முடிந்து நிகழ்ச்சி தொடர்கிறது. சுவையான சமையல் குறிப்புகள் பகுதியில் அடுத்து வருவது பலாக்கொட்டை பிரட்டல்...க...றி.. $@#3...*&#!~...%^5+)....@@@@....######....._+_+#$%*******........